என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mullai Periyar Dam. Farmers demand"

    • மேலூர் பகுதி விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • கடந்த 1984-85-ம் ஆண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ன கோரிக்கை விடுத்து மேலூர் அருகே உள்ள கச்சிராயன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யாவு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மேலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பெரியாறு அணை தண்ணீரை நம்பியுள்ளன. தற்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏராளமானோர் உழவுப்பணியை தொடங்கி விட்டனர்.

    கடந்த 1984-85-ம் ஆண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்தது. ஆனாலும் பருவமழை காலம் என்பதால் அப்போதைய கலெக்டர் மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

    தற்போது அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது. எனவே மேலூர் விவசாயிகள் நலன் கருதி முல்லை பெரியாறு அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ×