என் மலர்
நீங்கள் தேடியது "Thirumangalam Govt School"
- சரியாக முடிவெட்டவில்லை எனக்கூறி பள்ளி தலைமையாசிரியர் மாணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- பள்ளி முடிந்தபின் வீட்டிற்கு சென்ற மாணவர் தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 900 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்- ஆசிரியைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவர் அந்தப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் அந்த மாணவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது சரியாக முடிவெட்டவில்லை எனக்கூறி பள்ளி தலைமையாசிரியர் மாணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் முட்டிக்கால் போட வைத்து மாணவரை தலைமையாசிரியர் பிரம்பால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதில் மாணவரின் காலில் தழும்புகள் ஏற்பட்டன.
பள்ளி முடிந்தபின் வீட்டிற்கு சென்ற மாணவர் தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகனை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சரியாக முடி வெட்டவில்லை எனக்கூறி மகனை அடித்தது நியாயமற்றது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் தலைமையாசிரியர் மீது புகார் அளிக்க உள்ளோம் என்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






