என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவில் பெரிய ஆண்டிச்சி என்கிற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கோமுகி நதிக்கரையில் இருந்து பெண்கள் 108 பால்குடங்களை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிகாமணி வரவேற்றார். பாலமுருகன், பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும், மணலூர் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணிகண்டன் (வயது 46), சதீஷ்(30) மற்றும் வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலம்பரசன் (38) ஆகியோரின் 3 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    • எடக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் காசாம்பூ (வயது 75). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது மகள் சுகந்தியின் பராமறிப்பில் வாழ்ந்து வந்தார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சுகந்தி டீக்கடை வைத்துள்ளார். டீக்கடையில் இருந்து காசாம்பூ நடந்து சென்றார்.

    அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது, இதில் சாலையின் அருகில் விழுந்த காசாம்பூ பலத்த காயங்களுடன் துடிதுடித்து இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
    • பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை கிளாபாபாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 23). அதே ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், சாமி ஊர்வலத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, சீரியல் பல்புகள் ஒளிராமல் நின்று போனது. இதனையடுத்து, அதனை சரிசெய்யும் பணியில் பச்சையப்பன் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பச்சையப்பன் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பச்சையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெகடர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.
    • முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றினால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனவே அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும்.

    பயன்படுத்தப்படாத குவாரிகளில் உள்ள பள்ளங்களில் குழந்தைகள், இளைஞர்கள்குளிப்பதை தடுத்திட வேண்டும். இதற்காக குவாரிகளை சுற்றிலும் வேலி அமைத்து எச்சரிக்கை பதாகைகளை வைத்திட குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூடிடவும், பள்ளங்களை சுற்றிலும் தடுப்புகளை நிறுவிடவும் எச்சரிக்கை வாசகங்களை வைத்தி டவும், மேம்படுத்தப்பட்ட பிரதிபலிப்பான்களை வைத்திடவும் வேண்டும். பாதுகாப்பு விழிப்புணர்வைஅதிகரிக்க அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயன்பாடற்றதிறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற குவாரி குழிகளை கண்டறிந்து வருகின்ற 25- ந் தேதிக்குள் பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி (வயது 55) என்பவர், தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் பன்னீர்செல்வியை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
    • 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் புது உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39) மற்றும் கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) என்பதும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.
    • சபரியை அதே ஊரை சேர்ந்தவர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ச.செல்லம்பட்டு ஊராட்சியில் கடந்த மாதம் 21-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிக்கு வராத 10-க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு வந்ததாக முறைகேடாக பதிவு செய்து அரசு பணத்தை கைப்பற்ற திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி(வயது35) சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நின்றுகொண்டிருந்த சபரியை அதே ஊரை சேர்ந்த முத்தமிழரசன், கோகுலன், ரகுராம், கவியரசன், தனசேகர், கலைச்செல்வி ஆகியோர் ஆபாசமாக ேபசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரி கொடுத்த புகாரின் பேரில் முத்தமிழரசன் உள்பட 6 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 41). விவசாயி. நேற்று இரவு மழை பெய்த போது இவரும், இவரது மனைவி ஜெயாவும் குடை பிடித்தவாறு நடந்து சென்றனர். அப்போது கெடிலம் கூட்ரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது. இதில் வேலாயுதம் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளனர்.
    • திரு மணத்திற்காக வைத்திருந்த பணம், நகை ஆகியவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள விளக்கூர் புது காலனி பகுதி யை சேர்ந்தவர் தண்டேக் காரன் மகன் முருகவேல் (வயது 30) கொத்த னார். இவர் கடந்த 7- ந் தேதி தனது மனைவி லட்சுமியுடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை அவரது உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளனர். விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த பூட்டையும் உடைத்து அதிலிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். விசார ணையில் முருக வேலின் அக்காள் மகள் திரு மணத்திற்காக வைத்திருந்த பணம், நகை ஆகியவைகள் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
    • 3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிய 1 வட்டாரத்திற்கு தலா 1 நபர் வீதம் 9 வட்டாரத்திற்கு 9 வட்டார வள பயிற்றுனர், பணியிடத்திற்கு பணி நிய மனம் செய்யப்பட வுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25 வயது வயது நிரம்பியிருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம், சமுதாய பயிற்று னர், வாழ்வாதார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள பயிற்றுனர்கள், இதர அரசுதுறை சார்ந்த பயிற்றுனர் (முன்னாள் வட்டார வள பயிற்றுனர் களுக்கு அனைத்து காரணி களையும் கருத்தில் கொண்டு) பணியில் முன்னுரிமை வழங்கப்படும். எம்.எஸ். ஆபிஸ் தெரிந்து இருத்தல் வேண்டும். ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்த தெரிந்திருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு படிக்க, எழுத மற்றும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம், நிறை மதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 213 என்ற முகவரிக்கு 12.08.2023-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×