என் மலர்
மதுரை
- வளர்ச்சி திட்டப்பணிகளை வேகப்படுத்துவதே அரசின் எண்ணம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
- இலாகா மாறினாலும் அறிவிப்புகள் மாறாது என்றார்.
மதுரை
மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தொழில் கூட்ட மைப்பு சார்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 6-வது முறை யாக நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கு வது எப்படி குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது.
எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதிலும், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருவதிலும் தகவல் தொழில் நுட்பம் முக்கிய மான ஒரு பங்கை வகிக்கிறது. இது போன்று தகவல் தொழில்நுட்ப கருத்தறிவு நிகழ்ச்சிகள் முன்னேற் றத்தை விரைவுப்படுத்தும்.
தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் வளர்ச்சிக்காக அறிவிப்புகள் செய்தி ருக்கிறது. கங்கை கொண் டான், நாகர்கோவிலில் அதற்கான திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. எனவே அரசு அறிவித்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அமைச்சரின் இலாகா மாறுவதினால் அறிவிப்புகள் பின் வாங்காது. பணிகள் வேகமாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்.
எந்த அமைச்சர் இருந் தால் என்ன? இல்லை என்றால் என்ன? அர சாங்கத்தின் எண்ணம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில் நுட்ப கூட்டமைப்பு நிர்வாகிகள் தினேஷ் தேவநாதன், திருமுருகன், புருஷோத்தமன் , சிவராஜ், தி.மு.க. பகுதி செயலாளர் மேலமாசி வீதி கண்ணன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை பாலமேடு அருகே மத்திய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
மதுரை
மதுரை அரசரடி பகுதி யில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத் தில் கட்டப்பட்டதா கும். 158 ஆண்டுகள் பழமையான இந்த சிறையில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். இதன் வளாகத்தி லேயே செயல்படும் பெண்கள் சிறையிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.
மக்கள் ெதாகை அதிகரிப்புக்கு ஏற்ப பெருகும் வாகன போக்குவரத்தால் கடுமையான நெருக்கடி மதுரை நகர் பகுதியில் ஏற்படுவது தடுக்க முடியா ததாகி விட்டது. இதனால் மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதுக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. அதன்படி மதுரை -திருவாதவூர் சாலையில் இடையபட்டி கிராமத்தில் மலையடிவார பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை அமைக்க இடம் தேர்வானது. இங்கு சென்னை புழல் சிறைக்கு நிகரான வசதிகளுடன் ரூ.400 கோடியில் சிறை வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இடை யபட்டியில் மத்திய சிறை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட் டது. பின்னர் பாலமேடு அருகில் உள்ள தெத்தூர் கிராமத்துக்கு மதுரை மத்திய சிறை வளாகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் தெத்தூர் கிராமத்திலும் சிறை வளாகம் அமைக்க அப்பகுதியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோருக்கு பட்டாவும் வழங்கப்பட்டு விட்டது.
தற்போது அந்த இடத்தை தேர்வு செய்து சிறைச்சாலை அமைக்கப்போவதாக கூறு வது கண்டனத்திற்கு ரியது. எனவே உடனடியாக தெத் தூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் அமைக்கும் முயற் சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தெத்தூர் கிராமத்துக்கு போலீஸ் படையுடன் சென்ற குழுவி னர் சிறை வளாகம் அமைய வுள்ள இடத்தில் ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அங்கு போடப்பட்டி ருந்த கம்பி வேலிகளும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். மேலும் இந்த இடம் புறம்போக்கு நிலம் என்றும் போலீசார் தெரி–வித்துள்ளனர்.
- அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற உலக சுற்றுலா தின பேரணி நடந்தது.
- பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருமங்கலத்தில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுற்றுலா விழிப்பு ணர்வு பேரணி நடைபெற் து. கல்லூரி முதல்வர் டாக்டர். எம்.அப்துல் காதிர் பேரணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசு கையில், முதன்முதலில் 1980-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதியை சுற்றுலா தின மாக ஐ.நா. சபை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படு கிறது. உலகின் பல்வேறு முக்கிய மான இடங்களை, கலாசார ரீதியாக தெரிந்து கொள்ள உதவுகிறது. சுற்றுலா மூலம் பொருளாதாரம் விரிவடை யும், உலக நாடுகளுக்குள் நல்லுறவு, சமாதானம், கலா சாரம் மேம்படும் என்றார்.
பேரணி ஏற்பாட்டை ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் முனி யாண்டி, பேராசிரியர் கள் செந்தில், அருண், கங்கா தரன், சிங்கராஜா, சீமாட்டி, உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார், சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன் உள்ளிட்டோர் செய்தனர். திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் ஆரம்பித்து தாலுகா அலுவலகம் அருகில் நிறைவுற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
- 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.
மதுரை
மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கூட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசிய தாவது-
காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது.
உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டி னுடைய இளைய தலை முறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026-ம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 185-இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187, 188, 189 கூறப்பட்டுள்ளது
தற்போது முதல்-அமைச்சர் கடந்த 2ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளிலே 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டு களில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறு தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம் 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இளைஞர் அணி மாநாடு நடத்த போகிறோம் என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.
இந்த மாநாட்டில் இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு என உத்தரவாதம் தரப் ்போகிறார்கள்? இளைஞர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா?.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் அமைந்துள்ளது.
- ரோபோ உதவி மற்றும் வீடியோ உதவி தோரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை வரத்தொடங்கி விட்டன.
மதுரை
மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு சந்திப்பு சிவகங்கை மெயின் ரோட்டில் விக்ரம் மருத்துவமனை வளாகத்தில் 2, 3-வது மாடியில் அமைந்துள்ளது டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர். இதன் முதுநிலை இருதய நோய் நிபுணர் டாக்டர் மாதவன் கூறியதாவது:-
இதய வலி அல்லது மார டைப்பு என்றால், இரண்டு முக்கிய சிகிச்சைகள் தனித்து நிற்கின்றன. பொதுவாக இவை பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் கரோனரி இன்டர் வென்ஷன் மற்றும் கரோனரி பைபாஸ் எனப்படும் சி.ஏ.பி.ஜி. என்று பிரபலமாக குறிப்பி டப்படுகின்றன. இப்போது மதுரையில் ஆஞ்சியோ மெடிக்கலில் பயன்படும் தற்போதைய சிகிச்சை முறைகள் ஆகியவற்றின் சாத்திய எதிர்கால வளர்ச்சிகளை பார்க்கலாம்.
ஆஞ்சியோ பிளாஸ்டி சாதாரண ரத்த ஓட்டத்தை மீட்டெ டுக்க குறுகிய அல்லது தடைப் பட்ட தமனிகளை சரி செய் வதை நோக்கமாகக் கொண்ட ஒரு மருத்துவ செயல் முறை. ஆரம்ப நிலைக ளில் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்பட் டது பலூன் நுனி வடிகா லாய் பயன்படுத்தி சுருங்கிய கரோ னரி தமனிகளுக்குள் நுழைத்து பிளேக் எனும் அடைப்பை விரிவடைய செய்ய பயன்படுத் தப்பட்டது. இந்நடை முறை சென்னையில் ஆரம்ப நிலையில் இருந்தபோது 23 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் 39 வயது நோயாளிக்கு வெற்றிகர மாக செய்தோம். அவர் இன் னும் 22 ஆண்டுகள் உயிர் பிழைத்து இருந்தார்.
