வட்டார வள பயிற்றுனர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட கலெக்டர் தகவல்

குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம்
வட்டார வள பயிற்றுனர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிய 1 வட்டாரத்திற்கு தலா 1 நபர் வீதம் 9 வட்டாரத்திற்கு 9 வட்டார வள பயிற்றுனர், பணியிடத்திற்கு பணி நிய மனம் செய்யப்பட வுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25 வயது வயது நிரம்பியிருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு, கூட்ட மைப்பு டன் பணியாற்றிய அனுபவம், சமுதாய பயிற்று னர், வாழ்வாதார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள பயிற்றுனர்கள், இதர அரசுதுறை சார்ந்த பயிற்றுனர் (முன்னாள் வட்டார வள பயிற்றுனர் களுக்கு அனைத்து காரணி களையும் கருத்தில் கொண்டு) பணியில் முன்னுரிமை வழங்கப்படும். எம்.எஸ். ஆபிஸ் தெரிந்து இருத்தல் வேண்டும். ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்த தெரிந்திருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு படிக்க, எழுத மற்றும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம், நிறை மதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 213 என்ற முகவரிக்கு 12.08.2023-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com