மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சக்கர நாற்காலி: கள்ளக்குறிச்சி கலெக்டர் வழங்கினார்

திவாகர் (வயது 8) தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்.இவர் தனக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்.
மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கிய போது எடுத்த படம்.
மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கிய போது எடுத்த படம்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருக்கோவிலூர் கொழுந்தராபட்டு கிராம த்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன் திவாகர் (வயது 8) தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுவ னின் மனுமீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிர மணிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்ப ட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்கா லியினை ,மாற்றுத்திறனாளி சிறுவனு க்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். மாற்றுத்தி றனாளி சிறுவன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த உடனே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகா ரிகளுக்கு உத்தரவி டப்பட்டு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சர்க்கர நாற்காலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com