சுந்தரவள்ளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.
சுந்தரவள்ளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
Published on

சோழவந்தான்

சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளிஅம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு அம்மன் வந்து சேர்ந்தார்.

அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர். மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரகாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

பக்தர்கள் சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து அம்மன் சிறிய கோவிலை வந்து சேர்ந்ததையடுத்து விழா முடிவடைந்தது.  

X

Maalai Malar
www.maalaimalar.com