என் மலர்tooltip icon

    மதுரை

    • உசிலம்பட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம் நடந்தது.
    • இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் திருலோகநாதன், உசிலம்பட்டி நகர தலைவர் பெரியமாயதேவர், நகர செயலாளர் சுருளி, ஏழுமலை ரத்தினம், சேடப்பட்டி ஒன்றியம் மகளிரணி முத்துலட்சுமி, கல்லுப்பட்டி ஒன்றியம் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதிவாணன், மாயன், மலைச்சாமி, அன்பு, ரவி, முத்துமணி, சுருளிவேல், வினோத், பிரதாப், சித்தன், பாலமுருகன், கலைசெல்வன், தங்கபாண்டியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
    • 115 தம்பதியினர் பயனடைந்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார் பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் உள்ள சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. முகாமில் தொடர்ச்சியாக கரு சிதைவால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ள வர்கள், விந்தணு குறை பாடு உள்ளவர்கள், கர்ப் பப்பையில் நீர்க்கட்டி உள்ள வர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோத னைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. மேலும் ஆண், பெண்களுக்கான குழந்தையின்மை பிரச்சி னைகள், கர்ப்பப்பை சம்பந் தமான பிரச்சினைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல்,

    ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைக ளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதில் 115 தம்பதிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

    உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் சகுந்தலா கட்ட பொம்மன், உசிலம்பட்டி நாட்டாத்தி நாடார் உற வின்முறை தலைவர் எஸ்.எம்.எஸ்.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, செயற்கை கருத்த ரித்தல் கிசிச்சைப்பிரிவு மேலாளர் ஏ.பி.ஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவ லர்கள் சலீம், சேக் பரீத், தீபன் மற்றும் கார்த்திக் ஆகி யோர் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    • நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை விக்கிரமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி விக்கிரமங் கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி செக்கான் கோவில்பட்டி, கீழப்பெரு மாள்பட்டி, அய்யம்பட்டி. சக்கரப்பநாயக்கனூர், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம். மணல்பட்டி, அரச மரத்துப்பட்டி, கல்புளிச் சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம் பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் ஆகிய பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவ குடி, வின்னக்குடி, வாலாந் தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலி யங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பணம்பட்டி மற் றும் அதனைச் சார்ந்த பகுதி களில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
    • கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு முதியோர் பணம், பட்டா, குடும்ப அட்டை மற்றும் பிரச்சினை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள்.

    இந்த மனு மீது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை கலெக்டர் நேரில் அழைத்து பேசி உடனடியாக தகுதியு டைய மனுக்களுக்கு நட வடிக்கைகள் எடுக்க வலி யுறுத்துவார்.இதன் காரணமாக திங்கட்கிழமை களில் கலெக்டர் அலுவல கத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கலைஞர் உரிமை தொகை வழங்கிட ஆணை பிறப்பித்து அதை நிறை வேற்றும் வகையில் ஒவ்வொரு குடும்ப தலைவி களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப் பட்டது.

    இந்த உரிமை தொகை கிடைக்காத நபர்கள் தங்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் மேல்முறையீடு மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்திருந்தனர். இதில் பெரும்பாலும் உரிமை தொகை தொடர்பான மனுக்களாக இருந்தது. மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    • ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை நகரில் அமைந்து ள்ள ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோயம் புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கார ணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் காணப்படும்.

    விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். முக்கியத்துவம் வாய்ந்த ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக பஸ் நிலையத்தில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. பஸ்நிலையத்திற்குள் உள்ள கழிவறைகளும் போதிய சுகாதாரமின்றி இருப்பதால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும்போது ஆரப்பாளையம் பஸ் நிலையத்தின் நிலை மேலும் மோசமாகி விடுகிறது.

    குறிப்பாக பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் குளம்போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி யடைகின்றனர். மேலும் பஸ் நிலையப்பகுதிகளில் உள்ள கடைகளும் சுகாதா ரமின்றி உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி பஸ் நிலையத்தை தூய்மை யாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர். அவர்கள் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். ரெயில் மதுரைக்கு வந்தபோது மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மேயர் இந்திராணி, மாநில பா.ஜ.க. பொதுச் செய லாளர் ராமசீனிவாசன், பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சுப்பாநாகுலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை பாலமுருகன், ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஓம்சக்தி தனலட்சுமி, தமிழிசை சவுந்தரராஜன் நற்பணி இயக்க நிர்வாகிகள் நாச்சியப்பன், கருப்பையா, ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக பா.ஜ.க. வினர் ரெயிலில் பயணம் செய்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    • ராதாகிருஷ்ணா திருக்கல்யாணம் நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் 8-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரகாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 2 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் இதைத் தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது. 2-ம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனை பெண்கள் சீர் எடுத்து வந்தனர். ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்று ஆஞ்சநேய உற்சவம் மங்கள ஆராத்தி நடைபெற்றது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், லயன்ஸ் கிளப் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ண பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதுரை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, பாப்புரெட்டி நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அறக்கட்டளை தலைவர் லதா வரவேற்றார். இந்த முகாமில் அ.தி.மு.க பேரூர் செயலாளர் அசோக்குமார், கவுன்சிலர் சூர்யா, காந்திதாஸ், பாபு, ஆட்டோ சேகர், முருகன் உள்படபலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கோவை சங்கரா கண் மருத்து வமனை டாக்டர் சுவாதி தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முடிவில் மன்ற தலைவர் கராத்தே சிவா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கராத்தே கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மேலூர் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் பங்கேற்றது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மே லூர் அருகே உள்ள பெரிய சூரக்குண்டு சின்ன டக்கி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சூரக்குண்டு விலக்கில் இருந்து அழகர் கோவில் ரோட்டில் போட்டி நடந்தது. பெரிய மாட்டு வண்டி வண்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளாய் 3 பந்தயங்கள் நடை பெற்றது.

