என் மலர்
மதுரை
- மதுரையில் வருகிற 18-ந்தேதி மின்தடை ஏற்படும்.
- மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய துணை மின்நிலையங்களில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலை யம், கலெக்டர் அலுவலக வளாகம், கரும்பாலை பகுதிகள், காந்தி மியூசியம், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியி ருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு அமெரிக்கன் கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம், கோரிப்பாளை யம், செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப்.
தமுக்கம் பகுதிகள், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், 30 அடி ரோடு, போஸ்வீதி, யானைக்கல் குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜூவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1,2,3,4,5,6, 7- வது தெருக்கள். சரஸ்வதி தியேட்டர் பகுதிகள். நரிமேடு மெயின்ரோடு, அன்னைநகர், பள்ளிவாசல் தெரு.
கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே. நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு, வைகை காலனி, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள். ராமவர்மா நகர், சுந்தரம் தியேட்டர் ரோடு. மானகிரி, கற்பக நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சதாசிவ நகர், அழகர்கோவில் தாயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
- சரியாக முடிவெட்டவில்லை எனக்கூறி பள்ளி தலைமையாசிரியர் மாணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- பள்ளி முடிந்தபின் வீட்டிற்கு சென்ற மாணவர் தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 900 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்- ஆசிரியைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவர் அந்தப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் அந்த மாணவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது சரியாக முடிவெட்டவில்லை எனக்கூறி பள்ளி தலைமையாசிரியர் மாணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் முட்டிக்கால் போட வைத்து மாணவரை தலைமையாசிரியர் பிரம்பால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதில் மாணவரின் காலில் தழும்புகள் ஏற்பட்டன.
பள்ளி முடிந்தபின் வீட்டிற்கு சென்ற மாணவர் தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகனை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சரியாக முடி வெட்டவில்லை எனக்கூறி மகனை அடித்தது நியாயமற்றது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் தலைமையாசிரியர் மீது புகார் அளிக்க உள்ளோம் என்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
- பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார்.
மதுரை
ஆண்டுதோறும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாள் விழா இளைஞர் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி திறமையான நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கு பல்கலைக்கழகம் வாரியாக முகாம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் இணைந்துள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிக ளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளின் முகாம் திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்து உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தொடங்கி வைத்தார். அன்னை பாத்திமா கல்லூரி யின் தாளாளர் எம்.எஸ். ஷா புதிய தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. பிரதமர் மோடி மாணவர்கள் நலனி லும், தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார். மாணவ- மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.
மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் செந்தில் குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி ஆகியோர் பேசினர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாணவ-மாணவி களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனி யாண்டி, ராமுத்தாய், ஜோதி, உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் சிஸ்டம் என்ஜினீயர் உதய கதிரவன், மனிதவள மேனேஜர் முகமது பாசில் ஆகியோர் செய்தனர். இறுதியில் செந்தமிழ் கல்லூரி பேராசிரியர் பூங்கோதை நன்றி கூறினார்.
- முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது.
மதுரை:
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாநகராட்சியின் தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடைபெற்று உள்ளது. என் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையின்போது மட்டும் ஆஜராகி விட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றிருந்தேன்.
இதற்கிடையே கடந்த செப்டம்பர் 4-ந்தேதி பெங்களூரு பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் என்னை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பல லட்சம் ரூபாய் செலவழித்து தற்போது உயிர் பிழைத்துள்ளேன்.
பல தரப்பிலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.கே.குருசாமி மீது பலமுறை கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரது உயிருக்கு உடனடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது என வாதிட்டனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி, கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. மனுதாரர் மீது தற்போது உள்ள வழக்குகளின் நிலை என்ன? மனு குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.
மதுரை
மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட்பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் ஓடிவந்து வெங்கடேச பெருமாளை கண்டித்து உள்ளார். இந்த முன்வி ரோதத்தில் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு அருகே பெட்ரோல் பங்க் அருகே சென்ற அருண்கு மாரை வழிமறித்து ஆபாசமாக பேசிய வெங்கடேச பெருமாள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில படுகாய மடைந்த அருண்குமாரை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை வேல்முருகன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.
- மதுரை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.
- மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா கொடியேற்றி வைத்தார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் கூட்டுறவு அமைப்புகளின் தற்போ தைய வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. கூட்டுறவு வார விழா குழு தலைவரும், மதுரை மண்டல இணைப் பதிவாளருமான குருமூர்த்தி தலை மை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் ஜீவா கொடியேற்றி வைத்தார். பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு வைக்கப் பட்டது.
விழாவில் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப் பதிவாளர்,முதல்வர் அமிர்தா, மதுரை சரக துணைப்பதிவாளர் பாபு, துணைப் பதிவாளர்(பயிற்சி) விநாசாந்தினி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் தீனத யாளன், கூட்டுறவு சார் பதிவாளர், கண்காணிப்பாளர் உஷா நந்தினி, மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் வெற்றி வேலன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மதுரை எழுமலை பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
- இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (16-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எழுமலை, ஜோதில் நாயக்கனூர், உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, எருமார் பட்டி, ஜோதில் நாயக்கனூர் அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- அரை இறுதி-இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-2023 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
மதுரை
இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்க ளில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இன்று (15-ந்தேதி) நடைபெறும் அரை இறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும், நான் காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.
நாளை (16-ந்தேதி) நடை பெறும் போட்டியில் இரண் டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப் பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு போட்டிகளிலும் வெல்லும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும். இது வரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் வென்று இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்துள் ளது.
இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதை பிர தான பிரார்த்தனையாக வைத்து, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோவிலில் இந்த விசேஷ பூஜை நடத்தப் பட்டது. நேற்று மகா பெரி யவரின் அனுஷ நட்சத்திர நாள் என்பதால், அவரது விக்ரகம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா–தனை நடைபெற்றது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து இந்த பூஜையை நடத்தின. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட் டியில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, கோப் பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலகக்கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அச்சிடப் பட்ட அட்டைகள் தனித்த னியே கொடுக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனரும், ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவருமான நெல்லை பாலு, சங்க செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன், பட்டய உறுப்பினர்கள் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அத்வி மீடியா ஆத வன், மருத்துவர் புகழேந்தி, சுப்பிரமணியன், ராஜ்குமார் உட்பட பெண்கள்,
- தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
- தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.
மதுரை
தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக சென்னை-நெல்லைக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி வருகிற 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சென்னை-நெல்லைக்கும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
மறு மார்க்கத்தில் அதே நாட்களில் நெல்லை- சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் (06068) மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
- மதுரை கலெக்டருக்கு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன் னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரையூர் பகுதி விவசாயிகள் டி.கல்லுப்பட்டி வேளாண்மை அலுவல கத்தில் அரசு மானியத்தில் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை தங்களது விவசாய நிலங்களில் பயிர் செய்தனர். 2 மாதங்கள் காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
குதிரை வாலிக்கு பதிலாக மாட்டு தீவனப்புல் முளைத்து வளர தொடங்கி உள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து வேளாண்மை அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் விதையை மாற்றி தந்து விட்டதாக கூறி விவசாயிகளிடம் சமரசம் செய்து உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக உரிய நஷ்ட ஈடுபெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. விதை மாற்றி கொடுக்கப் பட்டதால் ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்த பகுதிகளில் உரிய ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
- முன்பதிவு செய்துள்ள பயணிகளி டையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.
மதுரை
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் அவரவர் சொந்த ஊர்களுக்கும், பணிபுரியும் இடத்திற்கும் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.
அதேவேளையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீபாவளியை கொண்டாட சொந்தஊர் சென்ற பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் ஊர் திரும்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்திய தோடு, அதனை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி யும் வருகிறார்.
அந்த வகையில் மதுரை பைபாஸ் கிளை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று பொது விடுமுறை என்பதால் ஏராளமானோர் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண் டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிக ளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். டிக்கெட் கட்டணம் குறித்த தகவல்களையும் அதிகாரிக ளிடம் கேட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய் தார்.
மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்பதிவு செய்துள்ள பயணிகளிடையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகா ரிகள் உடனிருந்தனர்.
- சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செய லாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.
சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இனை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக் கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன்ஜூஸ் கடை கென்னடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.






