என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலிஷ்போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள பெருங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி செந்தாமரை. நேற்று மாலை செந்தாமரை மட்டும் வீட்டில் இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய செந்தாமரை 5 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்தார்.
நகைகளுக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் குடிக்க தண்ணீர் கொண்டு வரக்கோரி செந்தாமரையிடம் கூறினர்.
இதையடுத்து செந்தாமரை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றார். உடனே 2 வாலிபர்களும் 5 பவுன் நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
உத்திரமேரூர் அருகே உள்ள காரணிமண்டபத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வயலூர் கூட்டுரோடு அருகே வந்து கொண்டிருந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ஸ்டாலின் ஓட்டி வந்த பைக் மீது மோதினார். இதில் ஸ்டாலினும், பிரேமாவும் கீழே விழுந்தனர்.
உடனே அவன் பிரேமா அணிந்திருந்த நகையை பறித்து தப்பி ஓடிவிட்டான். அவன் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து பெருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குரோம்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase
தாம்பரம்:
அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று மாலை தனது நண்பரை பார்க்க குரோம்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பஸ் டிரைவர் சுந்தரராஜன் (68) கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.
எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுவாஞ்சேரி:
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டு வந்த திருமால்பூர் பாஸ்ட் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்பதால் அலுவலகம் செல்பவர்கள் இந்த மின்சார ரெயிலில் அதிகமாக பயணம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். எக்ஸ்பிரஸ் பாதையில் மீண்டும் மின்சார ரெயில்களை இயக்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை நோக்கி வந்த காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலையும், மின்சார ரெயிலையும் மறித்தனர். இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
பயணிகள் போராட்டம் காரணமாக புதுவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிங்கபெருமாள் கோவிலிலும், திருமால்பூர் ரெயில் மறைமலைநகரிலும் நிறுத்தப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு பயணிகள் மறியலை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கம்போல் மின்சார ரெயில் போக்குவரத்து நடந்தது. #tamilnews

காஞ்சீபுரத்தில் நூதன முறையில் பெண்கள் மணல் திருட்டில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கலெக்டர் கூறி்யுள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு உள்ளிட்ட ஆற்றுபடுகைகளில் லாரிகள், மாட்டுவண்டிகள், டிராக்டர்கள் ஆகியவைகள் மூலம் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின் பேரில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசாரின் கடும் நடவடிக்கையால் மணல் திருட்டு பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டது என்றாலும் கோணிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் சிலர் மணல் திருடி விற்று வருகின்றனர். இது காவல் துறையினருக்கு சவாலாக உள்ளது.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆறு, ஏரிகளில் மணல் திருட்டை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று கேட்டுக் கொண்டனர்.
இருசக்கர வாகனங்கள் மூலம் செய்யப்படும் மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டது. என்றாலும், தற்போது பெண்கள் கூடையில் மணலை திருடி மேற்பகுதியில் காய்கறிகளை வைத்து கொண்டு மணல் திருடி செல்கின்றனர்.
இது போன்று செல்பவர்கள் அனைவரையும் சோதனையிடுவது சாத்தியமில்லை. பெண்களே மணல் திருட்டில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இது போன்று மணல் திருட்டில் பெண்கள் ஈடுபடவோ, ஈடுபடுத்தப்படவோ கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

தாம்பரம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். #Accident #CollegeStudentDeath
தாம்பரம்:
சென்னையை அடுத்த அம்பத்தூர் ஒரகடம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன் ஷாம் சுந்தர் (வயது 18). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அம்பத்தூர், கள்ளிக்குப்பம் சீனிவாச நகர் சிவசக்தி தெருவை சேர்ந்தவர் பரத் (18). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நண்பர்களான இருவரும் நேற்று காலை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் மோட்டார்சைக்கிளில் தாம்பரம் நோக்கி சென்றனர். மோட்டார்சைக்கிளை ஷாம் சுந்தர் ஓட்டினார். இரும்புலியூர் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஷாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே பலியானார். பரத் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரத்தை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் ஷாம் சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆவடி அருகே இளம்பெண் தூக்ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடக்கிறது. #Suicide
ஆவடி:
ஆவடியை அடுத்த வீராபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 31). இவருடைய மனைவி மாலதி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு சதீஷ்குமார் (5) என்ற மகனும், கனிஷ்கா (3) என்ற மகளும் உள்ளனர்.
டில்லிபாபு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் வாரந்தோறும் சனிக்கிழமை காலை வந்து 2 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கோவை புறப்பட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலதி உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் அவ்வப்போது நள்ளிரவில் எழுந்து புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவருடைய உறவினர்கள் அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்ததோடு, பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு அழைத்து சென்று பரிகாரங்களும் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் சேலையால் தூக்கு போட்டு மாலதி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும், டில்லிபாபுவுக்கும், மாலதிக்கும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. தலைமையிலும் விசாரணை நடக்கிறது.

ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை மண்டபம் இடிப்பு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்ட விவகாரம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை மண்டபம் இடிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், முறையற்ற வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவபக்தர் டில்லிபாபு என்பவர் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குற்றம் சாட்டப்பட்ட இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, வேலூர் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சிபுரம் துணை ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், பொறியியல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் மண்டப இடிப்பு குறித்து விசாரணை நடத்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் செயல் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது எதுவும் கூற மறுத்து விட்டனர்.
இக்கோவிலில் இருந்த பழைமை வாய்ந்த சோமஸ்கந்தர் சிலை மாற்றப்பட்டதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் நேரடியாக கோவிலுக்கு பலமுறை வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மண்டப இடிப்பு குறித்து இப்பிரிவின் டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்ட விவகாரம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அருகே மாநகராட்சி ஊழியர் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரம் ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவர் தேனாம்பேட்டையில் மாநகராட்சி ஊழியராக பணிபுரிகிறார்.
இன்று காலை அவர் காலில் ரத்தகாயத்துடன் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த டாக்டர்களிடம் ‘‘வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கூரையை பிய்த்துக் கொண்டு பறந்து வந்த ஏதோ ஒரு பொருள் காலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து ராஜேந்திரனின் காலை டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தனர். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.
இவரது வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ராணுவம் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வார்கள்.
அவ்வாறு பயிற்சி செய்யும் போது துப்பாக்கி குண்டு இவ்வளவு தூரம் பாய்ந்து வந்து தாக்க கூடிய சாத்தியம் இல்லை. எனவே இந்த துப்பாக்கி குண்டு எங்கிருந்து யாரால் சுடப்பட்டது என தெரியவில்லை.
துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வெடித்த தோட்டாக்களில் இருந்து வீணாகி கீழே கிடக்கும் செம்பு உலோகத்தை சிலர் பொறுக்குவது வழக்கம். அதற்கு அனுமதி இல்லை. இருந்தாலும் சிலர் அதிகாரிகளுக்கு தெரியாமல் அத்துமீறி நுழைந்து அத்தகைய செயலில் ஈடுபடுவார்கள். அதுபோன்று செம்பு உலோகம் பொறுக்க சென்ற ராஜேந்திரன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததா? என்பன போன்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்திரமேரூர் அருகே குடிபோதை தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (50). விவசாயி.
நேற்று இரவு அவர் அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் குடிபோதையில் வந்தார்.
அவரிடம், முருகானந்தம் மது குடித்து வந்தது தொடர்பாக அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.
பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்தது பற்றி கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் முருகானந்தம் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவரை வெளியே அழைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த முருகானந்தத்தை உத்திரமேரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், வழக்குப் பதிவு செய்து நடராஜ், அவரது மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.#Gold #Smuggling
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல கடத்த இருந்த வெளிநாட்டு பணமும் சிக்கியது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
சார்ஜாவில் இருந்து நேற்று திருவனந்தபுரம் வழியாக ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த முகமது ரசூல்(வயது 53) என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது சூட்கேசை சோதனை செய்தபோது அதில் எதுவுமில்லை.
ஆனால் அவர் கழுத்து வலிக்காக கட்டியிருந்த பெல்ட் மீது சந்தேகம் ஏற்பட்டு, அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து முகமது ரசூலை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். யாருக்காக தங்கத்தை கடத்திவந்தார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறவந்த சென்னையை சேர்ந்த நாகூரான்(30) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் 500 மதிப்புள்ள சவுதி ரியால்கள் 100 மறைத்துவைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள அந்த சவுதி ரியால்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகூரான் விமான பயணத்தை ரத்துசெய்து, கடத்தப்பட இருந்தது ஹவாலா பணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் பெண் தகராறில் எரியில் புதைக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
தாம்பரத்தை அடுத்த கடப்பேரி முத்தமிழ் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30). தாம்பரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று அவரது தலை மட்டும் துண்டிக்கப்பட்டு ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 1-வது தெருவில் கிடந்தது.
கூடுவாஞ்சேரி போலீசார் தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை காணவில்லை. அதனை தேடி வந்தனர்.
கூடுவாஞ்சேரி, வண்டலூர் காட்டுப்பகுதி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரப்பாக்கத்தை அடுத்த மீனாட்சிபுரம் அய்யஞ்சேரி ஏரியில் சந்தேகத்திற்கிடமாக மூடப்பட்டு இருந்த இடத்தை போலீசார் கண்டு பிடித்தனர்.
அதில் தோண்டி பார்த்த போது தலை இல்லாத உடல் மட்டும் இருந்தது. அது கமலக்கண்ணனின் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடலை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக மகேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கமலக்கண்ணனின் தலை ஒரு பெண்ணின் வீட்டு முன்பு கிடந்தது. அந்த பெண்ணுக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து பெண் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுவரை இந்த வழக்கில் யாரும் சிக்கவில்லை.
இதனால் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் பற்றிய தகவல் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். மகேந்திரன் சிக்கினால் தான் கமலக்கண்ணனின் கொலையில் உள்ள மர்மம் விலகும்.

விசா முரண்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சீன வாலிபர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆலந்தூர்:
சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு விமானத்தில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் விசா மற்றும் பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீனாவை சேர்ந்த ஷயாங்க் என்ற வாலிபரின் ‘விசா’வில் முரண்பாடு இருந்தது. எனவே, அவர் அடுத்த விமானத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த 10 சீன மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கான ‘விசா’வில் வராமல் சுற்றுலா ‘விசா’வில் அவர்கள் வந்த தாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.