அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
Published on

சோழவந்தான்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செய லாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இனை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக் கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன்ஜூஸ் கடை கென்னடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com