என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் இரந்து வீசப்பட்ட வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி அங்கு பிணமாக கிடந்தார் என்று போலீசார் விசாரித்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து வாலிபர் உடலை ஒருவர் ரோட்டில் வீசி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் பிணமாக கிடந்தவர் செங்கல்பட்டை அடுத்த அமனப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பதும், சென்னையில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.

    அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்பத்துடன் சேராமல் சென்னையில் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு உடலை ஆட்டோவில் எடுத்து வந்து வீசி சென்றார்களா? அல்லது ஆட்டோவில் பயணம் செய்த போது குடிபோதையில் திடீரென இறந்ததால் உடலை ரோட்டில் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மடிப்பாக்கம் அருகே பழைய இரும்பு கடையில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தில் வியாபாரியின் 2 கைகள் கருகின.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசன் பட்டில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருபவர் ஜெய்சிங்ராஜ். இன்று காலை அவர் கடையில் இருந்த பழைய இரும்பு பொருட்களை தரம்பிரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது உருளையாக இருந்த பொருளை அழுத்தினார். திடீரென அந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. மேலும் கடையிலும் தீப்பிடித்தது. இதில் வியாபாரி ஜெய்சிங்ராஜின் 2 கைகளும் கருகின.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கடையில் பிடித்த தீயை அணைத்தனர். காயம் அடைந்த ஜெய்சிங்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடையில் வெடித்த பொருள் எந்த வகையானது என்பது தெரியவில்லை. வெடி பொருளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கடையில் சிதறிய மர்மபொருளின் தூள்களை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் மனு அளித்துள்ளனர். #Vijayabaskar #DMK
    ஆலந்தூர்:

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    ஆனால் சோதனை நடந்த பிறகு இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தி.மு.க. வக்கீல்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் முத்துகுமார், நீலகண்டன் ஆகியோர் இன்று பரங்கிமலை லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரி ஜெயந்த் முரளியை சந்தித்து மனு அளித்தனர். அவர் புகார் மனுவை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் சீட்டை அளித்தார்.

    இதுபற்றி வக்கீல்கள் முத்துக்குமார், நீலகண்டன் கூறுகையில், ‘‘வருமான வரித்துறை அளித்த பரிந்துரைப் படி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்’’ என்றனர். #Vijayabaskar
    பசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார். #TNGovernor #BanwarilalPurohit
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த சித்தமல்லி பகுதியில் உள்ள கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த உகோ பூஜையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.

    உத்திரமேரூர் வந்த கவர்னருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது, கோட்டாட்சியர் ராஜு, சுந்தர் எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கோ பூஜை செய்து கவர்னர் பன்வாரிலால் வழிபட்டார். பின்னர் அங்குள்ள பசுக்களுக்கு உணவு அளித்தார்.

    பின்னர் அவர் அங்கிருந்த திரளான கிராம மக்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் பசுக்கள் பேணிக்காக்கப்பட வேண்டும். பசுக்களை திரளானோர் வழிபட்டு வருகின்றனர். பசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும்” என்றார். #TNGovernor #BanwarilalPurohit
    தி.மு.க.வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார். #DMK #MKStalin #MKAzhagiri
    ஆலந்தூர்:

    கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.

    அமைதி பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கே:- தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். அவரை சந்திப்பீர்களா?

    ப:- சந்திக்க மாட்டேன்

    கே:- சென்னையில் நீங்கள் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்?

    ப:- ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள்.


    கே:- தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவராக ஏற்க தயார் என்று கூறி இருந்தீர்கள். அதற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

    ப:- 5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது முடிவை தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.அழகிரியின் பேரணிக்கு சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், மு.க.அழகிரியின் பேரணிக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பேரணி செல்லக்கூடிய சாலையில் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதனால் பேரணிக்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் என்றார். #DMK #MKStalin #MKAzhagiri
    சென்னை விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அயூப்கானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அயூப்கான் (வயது 32) என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அயூப்கானை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரிடம் இருந்த சூட்கேசில் பெண்கள் அணியும் மேலாடையில் தங்க துண்டுகள் வைத்து தைக்கப்பட்டு இருந்ததையும், சமையல் பொருட்களிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி அயூப்கானிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அழைத்து செல்ல விமான நிலையம் வந்திருந்த முஸ்தபா (37) என்பவரிடமும் இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    சேலையூரில், அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 54). இவருடைய மனைவி மைதிலி. கணவன்-மனைவி இருவரும் அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ஒருவருக்கு திருமணம் ஆகி தனியாக வசித்துவருகிறார். இளைய மகன் மாடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்களது மகன் பள்ளிக்கு சென்றுவிட்டார்.

    வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர்கள், படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சேலையூர் போலீசில் பிரபு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வீட்டின் பூட்டு, பீரோ கதவு உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்துசெல்லும் நன்கு தெரிந்த நபர்கள்தான் அவற்றை திருடிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். 
    சேலையூரில் அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு. அரசு ஊழியரான இவரும், மனைவியும் சென்னை குறளகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களது மகன் கார்த்திக் (16). சற்று மனநலம் குன்றிய இவன் மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

    தினமும் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு கார்த்திக் வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு ஆட்டோவில் பள்ளிக்கு செல்வான். நேற்று மாலை பிரபு வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    வீட்டின் பூட்டு உடைக்காமல் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும், ஆட்டோ டிரைவர் மீதும் சந்தேகம் இல்லை என்று பிரபு தெரிவித்தார்.

    ஆனால் மனநலம் குன்றிய கார்த்திக்கை மர்ம நபர்கள் ஏமாற்றி வீட்டு சாவியை வாங்கி நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGames2018
    ஆலந்தூர்:

    இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வருண் தக்கார், கணபதி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் வர்ஷா, சுவேதா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

    பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 4 பேரும் நேற்று இரவு நாடு திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை பெற்றோர், நண்பர்கள், தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    அப்போது வருண் தக்கார் பேசுகையில், தான் 8 வருடமாக பயிற்சி எடுப்பதாகவும், இப்போட்டிக்காக தான் பள்ளிப்படிப்பினை பாதியில் கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளியில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.

    கணபதி கூறுகையில், “இம்முறை வெண்கலம் வென்றதாகவும், அடுத்த முறை தங்கம் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறினார். இந்த விளையாட்டுக்கு போதுமான விளம்பரம் இல்லை என வருத்தம் தெரிவித்த அவர் இந்த வெற்றியை முதலில் தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.

    தொடர்ந்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வீரர், வீராங்கனைகள் பகிர்ந்து கெண்டனர். #AsianGames2018
    படப்பை அருகே கார் மீது லாரி மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்தவர் முகமது பர்வேஸ் (26). இவர் பெரிய காஞ்சீபுரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருடைய நண்பர் அனாஸ் முகமது (21). இவர்களுடன் மேலும் 5 பேர் ஒரே காரில் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் படப்பை அருகே கார் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் முகமது பர்வேஸ், அனாஸ் முகமது இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    கார் டிரைவர் விக்னேஷ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்கள் அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டுள்ளது. மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Modi #PMModi #PonRadhakrishnan
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரையில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பொருளாதார தவறுகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது.

    மோடி அரசில் வாகனங்கள், விவசாயம், தொழிற் உற்பத்தி, தொழில்முனைவோர் முன்னேற்றம், தொழில் தொடர்பான வாகனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. உலகளவில் நம்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதற்கு காரணம் பிரதமர் மோடியின் துணிச்சலான தேச பக்தியான நடவடிக்கைகள்தான்.

    மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு ராகுல்காந்தி உள்பட மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மகாராஷ்டிரா உயர் போலீஸ் அதிகாரி, ஆயிரக்கணக்கான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார்.

    அவர்கள் பயங்கரவாதிகள் திரைமறைவில் இருந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறவர்கள். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொலை செய்யும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.



    இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணை போகின்ற மாதிரி அவசரப்பட்டு ராகுல்காந்தி உள்ளிட்ட மற்ற கட்சியினர் அறிக்கை வெளியிடக்கூடாது. இன்று வரை ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசி வருகிறோம்.

    அதே போல ஒரு கொலை மீண்டும் நடக்க வேண்டுமா? அதற்கு எந்த முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

    1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தியை எந்த வழியில் கொலை செய்தார்களோ அதே வழிமுறையை பின் பற்றி பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகள் இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணையாக அமைந்து விடும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ராஜீவ் காந்தி கொலை உள்பட பல சம்பவங்கள் நடந்தது. அதுபோல இந்த ஆட்சியிலும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.

    ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் தமிழர்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து தமிழக அரசு முறையாக கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #PMModi #PonRadhakrishnan
    ஸ்ரீபெரும்புதூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பட்டு நூல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இருங்காட்டுகோட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து ராமலிங்கம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×