என் மலர்
கள்ளக்குறிச்சி
- ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
- திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரங்கநாதன்(வயது 42) ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் இவர் மீது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஆறுமுகம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் மற்றும் முனிவாழையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் காவல் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
- இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி தியாகதுருகம் அண்ணா நகர் பகுதியில் டீக்கடையில் மது பாட்டில் விற்பனை செய்த தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 52), வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தவர்களான பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (60), வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மா (37), வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (48), சூளாங்குறிச்சி டாஸ்மார்க் அருகே மது பாட்டில் விற்பனை செய்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் ராஜா (39) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேஷ சமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது21) என்பவர் முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் குபேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
- தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மது குடித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி:
திருவள்ளுவர் மாவட்டம் பெண்ணாடம் ஊத்துக்கோட்டை சாவடித் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). சம்பவத்தன்று தினேஷ்குமார் ஊத்துக்கோட்டை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் ெசன்னை நோக்கி சென்றார். அப்போ து உளுந்தூர்பேட்டை பரிக்கல் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மது குடித்து உள்ளார்.
இதனையடுத்து மது போதையில் இருந்த தினேஷ்குமார் அந்த வழி யாக சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விருத்தாசலம் ரெயிவே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ரெயில்வே போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
- பிற சார்புத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்க லைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
- குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பதாக உளுந்தூ ர்பேட்டை உட்கோ ட்டை டிஎஸ்பி மகேசுக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வா ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் இதேபோல் இடைக்கால் பகுதியில் கள்ளத்தனமாக பூ மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பிரியதர்ஷினி இளம் ஆசிரியர் கோட்டை பகுதியில் எரியூர் கிராம த்தைச் சேர்ந்தவர் சின்ன ப்பையன் நம்பிக்கை மேரி திடீர்குப்பம் ராஜா ஆகியோர்களை கைது செய்தனர். மேலும் இந்த குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.
- போலீசார் நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சேஷசமுத்திரம், தியாகராஜபுரம், சிவபுரம், நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(வயது 42), சுப்பிரமணி்(43), தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்(45), கோபால் (48), நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு(37), திருமுருகன்(32), சிவபுரம் கிராமம் பச்சையப்பன்(36), விரியூர் கிராமம் டேவிட்ஆனந்தராஜ்(41) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
- வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.
வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
- பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் , பிரபு , இளையராஜா.
- இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் (வயது 41), பிரபு (38), இளையராஜா (35). இவர்கள் சகோதரர்கள். விவசாயம் செய்து வருகின்றனர். இதில் கமலக்கண்ணனுக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்களுக்குள் சொத்து பிரிப்பதில் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து பாகப் பிரிவினை பத்திரம் எழுதி கேட்டுள்ளார். இதில் கமலக்கண்ணனுக்கும் இளையராஜாவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், அருகிலிருந்த இரும்பு கம்பியால் இளையராஜாவை தாக்கினார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த இளையராஜா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கமலக்கண்ணனுடன் இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சொத்தை பிரித்து கேட்ட தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன இளையராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து கேட்டு அவரது தந்தை ஏழுமலையை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
- பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டனர்.
- 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வாசுதேவனூர் பஸ் நிலையம் அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக உள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் க ட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் தாசில்தார் இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தனபால் மீது தாசில்தார் இந்திரா புகார் அளித்தார். அதன் பிறகு நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் பகுதியில் பவுத்த மாநாட்டிற்காக அவ்வழியே வந்த திருமாவளவன் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிவிட்டு சென்றார்.
அப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட போலீசா ருடன் தாசில்தார் இந்திரா விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமா வளவன் ஏற்றிசென்ற கொடிக் கம்பத்தை அகற்றினார். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
- ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொ ண்டனர்.
- குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதிகளில் கஞ்சா விற்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீ. கூட்டு ரோட்டில் இருந்து சின்னசேலம் செல்லும் சர்வீஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பு ரோஸ் (வயது 25), வேல்முருகன் மகன் நவீன் ராஜ் (18) என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர்.
- சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர். அவரின் குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணை கரை கோட்டாலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.
தொடர்ந்து அணையில் இறங்கி வலையை வீசி விரால், ஜிலேப்பி, கட்லா, ரோகு கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 7000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இப்பகுதி திருவிழா போல காட்சியளித்தது.