    மொத்தம் 38 வண்டிகள் பங்கேற்ற இப்போட்டியில் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் பங்கேற்றது. இதில் முதல் பரிசை இளங்கிப்பட்டி ஆண்டி அர்ச்சுனன் வண்டி யும், 2-வது பரிசை சூரக்குண்டு அருணாச்சலம் வண்டியும், 3-வது பரிசை சின்னமங்கலம் அழகு வண்டியும், 4-வது பரிசை புதுப்பட்டி சின்னச்சாமி வண்டியும் வென்றது.

    சிறிய மாட்டு வண்டி பந்தயங்கள் 2 பிரிவுகளாக நடைபெற்றது. இது முதலில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை அனு மந்தன்பட்டி பிரவீன் குமார் வண்டியும், 2-ம் பரிசினை சாத்தமங்கலம் சர்ஜீத் பாண்டியராஜன் வண்டியும், 3-வது பரிசை சூரக்குண்டு அழகுபாண்டி வண்டியும் வென்றது.

    அதனை தொடர்ந்து மற்றொரு சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இதில் முதல் பரிசினை அவனியாபுரம் முருகன் வண்டியும், 2-வது பரிசினை பாலுத்து சின்ன சாமி வண்டியும், 3-வது பரிசினை அய்யம பாளையம் வாடிப்பட்டி தங்கராஜன் வண்டியும், 4-ம் பரிசினை அய்யம பாளையம் காமாட்சி அம்மன் வண்டி வென்றது.

    • ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையிலும் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.

    இதேபோல் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனீஸ்வர பகவான் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகா விஷ்ணுவிற்கு பால், தயிர் உள்பட 12 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    • எம்பிராயிடிங்கில் பல்வேறு வடிவங்களில் இதயத்தை வரைந்து பெண்கள் சாதனை படைத்தனர்.
    • ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிர மணியன் செய்திருந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நோபிள் உலக சாதனை புத்தகம் சார்பில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்பிராயிடிங்கில் இதயத்தை வரைந்து அதன் நடுப்பகுதியில் பல்வேறு விதமான டிசைன்களை எம்பிராய்டிங் செய்து உலக சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் மதுரை, திருமங்க லம், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த 10 வயது முதல் 60 வயது வரையிலான 100 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு போட்டி நேரமாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு 'ஆரி வொர்க்' மூலமாக இதயம் வரைந்து மற்றும் அதன் நடுவே பல்வேறு வடிவங்களில் வரைய வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.

    அதில் இதயம் தொடர் பாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்ற விதிமுறை யில் உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.39 மணிக்கு போட்டி தொடங்கி யது. நடுவர்களாக டாக்டர் அரவிந்த், ஹேமநாத் இருந்து சாதனை நிகழ்ச்சியை நடத்தினர். அறிவிக்கப்பட்ட 1 மணி நேரத்திற்குள் அனைத்து போட்டியாளர்க ளும் உலக சாதனை நிகழ்ச்சியை நிறைவு செய்த னர். இவர்களில் முதல் 10 இடம் பெற்ற பெண்களுக்கு சிறப்பு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட 100 பெண்களும் முதல்முறை யாக உலகசாதனை நிகழ்ச் சியை 1 மணி நேரத்திற்குள் முடித்ததால் இவர்கள் அனைவரின் சாதனையும் நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

    வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப் பட்டது. போட்டி ஏற்பாடு களை சிற்பி ஆரி எம்பிரா யிடிங் தலைவர் ராஜ ராஜேஸ்வரி, ஒருங்கி ணைப்பாளர் பாலசுப்பிர மணியன் செய்திருந்தனர்.

    • மதுரையில் ‘ஹாப்பி ஸ்டீரிட்’ கொண்டாட்டம் நடந்தது.
    • பெண்கள் மயங்கி விழுந்ததால் இடையில் நிறுத்தப்பட்டது.



    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களின் ஒரு பகுதி.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் இன்று 'ஹாப்பி ஸ்டீரிட்' விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக நடிகர் சூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வாவ் மதுரை லோகோவை அமைச்சர்கள் வெளியிட்டனர். இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். அண்ணாநகர் சுகுனா ஸ்டோர் பகுதியில் இருந்து மேலமடை சந்திப்பு வரை உள்ள சாலை முழுவதும் இளம்பெண்கள், சிறுவர்-சிறுமிகள், வாலிபர்கள் திரண்டிருந்தனர்.

    ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம், வேடிக்கை விளையாட்டு கள் என நிகழ்ச்சி களை கட்டியது. பலர் தொடர்ந்து உற்சாக கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். குறுகலான சாலையில் ஆயிரக்க ணக்கானோர் திரண்டதால் நெரிசல் அதிகமாக இருந்தது. சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு மக்கள் குவிந்தி ருந்தனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாலும், நெரிசலில் சிக்கியும் சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை யோரம் அவர்களை அமர வைத்து தண்ணீர், பழச்சாறு கொடுத்து ஆறுதல் படுத்தினர்.

    அடுத்தடுத்து பல பெண்கள் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி இடையிேலயே நிறுத்தி வைக்கப்பட்டது.

    ×