திருக்கோவிலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி மாயம்

சசிகுமாரின் மகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருக்கோவிலூர் அருகே  9-ம் வகுப்பு மாணவி மாயம்
Published on

கள்ள்க்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ந் தேதி இரவு சசிகுமார் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகள், மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com