2010 முதல் காமிராக்களான இண்டரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட், ஆப்டிகல் கோஹ ரன்ஸ் டோமோகிராபி மற்றும் பிராக்சனல் ப்ளோ ரிசர்வ், பயோரி சார்பபில் ஸ்டென்ட் ஆகியவை வந்துள்ளன. எங்கள் இதய மையத்தில் ரோட்டபிளா ஷன் மற்றும் ஆர்பிட்டல் அதிரெக்டமி போன்ற நவீன முறைகள் வழக்கமாக பயன்படு த்தப்படுகின்றன.
இப்போது பின்னோக்கிப் பார்த்தால், நான் மதுரையில் ஆஞ்சியோ பிளாஸ்டியை துவக்கியபோது நெரிசல் மிகுந்த மதுரை மாசி வீதிகள் வழியாக லாரியை ஒட்டியது போல் இருந்தது. இன்று கிடைக்கக்கூடிய தொழில்நுட் டங்களை கொண்டு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வது நான்கு வழி சாலையில் சொகுசு காரை ஓட்டுவதற்கு ஒப்பானது. இது சுகாதாரத் துறையில் குறிப்பி டத்தக்க முன்னேற்ற பய ணத்தை குறிக்கிறது. அதிந வீன மருந்து பூச்சு கொண்ட ஸ்டென்ட்கள், செயற்கை நுண்ணறிவு, லேசர் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவை வருங்கால எதிர்பார்ப்புகள்
மற்ற இடங்களைப் போலவே மதுரையிலும் அதன் ஆரம்ப அறிமுகத்தில் சி.ஏ.பி.ஜி. ஒரு திறந்த இருதய அறுவை சிகிச்சையாக நடத்தப்பட்டது. காலிலிருந்து சபீனஸ் சிரை பயன்படுத்தப்பட்டது. 1970-களில் உள் பாலூட்டி தமனி மற்றும் ரேடியல் தமனிகளை கிராப்ட்டுகளாக பயன்படுத்த தொடங்கினர். இது இருதய நுரையீரல் எந்திரத்தை (ஆப் பம்ப்) பயன்படுத்துவதை தவிர்த்தது. மினிமலி இன்வே சிவ் டைரக்ட் கரோனரி ஆர்டரி பைபாஸ்), ரோபோ உதவி சி.ஏ.பி.ஜி. போன்றவைகள் தோன்றின. பின்பு பல தமனி கிராப்ட்டுகள் பயன்படுத்தபட்டது. இது மொத்த தமனி மறுமலர்ச்சி என அறியப்படும் ரோபோ உதவி மற்றும் வீடியோ உதவி தோரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை வரத்தொடங்கி விட்டன.
சமீபத்திய முன்னேற்றத்தில் எங்கள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குழு 80 வயதான ஒரு பெண்மணிக்கு டிரான்ஸ்கதீட்டர் அயோர்டிக் வால்வ் மாற்றம் செயல்மு றையை வெற்றிகரமாக செயல் படுத்தியது. இது ஒரு வடிகுழாய் மூலம் சேதம் அடைந்த அயோர்டிக் வால்வை புது வால்வ் மூலம் மாற்றியது.
தற்போதைய ஆய்வுகள் திசு பொறியியல் கிராப்ட்டுகள் மற்றும் உயிரி உறிஞ்சக்கூடிய கிராப்ட்களில். கவனத்தை செலுத்துகின்றன. மேலும் ஸ்டெம் செல்கள் மற்ற பிற உயிரியல் பொருட்களை பயன்படுத்தி பழுதடைந்த இதயத் திசுக்களை சரி செய்வதற்கான சாத்தியக்கூ றுகளை ஆராய்கின்றன. குறிப் பிடத்தக்க வகையில் அரசாங் கத்தின் ஒருங்கிணைந்த முயற்சி கள் மற்றும் தாலுகா தலைமை யகங்களில் உள்ள உள்கட்ட மைப்பு முன்னேற்றங்கள் சிறு கிராமங்களில் வசிக்கும் நோயாளிகள் கூட இப்போது அரை மணி நேரத்திற்குள் கேத்லாபுகளை அணுக முடி யும். என்ற நிலைமை உரு வாக்கியுள்ளன. இந்த நிலையை ஒரு தசாப்தத்திற்கு முன்பு என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. இது இதய சிகிச்சை அணுகல் தன்மையின் முன்னேற்றத்தின் மாற்றத்தக்க தாக்கத்தை காட்டுகிறது.
- அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.
அலங்காநல்லூர்
மதுரை மேற்கு தெற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், சரவணன், கருப்பையா, மாணிக்கம், அம்மா பேரவை நிர்வாகி வெற்றி வேல், மாவட்ட பொரு ளாளர் திருப்பதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதும்பு, அதலை உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று தேவகி சிறப்பு மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
- மேலும் தகவல்களுக்கு 96006 00888 ஆகிய எண்களை அழைக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
எந்திரத்தனமான இந்த உலகில் இளம் வயதினர் திடீர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது மாரடைப்பு. மாரடைப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் மருத்தவ உதவியை நாடாதது உயிரிழப்புக்கு முக்கிய காரணம். பெரும்பா லானோருக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறி குறிகள் தெரிந்திருக்கும். ஆனால் அதை அவர்கள் உதாசீனபடுத்தி இருப்பார்கள்.
நெஞ்சுவலி, மூச்சு திணறல், அதிக வேர்வை போன் றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல் லும் ரத்த குழாயில் முற்றி லும் அடைப்பு ஏற்படுவதி னால் வருகிறது. நெஞ்சு வலி வந்தால் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோ சனைப்படி உடனடியாக இ.சி.ஜி. எடுத்துக்கொள்ள வேண்டும்.
இ.சி.ஜி.ல் மாரடைப்பு இருப்பதை உறுதிப்படுத்தி விட்டால் முதலுதவி எடுத்துக் கொண்டு கேத் லேப் வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்று உடனடியாக அஞ்சி யோகிராம் செய்து அடைத்த ரத்த குழாய்யை பலூன் அல்லது ஸ்டென்ட் மூலம் அடைத்த ரத்த குழாய்யை சரிசெய்வது சரியான மருத்துவமாகும். சில சமயங்களில் இ.சி.ஜி. சரியாக இருந்தும் கூட மாரடைப்பு வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு என்பது நெஞ்சு வலி இல்லாமல் வயிறு வலியாகவோ அல்லது அதிக வேர்வையாகவோ வெளிப்படலாம்.
இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களுக்கு வாய்வு உள்ளதாக என நம்பி மாரடைப்பின் அறிகுறியை தவறுதலாக எண்ணக்கூடும். மாரடைப்பு வந்தால் இதயம் பலவீனம் அடையும். அதனை ஒரு குறிப்பிட்ட சமையத் திற்குள் சரிசெய்யவிட்டால் அது நிரந்தர தொந்தரவாக மாறிவிடும். அதனால் மார டைப்பு வந்தால் நேரத்தை வீணடிக்காமல் உயிர் காக்கும் உன்னத நேரத்திற்குள் மருத்து வரை நாடி இதயம் செயலி ழப்பதை தவிர்க்கலாம்.
பெரும்பாலானோருக்கு மாரடைப்புக்கான சிகிச்சை களான ஆஞ்சியோ பிளாஸ்ட்டி அல்லது பை பாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது என்கிற எண்ணம் உண்டு அது தவறானது. மார டைப்பு வந்தவர்கள் அதற் கான சிகிச்சைக்கு பிறகு இரண்டு வார காலம் ஒய்வு எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அவர்கள் நடைப்ப யிற்சி, உடற்பயிற்சி மற்றும் தங்களது அன்றாட வேலை களை துவங்கலாம்.
