என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டில் நின்னு குடிச்சா பிடிப்பீங்களா? போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையை கடித்த வாலிபர்
    X

    ரோட்டில் நின்னு குடிச்சா பிடிப்பீங்களா? போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையை கடித்த வாலிபர்

    • சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர்.
    • மீது போலீசார் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    திருவான்மியூர்:

    கண்ணகிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து செழியன், தலைமைக்காவலர் சிலம்பரசன் ஆகியோர் காரப்பாக்கம் ஓடை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கள்ளச்சந்தையில் மது விற்பவர்களை விட்டுவிட்டு ரோட்டில் நின்னு குடிச்சா பிடிப்பீங்களா? என்று ரகளையில் ஈடுபட்டார்.

    மேலும் தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்று தலைகுப்புற விழுந்தார். அப்போது பிடிக்க முயன்ற போலீஸ்காரரின் கையை சிலம்பரசன் கடித்தார். இதையடுத்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சதீஷ் என்பது தெரிந்தது. அவர் மீது போலீசார் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×