என் மலர்
மதுரை
- தங்கமயில் ஜூவல்லரியின் ‘சில்வர் ஸ்மைல்’ புதிய ஷோரூம் திறப்பு விழா நாளை தொடங்குகிறது.
- புதிய ஷோரூம் திறப்பு விழாவில் தங்கமயில் நிறுவன தலைவர்களும், வாடிக்கை யாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அந்நிறுவ னத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.
மதுரை
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் "சில்வர் ஸ்மைல்" என்கிற புதிய கிளையை மதுரை நேதாஜி ரோட்டில் தங்கமயில் ஜூவல்லரி அருகில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் தொடங்கு கிறது.
இந்த புதிய ஷோரூமில் வெள்ளி மோதிரம், காப்பு, தோடு, செயின் டாலர்கள் என லேட்டஸ்ட் டிசைன் களில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளியில் தங்கம் முலாம் பூசப்பட்ட மாலை, நெக்லஸ், வளையல், ஒட்டியாணம் மற்றும் பரிசு பொருட்கள் என இளம் தலைமுறை யினருக்கு பிடித்த பொருட்களை அறிமுகம் செய்கிறது.
மதுரையின் பெருமை யான மீனாட்சி அம்மனின் திருவுருவம் பதித்த விக்ரகம், படங்கள், பரிசு பொருட்கள் என தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது. புதிய ஷோரூம் திறப்பு விழாவில் தங்கமயில் நிறுவன தலைவர்களும், வாடிக்கை யாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அந்நிறுவ னத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.
- மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்தனர்.
- தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
மதுரை
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஓ.சி.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் 63 பேர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி பருவத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை கூறி ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இதில் சிலர் தொழில் அதிபர்களாகவும், சுய தொழில் செய்பவர்களா கவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். மேலும் சிலர் மருத்துவர், வெளிநாட்டில் பணி பொறியாளராகவும் பணி யாற்றி வருகின்றனர். மேலும் தங்களுடைய முகவரி மற்றும் தொலை பேசி எண்களை பரிமாறிக் கொண்டு பள்ளிப் பரு வத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியு டன் காணப்பட்டனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
- விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
- நைஸ்ரக கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை
மதுரை அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள், தலைவர் கோபிநாத் (ஐ.என்.டி.யூ.சி.), செயலாளர் ரவீந்திரன் (ஜனதாதளம்), பொருளா ளர் பத்மநாபன் (ஏ.டி.பி.), இணைச்செயலாளர் சுதர்சன் (பி.எம்.எஸ்.), துணைத்தலைவர் ஈஸ்வரன் (சி.ஐ.டி.யூ.), துணைத் தலைவர் தாமோதரன் (ஏ.ஐ.டி.யூ.சி.), துணைச் செயலாளர் லெட்சுமணன் (எல்.பி.எப்.) ஆகியோர் மாவட்ட கலெக்டரிடமும் நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை டவுன், புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்ச னேந்தல், ஸ்ரீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகமான வேட்டி, கோடம் பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யும் நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
கூலி, போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும். தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக மிக சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மாற்று வேலைவாய்ப்பு இன்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்வு, போனஸ் உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் வருகின்ற 11.11.2023 அன்றுடன் காலாவதி ஆகிறது. எனவே வருகின்ற 12.11.2023 (தீபாவளி) முதல் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 40 சதவீதம் கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபா வளிக்கான போனஸ் 20 சதவீதமும் வழங்கி கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அலங்காநல்லூர் அருகே பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் 'நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 2 கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடுப்பட்டி கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.
- கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
- பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் விளக்கினார்.
மதுரை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி கணிதத் துறை, பெங்களூர் கெரிசிம் அகாடமி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கணிதத்தில் கணக்கீட்டு நுட்பங்கள் குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு நடைபெற்றது. கணிதத் துறைத்தலைவர் ராபர்ட் திலிபன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பரசு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் அந்தோனிசாமி வாழ்த்துரை வழங்கினார். பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் சேவியர் அடைக்கலராஜ் விளக்கினார். பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியின் (தன்னாட்சி) கணித பேராசிரியர் கிளமென்ட் ஜோ ஆனந்த், கணக்கீட்டு நுட்பங்களில் உள்ள சமீபத்திய வளர்ச்சிகள் குறித்த தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹன்னா கிரேஸ், கணக்கீட்டுக் கணிதத்தில் மென்பொருள் அணுகுமுறைகள் குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார். இணை முதல்வர் சுந்தரராஜ் பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். முடிவில் பேராசிரியர் நிவேதா மார்ட்டின் நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்ப்டடோர் கலந்து கொண்டனர்.
- மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரர் காமாட்சியம்மன் (சிவன் கோவில்) அறங்காவலர் குழு தலைவராக, முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் குழு உறுப்பினர்களாக காந்திஜி பூங்காவை சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன், மேலூர் மலம்பட்டி விஜயபாண்டியன், மற்றும் முன்னாள் சொக்கம்பட்டி கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாள பட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலும் மேலும் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, ராஜராஜன், உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணா மூர்த்தி, பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- மதுரை மாட்டுத்தாவணியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- இது தொடர்பாக ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை மாவட்ட, நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமூக விரோத கும்பல் கஞ்சா விற்று வருகிறது. இந்தநிலையில் மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளதுரை, போலீசார் அந்தப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் கட்டை பையுடன் சந்தேகத்திற்கி டமான வகையில் நின்றி ருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆனால் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஆந்திர மாநிலம் ராயபுரம் இந்தூர் காலனியை சேர்ந்த லோகேஷ்வர பிரசாத் மனைவி பத்ம சலபக்கா பத்மஸ்ரீ(வயது 32) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஏ.டி.எம்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி மதுரையில் சிலரிடம் விற்க வந்துள்ளார். அவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்? மதுரையில் உள்ள கூட்டாளிகள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் மத்திய அரசு அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் கொள்ளை போனது.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை அவனி யாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகன் பிரின்ஸ் ரிச்சர்ட்சன் (வயது34). இவர் பெங்களூரில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலு வலராக பணியாற்றி வருகிறார்.
பெருங்குடியில் உள்ள வீட்டில் இருந்த அவரது தாயார் சில நாட்களுக்கு மன்பு வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் 25 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் ஊர் திரும்பிய பிரின்ஸ் ரிச்சர்ட்சன் தாயார் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மதுரை அருகே பிறந்து 47 நாளில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது.
- அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மதுரை
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கர்ப்பிரியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 47 நாட்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நகரில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மழை காலத்தில் வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்றவற்றை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ மொபைல் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
- இந்த தகவலை எக்ஸ்போ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் 2-ந் தேதி வரை மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண் காட்சி (எக்ஸ்போ-2023) நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இண்டஸ்ட்ரீஸ் பெடரேஷன், தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் இணைந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆட்டோ மொபைல் கண்காட்சியை நடத்துகின்றன.
இந்த ஆண்டு மதுரையில் நாளை முதல் 2-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த எக்ஸ்போவில் இந்தியாவில் உள்ள முன்னணி கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இது தவிர கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் 140 அரங்குகளை அமைக்கின் றன.
இந்த எக்ஸ்போ மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாகன ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பார்வை யாளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அனுமதி கட்டணம் இல்லை.
இந்த தகவலை எக்ஸ்போ நிர்வாகிகள் ஏ.சிதம்பரம், ராஜேஸ்வரன், ரவி மற்றும் டி.சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.
- மின்விளக்குகள் சரிவர எரியாததால் மீனாட்சி அம்மன் கோவில் பகுதி போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது.
- இதனால் பக்தர்கள்-பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகரில் மையப்பகுதியாக மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் ஏராளமான கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. அதனால் இந்த பகுதியில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். மேலும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் எந்த நேரத்திலும் இந்த பகுதியில் காணலாம்.
தமிழ்நாடு மட்டு மில்லாமல் இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்லும் இடமாகவும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பலர் நடைபயிற்சியும் செய்து வருகின்றனர். மேலும் சிலர் கோவில் சுற்றுவேலியை ஒட்டியுள்ள திண்டில் அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர்.
இந்த நிலையில் மாலை, இரவு நேரத்தில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மேல கோபுர தெரு சந்திப்பு, நேதாஜி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்விளக்குள் சரிவர எரிவதில்லை என பக்தர்கள், பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மின் விளக்குகள் சரியாக எரியாததால் இந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளதாகவும், போதிய வௌிச்சம் இல்லாததால் திண்டுகளில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு 7 மணிக்கு மேல் இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவில் வியாபாரம் நடக்கும். வெளிச்சம் குறைவாக உள்ளதால் வாடிக்கை யாளர்கள் வந்து செல்வது சிரமமாக இருப்பதாக வியா பாரிகள் தெரி விக்கின்றனர். மேலும் இரவில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களின் அழகை ரசிப்பதற்கும், புகைப் படங்கள் எடுப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் பலர் வருகின்றனர்.
ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு நவீனமாக்கல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய மைய மாகவும் உலக பிரசித்தி பெற்ற இடமாகவும் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பகுதி நல்ல வெளிச்சத்துடன் பராமரிக் கப்பட வேண்டும் எனவும், பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வசதி களை மேம்படுத்த வேண் டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- பெட்கிராட் சார்பில் சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிக்க இலவச பயிற்சி நடந்தது.
- சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவ னம் மற்றும் மதுரை பெட் கிராட் தொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.
பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ண வேணி, செயலாளர் சாராள் ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செய லாளர் அங்குசாமி வர வேற்று பேசினார். மதுரை மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குத்துவிளக்கேற்றி இலவச பயிற்சியை தொடங்கி வைத்தார்.
கே.வி.ஐ.சி. உதவி இயக்குநர் அன்புச் செழியன் பேசுகையில், சுயதொழில் தொடங்க நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், புறநகர் பகுதி களில் 35 சதவீதமும் மானிய மாக வழங்குகிறோம். இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், இந்த பயிற்சிக்கு குறித்த நேரத்தில் வருகை தந்து கவனமாக கவனித்து செய்முறை விளக்கங்களை கேட்டு நீங்கள் சிறந்த தொழில் முனைவோராக மாற வேண்டும் என பேசினார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதுநிலை மேலாளர் சதீஷ்குமார் பேசுகையில், மகளிர் குழு பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என வும், சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி தொழில் தொடங்க முத்ரா லோன் பெறலாம் எனவும் பேசினர்.
முடிவில் பயிற்சியாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.