ஒரு மாதத்திற்கு பிறகு அவர்கள் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மூன்று மாதத்திற்கு பிறகு அவர்களால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். மாரடைப்பு ஒருமுறை வந்தவருக்கு மீண்டும் மார டைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மாரடைப்பு வந்தவர்கள் மீண்டும் மாரடைப்பு வராமல் இருக்க தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அவர்கள் தங்களது சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். புகைப்ப ழக்கம், புகையிலை, மது அருந்துதல் இவற்றில் ஏதேனும் இருந்தால் உடனைடியாக நிறுத்த வேண்டும். மன அழுத்தம் மாரடைப்பு வருவ தற்கான முக்கியமான காரண மாகும். ஆதலால் வேலைப் பளு, குடும்ப சுமை இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கவும்.
எங்கள் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. பிரைமரி ஆஞ்சியோபி ளாஸ்ட்டி, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து பரிசோதனைக ளையும், சிகிச்சையும் அளிக்க ஆஞ்சியோகிராம் பரிசோதனை, ரத்தநாள அடைப்பிற்கு 'ஸ்டென்ட்' சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை, இருதய துவாரங்களை கருவி கொண்டு மூடும் சிகிச்சை, ஓ.சி.டி., ஐ.வி.யூ.எஸ்., என்டோ வாஸ்குலர் இன்டர்வென்சன் லைக், பெரிபேரல் வாஸ்குலர் இன்டர்வென்சன்ஸ், உலக தரம் வாய்ந்த அதி நவீன கேத்லேப் வசதி மற்றும் அதி நவீன ஐ.சி.சி.யூ., மருத்துவ அவசர ஊர்தி, நவீன ரத்த பரிசோதனை ஆய்வகம், இ.சி.ஜி., எக்கோ, டி.எம்.டி., ஹோல்ட்டர் மானிடர் வசதி கள் உள்ளன.
ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமி ழக முதலமைச்சரின் விரி வான காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை, தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், பி.எஸ்.என்.எல். பணியாளர் கள் மற்றும் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவ னங்களின் பயனாளி களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ப தனை தேவகி சிறப்பு மருத்து வமனையின் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர் சே.ரூபஸ் டிமல் தெரிவித் தார்.
மேலும் தகவல் மற்றும் தொடர்புக்கு டாக்டர். சே.ரூபஸ் டிமல், சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர், தேவகி சிறப்பு மருத்துவமனை, அர சரடி, மதுரை-16 என்ற முகவரியிலும், முன்பதிவிற்கு 0452 2288841, அவசர சிகிச் சைக்கு 81900 34500, மேலும் தகவல்களுக்கு 96006 00888 ஆகிய எண்களை அழைக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலூர் பகுதி விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
- கடந்த 1984-85-ம் ஆண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ன கோரிக்கை விடுத்து மேலூர் அருகே உள்ள கச்சிராயன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யாவு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மேலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பெரியாறு அணை தண்ணீரை நம்பியுள்ளன. தற்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏராளமானோர் உழவுப்பணியை தொடங்கி விட்டனர்.
கடந்த 1984-85-ம் ஆண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்தது. ஆனாலும் பருவமழை காலம் என்பதால் அப்போதைய கலெக்டர் மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
தற்போது அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது. எனவே மேலூர் விவசாயிகள் நலன் கருதி முல்லை பெரியாறு அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
- கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன.
