என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது
- போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் .
- மறைவான பகுதியில் சாராயம் விற்றவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடலூர்:
குள்ளஞ்சாவடி போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் . அதில் சுப்ரமணியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார்மறைவான பகுதியில் சாராயம் விற்ற நடுத்தெருவை செர்ந்த சின்ராஜ் மனைவி சத்தியவாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






