கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்

போலீசார் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது:  மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ஆதிகேசவன் (வயது 22) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆதி கேசவன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதிகேசவனை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். ஆதிகேசவன் மீது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய உதயசூரியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com