search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry apes"

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
    • நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35), மகள் தேவதர்ஷினி (11) ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலைக்கு தேன்மொழி சென்றார். அப்போது அவரது மகள் தேவதர்ஷினி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தானும் 100 நாள் வேலை செய்வதாகவும் கூறினார்.

    உங்கள் வீட்டின் பீரோவில் ஒரு சீட்டு உள்ளது. அதனை உன்னுடைய அம்மா எடுத்துவரச் சொல்லி என்னை அனுப்பினார் என மர்மநபர் தேவதர்ஷினியிடம் கூறினார். இதனை நம்பிய குழந்தை தேவதர்ஷினி மர்மநபரிடம் பீரோ சாவியை கொடுத்தார். சிறிது நேரம் கழித்து சீட்டை எடுத்துக்கொண்டேன் எனக் கூறி பீரோ சாவிலை தேவதர்ஷினியிடம் கொடுத்துவிட்டு சென்றார். 100 நாள் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தேன்மொழியிடம், தேவதர்ஷினி நடந்தவற்றை கூறினார். நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார். அதிலிருந்த 6 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மகள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேன்மொழி ஊர் முழுவதும் தேடினார். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், நகையை கொள்ளையடித்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். பட்டம் பகலில் வீட்டிலிருந்த 11 வயது பெண் குழந்தையை ஏமாற்றிய மர்மநபர், நூதன முறையில் நகையை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வட மாநில வாலிபர்களுக்கு அடி உதை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தேவி.

    இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தேவியிடம் நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி உள்ளனர்.

    இதனையடுத்து தேவி பீரோவில் இருந்து 3 பவுன் தங்க நகைகளை எடுத்து வந்து வட மாநில வாலிபர்களிடம் பாலிஷ் போடுவதற்காக கொடுத்துள்ளார்.

    வாலிபர்கள் நகைக்கு பாலிஷ் போடுவது போல ஏமாற்றி தேவியிடம் கவரிங் நகைகளை கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாட மாநில வாலிபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதை அறிந்த தேவி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் துரத்திச் சென்று வட மாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தரும அடி கொடுத்தனர். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வட மாநில வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    போலீசார் வட மாநில வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×