என் மலர்
மதுரை
- கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது.
மேலூர்:
இச்சைக்கும், ஆசைக்கும் இணங்க வற்புறுத்தி எத்தனையோ இளம்பெண்கள், சிறுமிகளின் வாழ்வை தொலைத்து வீதியில் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறினாலும், தடுத்த பாடில்லை. அதிலும் சமீப காலமாக சிறுமிகள் அதிகம் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ளது.
சரியான வழிகாட்டுதல், புரிதலின்றி இனக்கவர்ச்சியாலும், நீயின்றி நான் இல்லை... என்று கூறும் பசப்பு வார்த்தைகளாலும் ஈர்க்கப்படும் பள்ளி பருவக்குழந்தைகளும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அப்படியொரு சம்பவம் மதுரை அருகேயும் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காசாளராக வேலைக்கு சேர்ந்தார். பெற்றோருக்கு அவரது வருவாய் உதவிகரமாக இருந்த நிலையில், மகளின் எதிர்கால திருமண தேவைக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
இதற்கிடையே திருவாதவூரை அடுத்த வெள்ளமுத்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). தண்ணீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், ஓட்டலுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது அவரது பார்வை 16 வயது சிறுமியின் மீது விழுந்தது.
மெதுவாக பேச்சுக்கொடுத்து தன்பால் ஈர்த்த ராஜ்குமார், சிறுமியிடம் இந்த வேலை உனக்கு வேண்டாம், நான் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். அதனை நம்பிய சிறுமியும் ராஜ்குமார் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எண்ண தொடங்கினார்.
சாவி கொடுத்த பொம்மையாக சிறுமியை மாற்றிய ராஜ்குமார் தனது காம இச்சைக்கு அவரை ஆளாக்க நினைத்து, வெள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். முன்னதாக நாம் கணவன், மனைவியாகி விடுவோம் என்று கூறி கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணமும் செய்துள்ளார்.
பின்னர் கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது. பின்னர் ராஜ்குமார் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஆசை வார்த்தையால் வாழ்வை தொலைத்த சிறுமி சைல்டு லைன் உதவியை நாடினார்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறையினர் சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களின் வழிகாட்டுதல்படி, மேலூர் அனைத்து மகளிர் போலீசில் இந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கொடி மலர் ஆகியோர் விசாரணை நடத்தி ராஜ்குமார் மீது திருமண சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து தலைமறைவான ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்தியையும் மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதபோல் ராணிப்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தந்தையான மோகன்தாஸ் என்பவர் வேலூரில் ஒரு இனிப்பகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
அவரிடம் ஏற்பட்ட மாற்றம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. மாஸ்டரின் மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில் சிறுமியை குறிவைத்து பாலியலுக்கு உட்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
- தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
- சேடபட்டி மு.மணிமாறன் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வழி காட்டுதலின்படி மாணவ ரணி அமைப்பாளர்களுக்கு நேர்கணால் நடைபெற்று வருகிறது.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப் பட்டி மு.மணிமாறன் தலை மையில் மாநில மாணவ ரணி இணை செயலாளர் ஜெரால்டு மற்றும் மாநில மாணவரணி துணை செய லாளர் வீரமணி, தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன் முன்னிலையில் தெற்கு மாவட்ட மாண வரணி அமைப்பாளர்களுக் கான நேர்காணல் நடை பெற்றது.
நேர்காணலின்போது மாநில விவசாய இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப் பினர் மகிழன், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ராமமூர்த்தி, ஆலம் பட்டி சண்முகம், மதன் குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பாச பிரபு உட்பட மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன் றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண் ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.
நேர்காணலுக்கு வரும் ஒவ்வொரு விண்ணப்பதா ரர்களும் வயதை சரிபார்க்க கல்விச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் கார்டு, கட்சி மாணவரணி உள் ளிட்ட ஏதாவது ஒரு அமைப்பில் பணியாற்றி இருந்தால் அதுதொடர்பான புகைப் படம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
- ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- துரைசாமிக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கல்லாவில் இருந்த பணம் 5 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள கீழக்குயில்குடி சீனிவாசா காலனி கார்மேக நகர் பகுதியில் சேர்ந்தவர் துரைசாமி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது திண்டுக்கல்- விருதுநகர் நான்குவழி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு கடை திறப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு தினங் களுக்கு முன்பு கடையை திறந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வடை கேட்டுள்ளனர். வடை போடுவதற்கு சிறிது நேரமாகும் காத்திருங்கள் என துரைசாமி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் துரைசாமியை தாக்கினர். இதில் துரைசாமிக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கல்லாவில் இருந்த பணம் 5 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சீனிவாச காலனி பகுதியை சேர்ந்த ராஜா மகன் கள் காசிநாதன் (20), நரேஷ் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
- கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம் நடந்தது.
- முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றுவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கழிவுநீர் சேகரிப்பு, தொட்டிகளிலிருந்து கழிவுநீரை எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர்ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில் நவீன முறையில் பாதுகாப்பாக கழிவுநீர்களை சுத்தம் செய்யும் முறை பற்றி தூய்மை இந்தியா திட்ட முதன்மை பயிற்றுநர் ராம்குமார், சுகாதாரபணிஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் பயிற்சியளித்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரூராட்சி செயல்அலுவலர்கள், 18 சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.
- பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மதுரை:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கே.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). இவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்து வந்துள்ளது.
கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இவரும், இவரது தந்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் அவரது தந்தைக்கு ஜாமின் கிடைத்து வெளியே சென்றார். ஆனால் அஜித்குமாருக்கு ஜாமின் கிடைக்காததால் தொடர்ந்து அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கஞ்சா பழக்கத்தற்கு அடிமையாகி இருந்ததால் அவர் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கின் வாய்தாவிற்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மாலை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இதற்கிடையே சில மாதங்களாக தனக்கு தானே பேசிக்கொள்வதுமாகவும் இருந்துள்ளார்.
இதனால் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக மனநோயாளிகள் சிகிச்சை பெறுபவர்களுக்கான தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம் போல் உணவு அருந்தி விட்டு வந்தவர் திடீரென மின்விசிறியில் துண்டை மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட சிறைக்காவலர்களும், சக கைதிகளும் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ரெயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
- நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவில் கூறியிருந்ததாவது:-
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருத்துவ செலவு சுமார் ரூ.9 லட்சத்தை காப்பீட்டுத் தொகையில் தனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழங்க வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகையை எனக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இதுவரை எனக்கு வர வேண்டிய மருத்துவ காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறன் நேரில் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு காப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டதால் காலதாமதம் ஏற்பட்டு விட்டது என தெரிவித்தார்.
அப்பொழுது நீதிபதி அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பயணி தனது டிக்கெட்டை தொலைத்து விட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போல் ஒரு நடத்துனர் தனது பயண டிக்கெட் பண்டலை தொலைத்து விட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் மருத்துவத்துறையில் ஒரு உயர் அதிகாரி ஆவணங்களை தொலைத்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இதுபோன்ற அதிகாரிகளை ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் ஏதோ தனது சொந்த பணத்தை செலவழிப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சொன்னால் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறுகின்றனர்.
எனவே ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
- சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர்.
- மீது போலீசார் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
திருவான்மியூர்:
கண்ணகிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து செழியன், தலைமைக்காவலர் சிலம்பரசன் ஆகியோர் காரப்பாக்கம் ஓடை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கள்ளச்சந்தையில் மது விற்பவர்களை விட்டுவிட்டு ரோட்டில் நின்னு குடிச்சா பிடிப்பீங்களா? என்று ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்று தலைகுப்புற விழுந்தார். அப்போது பிடிக்க முயன்ற போலீஸ்காரரின் கையை சிலம்பரசன் கடித்தார். இதையடுத்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சதீஷ் என்பது தெரிந்தது. அவர் மீது போலீசார் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது.
- நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்த ரவிட்டார்.
மதுரை
கேரள மாநிலம் கொல் லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச்செயலாளர் நாக ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கேரளா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் வாகனங் களை இயக்குகிறோம். கேர ளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள் ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்தி றன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இத னால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள் சாலைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிக ளுக்குத் தேவையான கிரா வல் ஜல்லிகற்கள், எம். சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழ்நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தையே சார்ந்துள் ளோம். தமிழ்நாட் டின் உத வியின்றி கேரளாவின் உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.
ஜிஎஸ்டி, நடைசீட்டு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனு மதியுடன் தான் தமிழ்நாட்டில் இருந்து கனிமங்கள் கேரளா விற்கு கொண்டு செல்லப்ப டுகிறது. இந்நிலையில் தென் காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை இன்ஸ்பெக்டர் மற்றும் கனிமவன அதிகாரி கள் உள்ளிட்டோர் 10 சக்க ரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனை கொண்டு செல்ல மறுக்கின்ற னர்.
