என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தகரை கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் காப்புக்காடு வனப்பகுதி உள்ளது
- இந்த வனப்பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க பெண்மணி காப்புகாட்டு வனப்பகுதியின் மையத்தில் பிணமாக கிடந்தார்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தகரை கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் காப்புக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க பெண்மணி காப்புகாட்டு வனப்பகுதியின் மையத்தில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அளித்த தகவலின்படி சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி பச்சையம்மாள் (வயது 57) என தெரியவந்தது.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் கடந்த 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் இவருடைய மகன் முருகன் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் உள்ளதும் சின்ன சேலம் போலீசாருக்கு தெரிந்தது. மேலும், இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க.வின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார்.
- இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி:
அ.தி.மு.க.வில் அடிப்ப டை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் சின்ன மான இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருவதை கண்டித்து உளுந்தூ ர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்ட ப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வத்தை கோமாளி போல சித்தரித்து அவரை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை பொது மக்கள் நின்று கவனித்து சென்று வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் இது குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.
- சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்த போது, பக்கத்து வீட்டிலுள்ள கருப்பன் மகன் பாலு, இந்திரா ஆகியோர் வந்து, எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை தி ருடிவி ட்டாய் என திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
- அவர்கள் தொடர்ந்து, வாய்கூசாமல் திட்டியதால், வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டிகொண்டார்.
கள்ளக்குறிச்சி, மே.5-
தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் வேலைக்குச் சென்றார். அப்பொழுது இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள கருப்பன் மகன் பாலு, இவரது மனைவி இந்திரா ஆகியோர் மாட்டுக் கொட்டகையில் இருந்த ருத்திரபதியிடம் எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த லட்சுமி விரைந்து வந்து தனது மகனை சமாதானம் செய்ததாகவும், அப்போது பாலுவும் அவரது மனைவியும் ருத்திரபதியை பார்த்து வாய் கூசாமல் பொய் பேசுறியே, நீ எல்லாம் செத்து தொலைய வேண்டியது தானே என கூறி மீண்டும் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்ட ருத்திரபதி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து லட்சுமி மீண்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் பாலு அவரது மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த மாணவன் ருத்திரபதி விருகாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்தார். வருகின்ற 8-ந் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
- இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
- வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்
- வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலமாக கிராமங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த மே1-ந் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை உறுதி மொழி எடுத்து கொண்டவாறு வருகின்ற 13-ந் தேதி வரை பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியோரை ஈடுபடுத்தி பெருமளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. வருகின்ற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் சுகாதார மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.
மேலும் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தண்ணீர் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊரக பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டவுள்ளது. 29 - ந் தேதிமுதல் ஜீன் மாதம் 3- ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அவற்றிற்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதேபோல் ஜீன் மாதம் 5- ந் தேதி முதல் 15- ந் தேதி வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
- அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார் இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.
அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ரயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை அண்ணா நகர், விஜயபுரம், திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நயினார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த வாலிபரை சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பது தெரிய வந்தது. பிறகு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.
- ரமேஷ் (வயது36) இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ரமேஷ் (வயது36) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது இதில் நெஞ்சு பகுதி மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மணிகண்டன் (வயது42) திருமணமான இவர் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்
- இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள பணப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42) தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.
அப்போதும் கணவன் -மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் மனைவி சுவிதா கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அன்று முதல் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் மணிகண்டணின் தற்கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
- தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது.
அப்போது கோவில் பூசாரி கையினால் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்ட ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்சியுடன் இருந்தனர்.
நேற்று காலை தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
தங்க தாலி கட்டிய திருநங்கைகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 27 பவுன் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொண்டனர்.
இதே போல் வெள்ளியிலான தாலியை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டனர். தாலியை காணிக்கையாக செலுத்துவதால் கூத்தாண்டவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என திருநங்கைகள் தெரிவித்தனர்.
- சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார்.
- சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சிமாவட்டம் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வர் தங்கராசு. சோடா வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார். இந்த நிலையில் சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்து போனவர் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும் இன்று காலை கடன் கழிக்க தண்டவாளத்தை கடக்கும் போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ெரயில் மோதி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






