என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது.
    • கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் காற்றின் வேகம் மாறு பாடு காரணமாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 

    உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. தற்போது நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது. இதனையடுத்து நாங்கள் நெல் நாற்று நடுவதற்கு ஏற்றார் போல் இந்த மழை உள்ளது என்று கூறினர். இந்த மழை உளுந்தூர்பேட்டை, நலமருதூர், சேந்தநாடு, மடப்பட்டு, எலவனாசூர்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் நீண்டநாட்களாக தண்ணீர் வரத்து இல்லாத கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் அங்கு சென்று வரண்ட கிடந்த ஆறுக்கு தண்ணீர் வரதொடங்கியதை பார்த்துவிட்டு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கள்ளக்குறிச்சியில் 12, தியாகதுருகம் 38, விருகாவூர் 20, கச்சிராயப்பாளையம் 8, அரியலூர் 25, கடுவனூர் 9, கலையநல்லூர் 31, கீழ்பாடி 21, மூரார்பாளையம் 5, மூங்கில்துறைப்பட்டு 24, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 23, வடசிறுவலூர் 24, மணிமுக்தா ஆறு அணை 23.5, வானாபுரம் 26, மாடாம்பூணடி 43 , மணலூரபேட்டை 29, திருக்கோவிலூர் 49, திருப்பாலபந்தல் 37, வேங்கூர் 44, ஆதூர் 17, எறையூர் 15, ஊ.கீரனூர் 14 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 49 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மூரார்பாளை யத்தில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 577.5 மி.மீட்டராகவும், சராசரி 24.06 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

    • 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டவேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்டமாற்று த்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புறவாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திறனா ளிகளு க்கான சிறப்புதனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இதில்தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்த குதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெ றுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார்.

    விக்கிரவாண்டி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 28). கர்ப்பிணியான இவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தையின் கையில் வழக்கத்தைவிட தசை அதிகமாக இருந்ததால், குழந்தைகள் வார்டிற்கு தாய் மற்றும் சேயை மாற்றினர். அங்கிருந்த அனைத்து படுக்கையிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் ராதிகா மற்றும் அவரது குழந்தைக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி பதில் அளித்தார். இது தொடர்பாக இருவருக்குமிடையே டுவிட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது.

    இந்நிலையில், வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்த ராதிகா மற்றும் அவரது குழந்தைக்குக்கு தனி அறை ஒதுக்கிடு செய்ய மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார். அங்கு குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
    • சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன்(35). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் இருசக்கர வாகனத்தை திருப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல்(34) திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராஜ்கமலை கைது செய்து, மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தில் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ராஜ்கமலிடன் விசாரணை செய்து வருகிறார்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
    • 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் அடங்கிய 287 மனுக்களும், மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.

    மொத்தம் 314 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாரா யணன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் .
    • மறைவான பகுதியில் சாராயம் விற்றவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கடலூர்:

    குள்ளஞ்சாவடி போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் . அதில் சுப்ரமணியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார்மறைவான பகுதியில் சாராயம் விற்ற நடுத்தெருவை செர்ந்த சின்ராஜ் மனைவி சத்தியவாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றபோது அதிகாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல், பலியானர்வர்களின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்ததால், கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம் தலைமையில், உதவி பொறியாளர் ஷர்மா மற்றும் சாலை பணியாளர்கள் ரிஷிவந்தியத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

    • கலியன் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று நேற்று வீடு திரும்பினார்.
    • கொக்கு பிடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே பாதூரை சேர்ந்தவர் கலியன் (வயது 62). விவசாய க் கூலி. இவர் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று நேற்று வீடு திரும்பினார். அப்போது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி மற்றும் மகன்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கலியன், கொக்கு பிடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை, ஜெய ராமன் தலைமையிலான போலீசார் தொண்டனந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அடைக்கலராஜ் (வயது 35) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அடைக்கலராஜிக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் சாராயத்தை கடத்தி வந்து விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து அடைக்கலராஜ் மூலம் அரவிந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனைக்கு சாராயம் கொண்டுவருமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்தி வந்த அரவிந்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ், அரவிந் ஆகியோரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
    • நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35), மகள் தேவதர்ஷினி (11) ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலைக்கு தேன்மொழி சென்றார். அப்போது அவரது மகள் தேவதர்ஷினி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தானும் 100 நாள் வேலை செய்வதாகவும் கூறினார்.

    உங்கள் வீட்டின் பீரோவில் ஒரு சீட்டு உள்ளது. அதனை உன்னுடைய அம்மா எடுத்துவரச் சொல்லி என்னை அனுப்பினார் என மர்மநபர் தேவதர்ஷினியிடம் கூறினார். இதனை நம்பிய குழந்தை தேவதர்ஷினி மர்மநபரிடம் பீரோ சாவியை கொடுத்தார். சிறிது நேரம் கழித்து சீட்டை எடுத்துக்கொண்டேன் எனக் கூறி பீரோ சாவிலை தேவதர்ஷினியிடம் கொடுத்துவிட்டு சென்றார். 100 நாள் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தேன்மொழியிடம், தேவதர்ஷினி நடந்தவற்றை கூறினார். நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார். அதிலிருந்த 6 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மகள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேன்மொழி ஊர் முழுவதும் தேடினார். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், நகையை கொள்ளையடித்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். பட்டம் பகலில் வீட்டிலிருந்த 11 வயது பெண் குழந்தையை ஏமாற்றிய மர்மநபர், நூதன முறையில் நகையை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தி ற்கான விண்ணப்ப ப்பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்க ப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 766 ரேஷன் கடைகளில் 4,34,663 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், முதற்கட்ட மாக 580 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 4 வரை நடைபெற்ற முகாம்களில் 80 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில் 41 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 36,166 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சின்னசேலம் வட்டத்தில் 39 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 31,478 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், சங்கராபுரம் வட்டத்தில் 52 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 46,690 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், கல்வராயன்மலை வட்டத்தில் 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ண ப்பங்களும், உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 18 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 16,787 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 25 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 21,285 ரேஷன் கார்டுதா ரர்களின் விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 186 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது தவிர, அனைத்து தாசில்தார் அலுவலக ங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்ப ட்டுள்ளன. எனவே அந்தந்த பகுதி பொதுமக்கள் அவர்களது தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×