சின்னசேலம் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தகரை கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் காப்புக்காடு வனப்பகுதி உள்ளது இந்த வனப்பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க பெண்மணி காப்புகாட்டு வனப்பகுதியின் மையத்தில் பிணமாக கிடந்தார்,
சின்னசேலம் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தகரை கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் காப்புக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க பெண்மணி காப்புகாட்டு வனப்பகுதியின் மையத்தில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அளித்த தகவலின்படி சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி பச்சையம்மாள் (வயது 57) என தெரியவந்தது.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் கடந்த 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் இவருடைய மகன் முருகன் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் உள்ளதும் சின்ன சேலம் போலீசாருக்கு தெரிந்தது. மேலும், இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com