என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சசிகுமாரின் மகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
    • தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ள்க்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ந் தேதி இரவு சசிகுமார் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகள், மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி உலகுடையாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, காவல் உதவி ஆய்வாளர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-ராவுத்தநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • அலெக்சாண்டர் (வயது46) விவசாயி. நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்
    • திடீரென அவரை கதண்டு குளவி கடித்ததில் அலெக்சாண்டர் நிலை குலைந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் அருகே உள்ள கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது46) விவசாயி. நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவரை கதண்டு குளவி கடித்ததில் அலெக்சாண்டர் நிலை குலைந்து போனார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து தகவலின் பெயரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

    • ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
    • ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராவத்தநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் 5 பேருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராவத்தநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர். அதற்கு போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து 

    • நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.
    • இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார்.

    மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார். மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் போலீசார்

    இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சங்கராபுரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, விரியூர் கிராமத்தை சேர்ந்த ரோசாலி (வயது60) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • போலீசார் ரோசாலியை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக வேலாயுதம்(52) என்பவரையும் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ஜெயமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் கிராமத்தை சேர்ந்த ரோசாலி (வயது60) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம்(52) என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு பயின்ற விஷ்வா 600-க்கு 575 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அஸ்வினி, நிஷாந்தி, கீர்த்தனா ஆகிய 3 பேரும் 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். விநாயகமூர்த்தி 552 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். மாணவர்கள் விஷ்வா, நிஷாந்தி, லோகேஸ்வரி ஆகியோர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், அஸ்வினி இயற்பியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், பரமேஸ்வரி கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் எடுத்துள்ள னர்.

    மேலும், இங்கு பயின்ற 38 மாணவர்கள் 500 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்துள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ராஜகோபாலன், செயலாளர் ராஜாசுப்பிரமணியம், முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார்.
    • வீரமணி (வயது 53), ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 53), இதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இணை சார்பதிவாளர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இணை சார் பதிவாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளில் கீழ் வீரமணி மற்றும் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • சுதா (46) மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார்.
    • சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கீழ்ப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி சுதா (46) மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் மதுரை மாவட்டம் தத்தனேரி செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மனைவி தமிழ்ச்செல்வி (55), மற்றும் அேத பகுதியைச் சேர்ந்த ராசு மனைவி மூக்காயி (70) ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பெண்களையும் கைது செய்தனர்.

    • கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர்.
    • கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், கலை பறித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.   இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல் அறுவடை செய்யாமலே நெல்மணிகள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.     இதுகுறித்து அந்தப் பகுதி யைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கருப்பகவுண்டர் கூறியதாவது:-

    கூத்தக்குடியில் ஒரு சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும் பல விவசாயி கள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிர் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டது. இனி அறுவடை செய்தால் அறுவடை கூலிக்குகூட பணம் கிடைக்காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே தொடர் மழையால் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும்   இது குறித்து தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு கூறியதாவது:-  மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத் தலின்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நெற்பயிர் சேதமடைந்த விவசாயிகளின் விவரங்க ளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தொடர் மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் நின்ற வாறு ஒரு புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் நகல் ஆகியவற்றுடன் விவசாயிகள் நிவாரண மனுவை இணைத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலரும் தங்களது நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களை அந்தந்த பருவங்களில் பயிர் காப்பீடு செய்து வருகின்ற னர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒவ்வொரு பயி ருக்கும் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படை யில் பயிர்களுக்கு ஏற்ற வாறும், பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இதில் அந்த குறிப்பிட்ட பகுதியில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயி கள் மற்றும் பயிர் பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கும் சில சமயங்களில் பயிர் சாகுபடி செய்யாத விவசாயி களுக்கும் இழப்பீடு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே வரும் காலங்களில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் விதத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என விவசாயிகள் பலரும் கூறு கின்றனர்.

    • சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் நேற்று தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கோளப்பாறை கிராமத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தார். அதன்படி கோளப்பாறை கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வெறி நோய் விழிப்புணர்வு மற்றும் செல்லப்பி ராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையில் டாக்டர் மகேஸ்ராம், டாக்டர் ஆலமரத்தான் மற்றும் குழுவினர் கிராமத்தில் சுற்றித்திரிந்த மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணிகளுக்கும் தெரு நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட்டனர் . அத்துடன் கோளப்பாறை கிராம பொதுமக்களுக்கு வெறிநோய் அறிகுறிகள், தடுப்பூசியின் அவசியம் ,மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட டாக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை யினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார். மேலும் விழுப்புரம் கா ல்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரனின் அறிவுரைப்படி கோள ப்பாறை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமை யில் குழுக்கள் அமைத்து தினசரி தொடர் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது.
    • பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெறுவதை குறித்து இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது. பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெற இருப்பதால் கோவில் மூலவர் சிலை ஈஸ்வரகண்டநல்லூரில் உள்ளது. இது சம்பந்தமாக 5-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததால் பெரியப்பட்டு கிராம பொதுமக்கள் கடலூர் உளுந்தூர்பேட்டை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் இருந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிடப் பட்டது. இருந்தபோதும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×