search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP enthusiastically"

    • மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர். அவர்கள் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். ரெயில் மதுரைக்கு வந்தபோது மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மேயர் இந்திராணி, மாநில பா.ஜ.க. பொதுச் செய லாளர் ராமசீனிவாசன், பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சுப்பாநாகுலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை பாலமுருகன், ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஓம்சக்தி தனலட்சுமி, தமிழிசை சவுந்தரராஜன் நற்பணி இயக்க நிர்வாகிகள் நாச்சியப்பன், கருப்பையா, ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக பா.ஜ.க. வினர் ரெயிலில் பயணம் செய்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    ×