என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
    X

    இலவச கருத்தரித்தல் பரிசோதானை முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன், நாட்டாத்தி நாடார் உறவின்முறை தலைவர் எஸ்.எம்.எஸ்.ஆர்.நடராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த காட்சி.

    இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்

    • இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
    • 115 தம்பதியினர் பயனடைந்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார் பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் உள்ள சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. முகாமில் தொடர்ச்சியாக கரு சிதைவால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ள வர்கள், விந்தணு குறை பாடு உள்ளவர்கள், கர்ப் பப்பையில் நீர்க்கட்டி உள்ள வர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோத னைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. மேலும் ஆண், பெண்களுக்கான குழந்தையின்மை பிரச்சி னைகள், கர்ப்பப்பை சம்பந் தமான பிரச்சினைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல்,

    ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைக ளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதில் 115 தம்பதிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

    உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் சகுந்தலா கட்ட பொம்மன், உசிலம்பட்டி நாட்டாத்தி நாடார் உற வின்முறை தலைவர் எஸ்.எம்.எஸ்.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, செயற்கை கருத்த ரித்தல் கிசிச்சைப்பிரிவு மேலாளர் ஏ.பி.ஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவ லர்கள் சலீம், சேக் பரீத், தீபன் மற்றும் கார்த்திக் ஆகி யோர் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    Next Story
    ×