கன்னியாகுமரி மாவட் டம் புளியரை களியக்கா விளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலை யார் செக்போஸ்ட்டுகளில் இந்த வாகனங்களுக்கு அனு மதி மறுக்கப்படுகிறது. புளியரை செக் போஸ்ட்டை மட்டும் நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்லாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதித்துள்ள னர்.
எனவே தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங் களில் இருந்து 10 சக்கரங்க ளுக்கு மேற்பட்ட வாகனங்க ளில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்கள் கொண்டு செல்ல அனு மதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தமிழக அர சுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவ காசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, தென் காசி புளியரை பகுதியில் 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற தமிழக அரசின் உத்த ரவிற்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தர விட்ட நீதிபதி, வழக்கு விசா ரணையை நான்கு வாரங்க ளுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
- வங்கி மேலாளர் உள்பட 2 வீடுகளில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
- அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சிந்தாமணி விநாயகர் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் சண்முக குமார் (வயது36). இவர் அப்பலம் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் பின்னர் இரவு வீடு திரும்பினார்.
இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.
இது குறித்து சண்முக குமார் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி விநாயகர் தெரு கண்ணன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (30). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்குச்சென்று திரும்பியவர் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் காலை எழுந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 இடங்களிலும் நடந்த பைக் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்கு பின் திருட்டு ஆசாமிகளை அடையாளம் தெரிந்தது. அதை தொடர்ந்து சிந்தா மணி கண்ணன் காலனியை சேர்ந்த பெரிய கருப்பு மகன் கருப்புசாமி என்ற குதிரை வண்டி (37), திருப்பதி மகன் பாலமுருகன் (26) என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா ஆண்கள் உடலில் வைக்கோல் சுற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
- 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர். இதனை வெள்ளலூர் நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுவர். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்தம்மன் கோவில் உள்ளது.
வெள்ளலூரை தலைமை இடமாகக் கொண்டு 60 கிராமங்கள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ஏழைகாத்த அம்மன் காவல் தெய்வமாய் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டு திருவிழா வெள்ள லூர் கோவில் திருவிழா நடந்தது. முன்னதாக நேர்த்திக்கடன் செலுத்தும் நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி முகத்தில் முகமூடி அணிந்து பெரிய ஏழை காத்தம்மன் கோவிலுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர். நடுத்தர வயதுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேலையை மட்டும் அணிந்து மதுக்களையம் தூக்கியும், திருமண வயதுடைய பெண்கள் சாமி சிலைகளை தூக்கி ஊர்வலம் சென்றனர். இத்திருவிழா இப்பகுதி மக்கள் நலமாக வாழவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.
மதுரை:
உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இனிமேல் உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சின்னமனூரில் உயிரிழந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும்.
மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் பாதிப்பு இருக்கும். இதை தடுப்பது தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2017-ல் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 65 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 476 மருத்துவக் குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் எந்த கடையில் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாக மாறுகிறது. எங்கே தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும் என்பதில் மாற்றம் இல்லை.
மதுரை எய்ம்ஸ் பொருத்தவரை தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள், கட்டிடத்தை பார்க்காமலேயே படிப்பை முடிக்க உள்ளனர் என்ற போதிலும் செய்தியாளர்கள் இதனை ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
- விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
மதுரை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு அரசும் , ஐ.சி.டி. அகாடமியும் இணைந்து இ-சேவை பயிற்சி 11 நாட்களுக்கு நடத்தப் பட்டது. இதில் தினமும் 60 நபர்கள் வீதம் 11 நாட்களுக்கு 660 நபர்களுக்கு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்வினை கல்லூரி யின் செயலாளர் விஜயராக வன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராம சுப்பையா தலைமை தாங்கி னார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு வாழ்த்துரை வழங்க ஐ.சி.டி. அகாடமியின் அமைப்பாளர் நிரஞ்சனி ஆலோசனை வழங்கினர்.
இ-சேவை மையத்தின் விளக்க பயிற்சியை அளித்த தோடு தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த வாடிக்கையாளர்களின் தேவையை முத்ரா லோன் திட்டம் போன்றவற்றிக்கான பயிற்சியை கல்லூரியின் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி விளக்கம் அளித்தார். விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.






