என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • ரிஷிவந்தியம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியத்தை அடுத்த லாலாபேட்டையை சேர்ந்த வர் சுந்தரபாண்டியன் (வயது 25) விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் கீழத்தேனூரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். கீழத்தேனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் சுந்தரபாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச் சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தர பாண்டியன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் அய்யனார் பாளை யத்தை சேர்ந்த சக்திவேல் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார்.
    • விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் கனகவள்ளி (வயது 20). நர்சிங் முடித்துள்ளார். இவருக்கும் பக்கத்து கிராமமான பாட்சா பாளையத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுகனேஷ் (25) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு கனக வள்ளியின் பெற்றோர், சுகனேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சீர் வரிசை வைத்து, கனகவள்ளியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த கனகவள்ளி சோகமாகவே இருந்துள்ளார். புதியதாக திருமணமாகி கணவனை பிரிந்ததால் சோகமாக இருப்பதாக பெற்றோர் கருதினர். 

    இந்நிலையில் வீட்டில் படுத்துறங்கிய கனகவள்ளி இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வீட்டிலிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கிருந்த மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறியழுத காட்சி அக்கம் பக்கம் இருந்தவர்களிடையே நெகி ழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை போலீ சார், கனகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும், கனவள்ளி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சிறுபாக்கம், பாட்சா பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவரது வீட்டருகே வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இருவருக்கும் இடையே சிறிய சந்து தொடர்பாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் லோக நாதன் தரப்பினருக்கும், ஆறுமுகம் தரப்பினரு க்குமிடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறுமுகத்திற்கு கை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கிளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறெதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆற்றங்கரையில் நடுமடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் 35 வயதுடைய பெண் பிணம் கரை ஒதுங்கியது.
    • கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் தேவனூர் உள்ளது. இங்குள்ள கல்பொடை ஆற்றங்கரையில் நடுமடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் 35 வயதுடைய பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கரியாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதனால் இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன.
    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் ஊற்று தண்ணீர் இல்லை. மற்றொரு கிணற்றில் உள்ள குடிநீர் மூலம் மட்டுமே ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தினமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
    • மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மனைவி மதியழகி (வயது 45). இவரது நிலத்துக்கு அருகே அதே கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன்கள் பரமசிவம், ஆறுமுகம், செந்தில் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. சம்பவத்தன்று பரமசிவம் மற்றும் இவரது சகோதரர்கள் சேர்ந்து பொதுப்பாதையில் இருந்த மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

    இதை தட்டிக்கேட்ட மதியழகி, அவரது கணவர் சம்பத் ஆகியோரை பரமசிவம் மற்றும் அவரது சகோதரர்கள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
    • ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொ ழுது பெறப்படுகின்றன. 10-ம் வகுப்பு தோல்வி,  தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினை த்தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்தபின்னர் வேலைவாய்ப்பின்றி காத்தி ருக்கும் இளைஞர்க ளுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக் க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200-ம் ,10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400-ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மேல்நிலைகல்வி தேர்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000- ம் வழங்க தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெ றவிரும்பும் மனுதாரர்கள், தங்களின்வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வி ண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்க ளிலும், இலவசமாக பெற்று க்கொள்ளலாம்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெ ற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்ற வர்களா வார்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெ றுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடங்கு ம் காலா ண்டிற்கான உதவித்தொகை விண்ண ப்பங்களை மனுதாரர்கள் 31.8.2023 தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியம யமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இத் தகவலை கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
    • முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு இலக்கு அடையும் பொருட்டு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு முகாம் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு 18 வயதிலிருந்து 35 வயது வரை ஊராட்சியிலிருந்து தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் 5 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முகாமில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் திருமால்வளவன் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 500-க்குமேற்ப்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
    • ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 171மலை கிராமங்களில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வராயன் மலையில் 8ஆயித்துக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உயர்நிலை, மேல்நிலை, மற்றும் கல்லூரிக்கல்வி பயில சுமார் 500-க்குமேற்ப்பட்டோர் மலைவாழ் சாதி சான்றிதழ் கேட்டு கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் வருவாய் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உயர்கல்வி பயில முடியாமல் அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள் அவதிஅடைந்துள்ளனர்.

    முன்பெல்லாம் சாதி சான்று கேட்டு விண்ண ப்பித்தால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவாய் துறையி னர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ண ப்பித்தும் இதுவரை நேரடி விசாரணைக்கு அல்லது ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ஆதிகேசவன் (வயது 22) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆதி கேசவன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதிகேசவனை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். ஆதிகேசவன் மீது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய உதயசூரியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • டேனியல்பாபு, அந்தோணியம்மாள் கூலி வேலை செய்து வருகி ன்றனர்.
    • வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த டேனியல்பாபு, அந்தோணியம்மாள். கூலி வேலை செய்து வருகி ன்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். முதல் 2 பெ ண்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது பெ ண்ணான ஆஷா (19). இவர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியி ல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று பெற்றோருடன் வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஷாவை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஆஷாவை தேடி வருகின்றனர்.

    • சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • சதீஷ்குமார் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருபாலபந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு அந்தோணி முத்து உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாடாம் பூண்டி கூட்டுச்சாலை அருகே சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார் (வயது 35) மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 270 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்துவதற்கு பயன்படுத்திய டாட்டா ஏ.சி.வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ×