புரட்டாசி சனிக்கிழமை வீதி பஜனை

வாடிப்பட்டியில் புரட்டாசி சனிக்கிழமை வீதி பஜனை நடந்தது. பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர்.
புரட்டாசி சனிக்கிழமை வீதி பஜனை
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் நவநீத பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி முதல் வார வீதி உலா பஜனை நடந்தது. கோவில் அர்ச்சகர் நவநீத கண்ணன் தலைமையில் கோவிலில் இருந்து புறப்பட்டு தாதம்பட்டி மந்தை, சடையாண்டி கோவில், விராலிப்பட்டி பிரிவு, மேட்டு பெருமாள் நகர், நாட்டாமைக்காரர் தெரு, நடுத்தெரு, இரட்டை விநாயகர் கோவில் தெரு, மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பஜனை பாடல்கள் பாடியபடி வீதி உலா சென்று கோவிலை அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com