என் மலர்
மதுரை
- மேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.
- கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
மேலூர் அருகே கீழவளவை அடுத்துள்ள உடன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா என்ற சோனை காளை(வயது23). நேற்று இரவு தனது நண்பர்கள் நாகராஜ், முத்துக்குமார் ஆகியோருடன் கீழவளவில் இருந்து உடன்பட்டிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரைக்குடியில் இருந்து முத்துக்குமார் என்பவர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீழவளவு போலீஸ் நிலையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
- பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளிஅம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு அம்மன் வந்து சேர்ந்தார்.
அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர். மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரகாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
பக்தர்கள் சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து அம்மன் சிறிய கோவிலை வந்து சேர்ந்ததையடுத்து விழா முடிவடைந்தது.
- வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணி செயல் விளக்கம் நடந்தது.
- நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். இதில் தீ பேரிடர் காலங்களில் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, எப்படி தற்காத்துக் கொள்வது, எப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆலை தொழிலாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
- அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
- இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாடிப்பட்டி அ.தி.மு.க. நகர் செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமார் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். மேலும் வருகிற 28-ந்தேதி ஆண்டிப்பட்டி பங்களா அருகே நடைபெறும் கண்காட்சியை பார்ப்பதற்கு மாணவிகளுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.
இதேபோன்று வலையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
- சோழவந்தான் பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
- ஆர்.பி. உதயகுமார் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் கிழக்கு, மேற்கு, கச்சிராயிருப்பு, தென்கரை பகுதிகளில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
முகாமிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் மேலக்கால் கிழக்கு கிளை கழகத்திற்கு ராஜ பாண்டி, மேற்கு பகுதிக்கு காசிலிங்கம், கச்சிராயி ருப்புபகுதியில் அவைத் தலைவர் முனியாண்டி, தென்கரையில் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டில் உறுப்பினர்கள் முகாமில் சேர்ந்தனர்.
இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.
முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், தமிழரசன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப் பட்டி வடக்கு காளிதாஸ், செல்லம்பட்டி எம்.வி.பி. ராஜா, மதுரை மேற்கு-தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், அம்மா பேரவை வெற்றிவேல், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி கேபிள் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை பெட்கிராட் சார்பில் 17 வகையான பேக் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
- அதற்கான வழிமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளது.
மதுரை
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்ஜர் நிறுவ னம், மதுரை பெட்கிராட் இணைந்து ஜூட் பேக், லேப்டாப் பேக், லஞ்ச் பேக், ஸ்கூல் பேக், வாட்டர்கேன் பேக், ஷாப்பிங் பேக் போன்ற 17 வகையான பேக் தயாரிக்கும் இலவச பயிற்சியை பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சுயதொழில் தொடங்கு வதற்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும் அதற்கான வழிமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளது என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சியின்போது தொழில் முனைவோராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு தன்னம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் தான் தொடர்ந்து ஒரு தொழிலை செய்து முன்னேற முடியும் என பேசினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில், மானியத்துடன் கடன் வழங்க வங்கி நிர்வாகம் தயாராக உள்ளது. உரிய ஆவணங்களுடன் வந்து கடன் பெற்று சுயதொழில் துவங்க நீங்கள் முன்வர வேண்டும் என பேசினார்.
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு உறுப்பினரும், 61வது வார்டு கவுன்சிலருமான செல்வி செந்தில் பேசுகையில், 30 ஆண்டுகளாக இலவச தொழில் பயிற்சி நிறுவனமான பெட்கிராட் மூலமாக எங்களது பகுதியில் பல்வேறு தையல் தொழில் செய்யும் பெண்கள் முன்னேற்ற பாதையை நோக்கி சென்றுள்ளனர்.
எனவே நீங்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.
- 12 மணி நேர வேலை சட்டத்திற்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.
- இது தொடர்பாக அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்க செய்யப்பட்டது
மதுரை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சார்பில் வக்கீல் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதி சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பி னர் மாணவர்கள் மீது மதுரை திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்க செய்யப்பட்டது.
இதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வது, வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், வாகன டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது உள்ளிட்டவற்றில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அந்த சட்டத்தை திரும்ப பெற்றது.
ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவசர அவசரமாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்
- மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- அனைத்து செட்டியார் சமூகத்தினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தலைமை செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தேசிய செட்டி யார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் தமிழ்ச் செல்வன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி தென்னவன், மாநில பொருளாளர் ராஜ ராஜசேகரன், மாநில மகளிர் அணி தலைமை ஒலிங்கி ணைப்பாளர் ராஜேஸ்வரி, சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயராமன், மாநில தலைமை ஒருங்கிணைப் பாளர் மோகன், மாநில துணைப் பொதுச் செய லாளர் வக்கீல் ராம கிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்தமணி, மோகன், ரகுபதி, தலைமை நிலைய இணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி ஒருங்கிணை்ப பாளர் சுறா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மூர்த்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ காஞ்சி காமாட்சி அறக்கட்டளை நிறுவனர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் உள்ள அரசி யல் கட்சிகளில் நமது சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் மாநில முழுவதும் மாவட்ட வாரியாக சிறப்பு கூட்டங் கள் ஏற்பாடு செய்து நலத் திட்டங்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு அனைத்து சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைத்தல்.
நமது சமுதாயத்தின் நூற்றாண்டு மாநாடு அனைவரும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். உடுமலை நாராயண கவிக்கு சென்னை அண்ணா சாலையில் முழு உருவசிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கேரளா எல்லையில் அமைந் துள்ள கண்ணகி கோவிலில் தமிழ் மாதந்தோறும் சாமி தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வர லாற்றை பறைசாற்று கின்ற அளவுக்கு தேனி லோயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும். அனைத்து செட்டியார் சமூக மக்களையும் மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்பட முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மணி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, தமிழக, கேரளா, கர்நாடக, புதுச்சேரி, ஆந்திரா உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மதுரையில் வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியி ருப்பை சேர்ந்தவர் செந்தா மரை கண்ணன் (வயது53).இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் அறை கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு கரையான் மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரைத்துறை காமராஜர் புரம் ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராமர் (45). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் பூச்சிமருந்தை தின்று மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி நாகவல்லி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- யூரியா உரத்தால் மண் வளம் பாதிப்பை தவிர்க்க விளக்கம் அளிக்கப்பட்டது.
மதுரை
இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மண்டல இணைப்ப திவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
விவசாய பெருமக்கள் அதிக அளவு யூரியா உரம் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதை தவிர்த்திட இப்கோ, நானோ யூரியா, இப்கோ டி.ஏ.பி. மற்றும் சகாரிக்கா உரங்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து இப்கோ நிறுவன அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு விற் பனை இணையம் (டான் பெட்) துணைப் பதிவாளரும், மண்டல மேலாளருமான ச.பார்த்திபன், டான்பெட் நிறுவன புதிய தயாரிப்பு உரங்களின் சிறப்புகள் பற் றியும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் டான் பெட் புதிய தயாரிப்பு உரங் கள் பெற்று விநியோகம் செய்திடுமாறும் தெரிவித்தார். இதில் இப்கோ நிறுவ மாநில விற்பனை மேலாளர், டான்பெட் எரியோடு உர ஆலை வல்லுநர், கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- மதுரை மன்னர் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
- விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இலிருந்து 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட் ராக்ட் கிளப், தியாகராசர் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி இன்டர் நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3000, ரோட்ராக்ட் டிஸ்ட்ரிக்ட் ஆர்கனைசேசன் சார்பில் யுவா மதுரை 4.0 ஒரு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி மன்னர் திருமலை கல்லூரி யில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழா வில் மதுரை டவுன் டவுன் பிரசிடெண்ட் ஜெயகிரன் ஜெயின் சிறப்புரையாற்றி னார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப் பையா தலைமை தாங்கி னார். கல்லூரி சுயநிதிப்பி ரிவு இயக்குனர் ச.பிரபு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலாளர் மு.விஜயராகவன் ரோட் ராக்ட் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மன்னர் கல்லூரியின் ரோட்ரா கிளப் தலைவர் சூரிய பிரகாஷ். விழா ஏற் பாட்டினை செய்திருந்தார். தியாகராசர் கல்லூரி ரோட்ராக்ட் செயலா ளர் சேஷ கோபாலன் விருந்தி–னர்களை அறிமுகம் செய் தார் மேலும். மன்னர் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.ரஞ்சித்குமார், தியாகராசர் கல்லூரி ஒருங் கிணைப்பாளர் முனைவர் சிவக்குமார் ஆகியோர் நன்றி கூறினா். விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்வேறு மாவட்டங்களி–லிருந்து 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- பெண்களை மீண்டும் விண்ணப்பிக்க சொல்வது ஏமாற்று வேலை என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
- பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேலக்கால் கச்சராயிருப்பு, தென்கரை ஆகிய பகுதிகளில் இளைஞர் பாசறை உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவோம் என்று கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் சொல்லப்படுகிறது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்க ளில் ஏறத்தாழ 60 லட்சம் அரசின் சார்பிலே தள்ளு படி செய்யப்பட்டிருக்கிறது.
தகுதி இல்லை என்கிற காரணத்தினால் தள்ளுபடி செய்திருப்பது பெண்களுடைய வேத னையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது. தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும் முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.
பொதுவாக ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால் அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம்.ஏற்கனவே அரசு தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிப்பு செய்கிறது. இன்றைக்கு ஒரு கோடி ரூ.20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, 2 கோடி 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க. அரசு வழங்க முடியும்.
தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஒரு கோடி பேருக்கு தான் வழங்குவோம் என்று ஏன் கூறவில்லை? தற்போது முதலமைச்சர் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமை தொகை திட்டத்தை வழங்கி உள்ளோம் என்று கூறி யுள்ளார். ஆனால் இதில் 50 சதவீத மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது முழுமையாக வழங்கப் பட்டது என்று முதலமைச்சர் கூறினால் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட தயாரா?
இவ்வாறு அவர் கூறினார்.






