search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவலூர் அருகே  கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக சாலை மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    திருநாவலூர் அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக சாலை மறியல்

    • உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது.
    • பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெறுவதை குறித்து இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது. பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெற இருப்பதால் கோவில் மூலவர் சிலை ஈஸ்வரகண்டநல்லூரில் உள்ளது. இது சம்பந்தமாக 5-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததால் பெரியப்பட்டு கிராம பொதுமக்கள் கடலூர் உளுந்தூர்பேட்டை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் இருந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிடப் பட்டது. இருந்தபோதும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×