search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers are suffering"

    • விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் கீழ மட்டையான் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறு கிறது. இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது இதன் அருகே உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பணையின் உயரம் மேலும் 3 அடி உயர்த்தப்பட்டது. தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை பகுதியில் சேரும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் வயல்கள் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

    மேலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் நிரம்பினால் மலைப்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்தும் தண்ணீர் வந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    அவர்கள் மேலும் கூறியதாவது:

    தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த திட்டமிட்ட போதே வயல்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிடோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ள வில்லை என்றும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையையும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டிற்கு அம்பிளிக்கை, அரசபிள்ளைபட்டி, கேதையரும்பு, கீரனூர், சாமியார்புதூர், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து முருங்கை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக இந்த கிராமங்க ளில் செடி முருங்கை அதிக அளவு விளைவிக்கப்படு கிறது.

    விளைச்சல் அதிகரித்து ள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாங்கள் உற்பத்தி செய்த செலவு கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து ள்ளனர்.

    முருங்கைக்காயை பறித்து எடுக்க நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.400 கூலி கொடுக்க வேண்டியு ள்ளது. விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே முருங்கைக்கு நிரந்தர விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம் வரை 1 கிலோ தக்காளி ரூ.100 மற்றும் அதற்கும் மேல் விற்பனையானது. வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது. 14 கிலோ கொண்ட 1 பெட்டி ரூ.700க்கு விற்பனையாகிறது. 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப்படு கிறது. தற்போது தக்காளி செடிகளில் பூக்கள் பூத்துள்ள சமயத்தில் மழை பெய்து ள்ளதால் விலை மீண்டும் அதிகரிக்கும் என விவ சாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதத்தை ஒப்பிடும் போது தக்காளி விலை குறைந்து வருவதால் இது மேலும் விலை குறையும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் காய்கறிகளின் தேவையும் கூடும். அந்த சமயத்தில் பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்து வருவது விவசாயிகளை வருத்த மடைய வைத்துள்ளது.

    • பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • மின்தடை ஏற்பட்டதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்து க்குட்பட்ட கடமலை, மயிலை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்க ளில் வாழை, தென்னை, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலங்களுக்கு வருசநாடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. இந்த டிரா ன்ஸ்பார்மர் பழமையானது என்பதாலும் அதிகப்படி யான வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் திறன் இல்லாமல் இருந்தது.

    எனவே புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வருச நாடு பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க ப்பட்டது. இதனால் மின் வினியோகம் தடை பட்டது.

    எனவே வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர். கடந்த காலங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் வயலில் ஈரப்பதம் தங்கி இருக்கும்.

    தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்ப தால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய உடன் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக பயிர்கள் காய்ந்து காணப்படு கிறது. மேலும் சில நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ள ப்படும். டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நிறை வடைந்து பயன்பாட்டுக்கு வந்தால்தான் மின் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இப்பணி நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். மின் வாரிய அதிகாரிகள் வந்து பணியை பார்வையிட்டு சோதனை அடிப்படையில் இயக்கிய பிறகுதான் மின் வினியோகம் கொடுக்க ப்படும். இதனால் பயிர்கள் முற்றிலும் சேதடையும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே பணியை விரைந்து முடித்து பயி ர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர்.
    • தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

    பணகுடி:

    ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

    இதற்கு பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோய்கள் குணமாவதில்லை. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கூறியும் அதற்கான விளக்கம் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த மர்ம நோய்களுக்கு ராதாபுரம் பகுதிகளில் உள்ள பல தென்னைமர விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு அதற்கான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தால் தென்னை மரங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    • வராகநதி வழியாக சில்வார்பட்டியில் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் சென்றடைகிறது.
    • ஆண்டுக்கு 2 போகம் சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் தற்போது ஒரு போகத்திற்கே தண்ணீர் கிடைக்க வில்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி அருகில் உள்ள சில்வார்பட்டி வேட்டு வன்குளம் கண்மாய் நீரை பயன்படுத்தி நூற்றுக்கண க்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக சோத்துப்பாறை அணையில் இருந்து தற்போது கூடுதல் தண்ணீ ர்திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வராகநதி வழியாக சில்வார்பட்டியில் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் சென்றடைகிறது. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 6 மாதங்கள் வரை வைத்து பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் தற்போது கண்மாய் பலரது ஆக்கிர மிப்பின் பிடியில் சிக்கி உள்ளதால் போதிய தண்ணீரை சேமிக்க முடிய வில்லை. ஆண்டுக்கு 2 போகம் சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் தற்போது ஒரு போகத்திற்கே தண்ணீர் கிடைக்க வில்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    விவசாயத்திற்கு சேமித்து வைக்கும் தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்து தற்போது பயிர்களும் மூழ்கும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை முழுமையாக தூர்வாரி நீரை சேமித்து வைத்தால் இப்பகுதி விவ சாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்ற னர். எனவே வேட்டு வன்குளம் கண்மாயை நம்பி உள்ள விவசாயிகளின் கோரிக்கைைய நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×