மதுரை:
மேலூர் அருகே மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்பட்டி பகுதியில் 1,990-ல் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு அந்தப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது முத்து புளியம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த முத்து புளியம்மாளின் 5 வயது மகன் சேவுகமூர்த்தி காயமடைந்தார். முத்து புளியம்மாளும், அவரது மகளும் காயமின்றி தப்பினர். சேவுகமூர்த்தி மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஆர்.ஓ. சக்திவேல், ஆர்.டி.ஓ. ஜெயந்தி, மேலூர் தாசில்தார் செந்தாமரை, கொட்டாம்பட்டி யூனியன் அலுவலர்கள், மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
இங்குள்ள தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனால் கட்டிடம் சேதமடைந்து பல வீடுகளில் மேற்கூரைகள் சுவர்கள் இடியும் நிலையில் உள்ளன. அதனால் இங்கு வசிப்பவர்கள் எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன. அப்போது அங்கு வசிப்பவர்களை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் வெள்ளம் வடிந்தபின்பு மீண்டும் வீடுகளுக்கு வந்தோம். அப்போது முதல் கட்டிடங்கள் உறுதி தன்மையற்ற நிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய வீடுகள் கட்டித்தரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக உயர் அதிகாரிகள் இங்குள்ள தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மதுரை முன்னாள் ராணுவீரர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
- டிரேடிங் கம்பெனியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கே.புதூர் அருகே யுள்ள சர்வேயர் காலனி ஆவின் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி விஷாலினி (36) என்ற மனைவியும், ரமிசா ஜாஸ்பெல் (12) என்ற மகளும் இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு திடீர் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண் டார். இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்காத தோடு, உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசியதைடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் உடல்க ளையும் மீட்டு பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக் குப்பதிவு செய்த தல்லா குளம் போலீசார் வீட்டில் இருந்த 25 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தையும் கைப்பற்றி னர். அதில் ரியல் எஸ்டேட் தொழிலை பெண் ஒருவரு டன் இணைந்து மேற்கொண் டதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த பெண் தனக்குரிய பங்கை தருமாறு கொடுத்த நெருக்க டியால் தற்ெகாலை செய்து கொண்டதும் தெரிந்தது.
இதற்கிடையே ரியல் எஸ்டேட் தொழிலை போன்று டிரேடிங் கம்பெனி யிலும் ஏராளமான பணத்தை முதலீடு செய்தி ருந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்த பணம் குறிப்பிட்ட காலத்தில் திரும்ப கிடைக்கா ததாலும் சமீப காலமாக அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து தற்கொலை முடிவெடுத்த ரமேஷ், முத லில் தனது மனைவிடம் கூறியுள்ளார். அவர் இதற்கு மறுத்துள்ளார். இருந்தபோதி லும் அதனை காதில் வாங் கிக்கொள்ளாமல் மனை விக்கு வலுக்கட்டாய மாக விஷத்தை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பாசமாக வளர்த்த மகளுக்கும் விஷம் கொடுத்து கொன்ற ரமேஷ், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் நீண்ட நேரம் கழித்து அவரும் விஷ மருந்தி தற்கொலை செய் துள்ளார்.
ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட தற்கு தொழில் நஷ்டம் மட்டும்தான் காரணமா? அல்லது பெண் தொடர்பான பிரச்சினையில் அவர் இந்த துயர முடிவை எடுத்தாரா? என்று திருப்பாலை போலீ சார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.
- உலக வெறிநோய் தினத்தையொட்டி தடுப்பூசி முகாம் நடந்தது.
- தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.
மதுரை
உலக வெறிநோய் தினத்தையொட்டி தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை மதுரை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.
கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன், விஜயகுமார், அறிவழகன், முத்துராம், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுதாகரன், சண்முகத்தாய், நிர்மலா, கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடந்தன.
- கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப்பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதல் படை வீடாக போற்றப்ப டும் திருப்பரங்குன்றம் சுப் பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை பகுதியில் அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பது மற்றும் சிறப்பு யாக வேள்வி நடத்துவது வழக்கம். அமாவாசை தோறும் இங்கு திருப்பரங்குன்றம் மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏராளமா னோர் தங்களது மூதாதை யரின் நினைவாக தர்ப்ப ணம் கொடுத்து சரவணப் பொய்கையில் புனித நீராடி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கடும் வெயில் மற்றும் மழையில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கோரிக்கையின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக மழை மற்றும் வெயில் காலங்களில் பக்தர்கள் தங்களது முன் னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை யும், சிறப்பு யாக கேள்விக ளையும் தடையின்றி செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






