search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pathirakali Amman"

    • பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவில் பெரிய ஆண்டிச்சி என்கிற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கோமுகி நதிக்கரையில் இருந்து பெண்கள் 108 பால்குடங்களை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி காப்பு கட்டு வைபவமும், 21-ந் தேதி இரவு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி வைகையாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு ஊராட்சி கவுன்சிலர் செல்வராணி கந்தசாமி சில்வர் வாளி, சட்டிகளை பரிசாக வழங்கினார். மாலையில் முளைப்பாரியை வைகையாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    ×