வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தினத்தையொட்டி தடுப்பூசி முகாம் நடந்தது. தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.
வெறிநோய் தடுப்பூசி முகாம்
Published on: 

மதுரை

உலக வெறிநோய் தினத்தையொட்டி தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமை மதுரை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.

கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன், விஜயகுமார், அறிவழகன், முத்துராம், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுதாகரன், சண்முகத்தாய், நிர்மலா, கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com