என் மலர்
மதுரை
- பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
- வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கி வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக கோர்ட்டு உத்தரவுப்படி தங்க கவசம் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி பெற்று விழாக்குழுவிடம் வழங்கினார். தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதையடுத்து தங்களிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
- ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
- அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஏரியின் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
இதனால், இந்த ஏரியை நம்பி உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மணமேல் குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியே காணாமல் போய்விடும் என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள், வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு? குருந்தன்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன?
ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா? ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.
மதுரை:
மருதுபாண்டியர்கள் 224-வது நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் செல்வதற்காக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வை பா.ஜ.க.வைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. அதில் ம.தி.மு.க.வும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தி.மு.க. கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது. அதற்கு ம.தி.மு.க. சார்பாக முழு ஆதரவு உண்டு.
தொடர்ந்து தி.மு.க.வுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் கையெழுத்துக்காக காத்திருந்தது. பல போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். கவர்னரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ஏற்பட்டது. அதுபோல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஐந்து மாநில தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலங்களில் வேலை நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க., ம.தி.மு.க. என அனைவரும் வலியுறுத்துகிறோம்.
பீகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும், தேசிய ஜனத்தொகையுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும்போது பல நன்மைகள் உள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கு எடுப்பை நடத்தும்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். அவருக்காக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாதிரி பேசுகிறார், மாற்றுக் கட்சி கைதுக்கு வேறு மாதிரி அறிக்கை கொடுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
- பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பங்களாமேடு பகுதியில் அவர்கள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா கஞ்சா, 48 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர் ஜெயராமன், செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் கண்ணன் ஆகியோர் உதவியுடன் போதை மாத்திரைகளை வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் சிலருடன் இணைந்து கஞ்சா விற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். மேலும் விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டி கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சரவணன், குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், கவுண்டன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள பங்களாமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடந்து வந்ததும், அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே இதற்கு உடந்தையாக இருந்ததும் தனிப்பிரிவு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிரமாக செயலாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அதிகாரிகளும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அதிகாரிகளும், போலீசாரும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் நிலையம் அருகிலேயே தைரியமாக கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- செட்டிக்குறிச்சி ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி காலமானார்.
- அவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.
மதுரை
மதுரை காவேரி மஹால் மறைந்த கே.வி.கே.ராஜேந் திரபிரபுவின் மைனத்துன ரும், அசோகா பேலஸ் உரி மையாளர் மறைந்த செட்டிக் குறிச்சி எஸ்.ஏ.ஜே.ராஜேந்திரனின் மனைவியும், எஸ். ஏ.ஜே.ஆர்.அசோக்குமா ரின் தாயாரும், மதுரை பி.டி.ஆர். அகாடமி மற்றும் பி.ஆர்.பி. ஏஜென்சி டாக்டர் ஆர்.பி.திருப்பதி ராஜின் பெரியம்மாவும், மதுரை சரஸ்வதி பவனம் லாட்ஜிங் வி.வி.பி.எம்.செல்வராஜின் சகோதரியும், மதுரை காமரா ஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரவின் குமாரின் அத்தையுமான ஆர்.ராஜேஸ்வரி நேற்று (23-ந்தேதி, திங்கட் கிழமை) மதியம் 12 மணியளவில் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் உறவினர்கள் அஞ்ச லிக்காக மதுரை காக்கா தோப்பில் சுப்புராயன் அக்ராயம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டுள்ளது. இதில் மறைந்த ஆர்.ராேஜஸ்வரியி ன் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட் சியினர், கல்வியாளர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஆர்.ராஜேஸ்வ ரியின் இறுதிச்சடங்கு இன்று (24-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
- அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அலங்காநல்லூர்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிக்கந்தர் சாவடி தனியார் மண்ட பத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.
மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தி ருந்தார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தண்டரை மனோகரன் சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டார்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணே சன், மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம் குமார், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், பொதும்பு கிளை செய லாளர் ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கான நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்கப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
- வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
மதுரை
மதுரை புது ஜெயில் ரோட்டில் கரிமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் மதுரை மாநகருக்குள் அதிகாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் அங்கிருந்த கட்டடங்கள் சிதிலமடையத் தொடங்கின. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாகவும் கரிமேடு மீன் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, மலர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநகருக்குள் லோடு வாகனங்களின் வருகை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த பழைய கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து நகரின் முக்கிய பகுதியில் மத்திய மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 20 ஆயிரம் சதுர அடி காலி இடம் உள்ளது.
கடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்த காலி இடம் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து பேசிய 58-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயராமன் அந்த இடத்தை பொதுமக்கள் நலனுக்கு பயன்படுத்துவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த மேயர் இந்திராணி அந்த இடத்தில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நவீன கற்றுணர் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தனியார் நிறுவன பங்களிப்புடன் பழைய கரிமேடு மார்க்கெட் காலி இடத்தின் ஒரு பகுதியில் அறிவியல் மையம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மையத்தில் மாணவர்கள் அறிவியல் பயன்பாடுகளை செய்முறையில் கற்று தெரிந்து கொள்ள உதவும் நவீன உபகரணங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ரோபாட்டிக் தொழில்நுட்ம் ஆகியவற்றுக்கு தனித்தனி ஆய்வகங்கள், நேரடி செய்முறை சாதனங்கள் ஆகியவை அமைக்கப்படும் பார்வையிடுவது, அங்கு உள்ள சாதனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக நேரடியாக அறிவியல் கூறுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும் நூலகம், கருத்தரங்கம், வாசிப்பறை, நவீன கற்றுணர் வகுப்பறை களும் அமைக்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த மையம் இருக்கும் என்றார்.
கோவிட் தொற்று காலத்தில் கரிமேடு மீன் மார்க்கெட்டை அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முதலில் திட்டமிடப்
பட்டிருந்த தாகவும், ஆனால் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் நகருக்குள் அதிகாலையில் லோடு வாகனங்களின் போக்குவரத்து ஓரளவு குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுரை
நாகரீக உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப துரித உண வுகளின் ஆதிக்கமும் அதிக–ரித்துள்ளது. உணவகங்க ளில் சாப்பிட்ட பின்பு உட லில் நச்சுத்தன்மை பரவி உடல் நிலை பாதிக்கப்படுவ தும், அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படும் சம்பவங்க ளால் தமிழகம் அதிர்ந்து போய் உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் கண்காணிப்பு மற் றும் சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கி வந்த சவர்மாவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந் ததை அடுத்து அதிரடி சோத னைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சவர்மா விற் பனை செய்யும் உணவ கங் கள், அசைவ, சைவ உணவ கங்கள் என அனைத்து உண வகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டி யன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதிக்குப் பின்னர் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் அதிக அளவில் அதிரடி சோதனைகளை நடத்தி வரு கிறோம். கடந்த 2 மாதங்க ளில் 1,497 உணவ கங்களில் அதிரடி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. இதில் இறைச்சியை குளிர்விப்பா னில் வைத்து பல வாரங்க ளுக்கு உணவு சமைப்பதற் காக பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
மேலும் பொறித்த, வறுத்த மற்றும் தந்தூரி சிக்கன் போன்ற உணவுக ளில் தடை செய்யப்பட்ட வண்ண பொடிகள் பயன்ப டுத்தப்படுவதையும் கண்ட றிந்துள்ளோம். மொத்தம் 101 கடைகளில் இருந்த 320.025 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த உண வகங்களுக்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி சுகாதாரம் இல்லாமல் உண வுப் பொருள்களை விறங பனை செய்த 123 உணவ கங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. டவுன்ஹால் ரோட் டில் செயல்பட்ட 2 கடைக ளுக்கு சீல் வைக்கப்பட்டுள் ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 964 கடைகளில் ஆய்வு செய்யப் பட்டது. இதில் 15 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 13.93 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்தக் கடைகளுக்கு ரூ.75 அபராதம் விதிக்கப்பட்டுள் ளது.
பாலீத்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டபோ தும் வணிக வசதிக்காகவும், வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்துவதாலும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலீத்தீன் பைகளை பயன்படுத்திய 70 கடைகளிடம் இருந்து அபரா தமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள் ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனைகளை மேலும் அதிகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளோம். விதி மீறலில் ஈடுபடும் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கெட் டுப்போன, சுகாதாரம் இல் லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள், கடைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் கீழ மட்டையான் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறு கிறது. இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது இதன் அருகே உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பணையின் உயரம் மேலும் 3 அடி உயர்த்தப்பட்டது. தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை பகுதியில் சேரும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் வயல்கள் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.
மேலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் நிரம்பினால் மலைப்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்தும் தண்ணீர் வந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த திட்டமிட்ட போதே வயல்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிடோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ள வில்லை என்றும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையையும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா நடந்தது.
- ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவளமையத்தில் நடந்தது. கவுன்சிலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர்கள் இனிகோ எட்வர்ட்ராஜா, திலகவதி, விஜயகுமார், மலர்விழி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய பொறுப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார்.
இந்த போட்டிகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார். இதில் வாடிப்பட்டி ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இசை, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி, நாடகம், குழு நடனம், இசைசங்கமம், பலகுரல், வண்ணம் தீட்டுதல், கேலிசித்திரம், வரைந்துவண்ணம் தீட்டுதல், தலைப்பை ஒட்டிவரைதல், கையெழுத்து போட்டி, புகைப்படம் எடுத்தல், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
வட்டார கல்வி அலுவலர்கள் அகிலத்து இளவரசி, ஷாஜகான் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.
- தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பதக்கங்கள், ஷீல்டுகள் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. மாணவர் அணி சார்பில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள், பதக்கங்கள், ஷீல்டுகள் வழங்கினார்.
இதில் செல்லம்பட்டி ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தியாகராசர் கல்லூரியில் 28 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்.
- பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
மதுரை தியாகராசர் கலை கல்லூரியில் 1981- 84-ம் கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.
பின்னர் பலர் தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். முடிவில் தியாகராஜன் நன்றிகூறினார்.






