என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • முருகன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் மனம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன்( வயது 55) தொழிலாளி. இவருக்கு 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி அனுராதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தை களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் போகாமலும் அப்படியே வேலைக்கு போனாலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி அனுராதா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதனால் விரத்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய முருகனைக் காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சை க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த அரகண்ட நல்லூர் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சங்கராபுரம், மே.20-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன்(75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை அமைப்பாளர் கஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத்கரீம், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்பு குழுவினர்கள் மணி, கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறியூட்டப் பட்ட அரிசியை உடனடி யாக நிறுத்த வேண்டும், நீர் நிலை களை தனியாருக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் அரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு நிர்வாகி சரண்ராஜ் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
    • திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரங்கநாதன்(வயது 42) ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் இவர் மீது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஆறுமுகம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதனையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் மற்றும் முனிவாழையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் காவல் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி

    தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி தியாகதுருகம் அண்ணா நகர் பகுதியில் டீக்கடையில் மது பாட்டில் விற்பனை செய்த தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 52), வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தவர்களான பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (60), வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மா (37), வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (48), சூளாங்குறிச்சி டாஸ்மார்க் அருகே மது பாட்டில் விற்பனை செய்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் ராஜா (39) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேஷ சமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது21) என்பவர் முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் குபேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
    • தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மது குடித்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவள்ளுவர் மாவட்டம் பெண்ணாடம் ஊத்துக்கோட்டை சாவடித் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). சம்பவத்தன்று தினேஷ்குமார் ஊத்துக்கோட்டை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் ெசன்னை நோக்கி சென்றார். அப்போ து உளுந்தூர்பேட்டை பரிக்கல் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மது குடித்து உள்ளார்.

    இதனையடுத்து மது போதையில் இருந்த தினேஷ்குமார் அந்த வழி யாக சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விருத்தாசலம் ரெயிவே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ரெயில்வே போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • பிற சார்புத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்க லைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பதாக உளுந்தூ ர்பேட்டை உட்கோ ட்டை டிஎஸ்பி மகேசுக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வா ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் இதேபோல் இடைக்கால் பகுதியில் கள்ளத்தனமாக பூ மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பிரியதர்ஷினி இளம் ஆசிரியர் கோட்டை பகுதியில் எரியூர் கிராம த்தைச் சேர்ந்தவர் சின்ன ப்பையன் நம்பிக்கை மேரி திடீர்குப்பம் ராஜா ஆகியோர்களை கைது செய்தனர். மேலும் இந்த குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.

    • போலீசார் நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சேஷசமுத்திரம், தியாகராஜபுரம், சிவபுரம், நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(வயது 42), சுப்பிரமணி்(43), தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்(45), கோபால் (48), நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு(37), திருமுருகன்(32), சிவபுரம் கிராமம் பச்சையப்பன்(36), விரியூர் கிராமம் டேவிட்ஆனந்தராஜ்(41) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
    • வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.

    வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    ×