search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The announcements will not change"

    • வளர்ச்சி திட்டப்பணிகளை வேகப்படுத்துவதே அரசின் எண்ணம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
    • இலாகா மாறினாலும் அறிவிப்புகள் மாறாது என்றார்.

    மதுரை

    மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தொழில் கூட்ட மைப்பு சார்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 6-வது முறை யாக நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கு வது எப்படி குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது.

    எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதிலும், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருவதிலும் தகவல் தொழில் நுட்பம் முக்கிய மான ஒரு பங்கை வகிக்கிறது. இது போன்று தகவல் தொழில்நுட்ப கருத்தறிவு நிகழ்ச்சிகள் முன்னேற் றத்தை விரைவுப்படுத்தும்.

    தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் வளர்ச்சிக்காக அறிவிப்புகள் செய்தி ருக்கிறது. கங்கை கொண் டான், நாகர்கோவிலில் அதற்கான திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. எனவே அரசு அறிவித்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அமைச்சரின் இலாகா மாறுவதினால் அறிவிப்புகள் பின் வாங்காது. பணிகள் வேகமாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்.

    எந்த அமைச்சர் இருந் தால் என்ன? இல்லை என்றால் என்ன? அர சாங்கத்தின் எண்ணம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில் நுட்ப கூட்டமைப்பு நிர்வாகிகள் தினேஷ் தேவநாதன், திருமுருகன், புருஷோத்தமன் , சிவராஜ், தி.மு.க. பகுதி செயலாளர் மேலமாசி வீதி கண்ணன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×