என் மலர்
காஞ்சிபுரம்
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றபின் மு.க. ஸ்டாலின் முதன் முறையாக காஞ்சிபுரம் வந்தார். அவர் சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தி.மு.க. பொருளாளர் பதவியேற்ற துரைமுருகனும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மு.க.ஸ்டாலின், நினைவு இல்லத்தில் உள்ள பார்வையாளர் வருகைப் பதிவேட்டுப் புத்தகத்தில் தமிழகத்திற்கு தமிழகம் எனப் பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் இல்லத்திற்கு தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றபின் வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் புத்துணர்ச்சி பெறுகின்றேன்.
அண்ணா வழியில் கலைஞர் வழியில் அவர்கள் கட்சியை கட்டிக்காத்து வந்த சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றை கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்போடு நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியேற்கிறேன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டார். முன்னதாக காஞ்சீபுரம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரைப் பகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா,மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.வ.வேலு, சி.வி.எம்.பி. எழிலரசன், நிர்வாகிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சி.வி.எம்.அ. சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறு வேடல் செல்வம், சுகுமார், பி.எம்.குமார், அபுசாலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #DMK #MKStalin
வேளச்சேரி:
சென்னை பள்ளிகரணை ராம்நகர் சிக்னல் அருகே கால்டாக்சி டிரைவர் ஒருவரை வடமாநில வாலிபர் தாக்கி அவரது காரை கடத்தி சென்றார்.
காரை கடத்தியவர் பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் வரை சென்ற போது பல இடங்களில் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றார்.
தாம்பரத்தில் அவரை போக்குவரத்து போலீசார் பிடிக்க முயன்ற போது காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற பொதுமக்கள் பெருங்களத்தூர் அருகே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணை யில் அவனது பெயர் அனுஸ்மான் லியோனல் சிங் (29) என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து கடத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் அவன் காயம் அடைந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல். காலனியை சேர்ந்தவர் தேவநாகராஜ். பைனான்சியர். இவரிடம் அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் முகலிவாக்கத்தை சேர்ந்த நந்தினி என்பவர் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி தேவராகராஜ் அடிக்கடி கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் ரூ.50 லட்சம் கடனை திருப்பி கேட்ட தேவநாகராஜை நந்தினி தாக்கினார். இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து நந்தினியை கைது செய்தார்.
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூர், அஷ்ட லட்சுமி கோவில் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் வீட்டு முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மர்ம நபர்கள் காரை திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே திருடப்பட்ட கார் கொட்டிவாக்கம் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.
உடனே காரில் இருந்த 2 வாலிபர்களும் வேகமாக செல்ல முயன்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் தப்பி செல்ல முடியவில்லை. அவர்களை போலீசார் கைது செய்து காரை மீட்டனர்.
விசாரணையில் பிடிபட்ட இருவரும் பெசன்ட் நகரை சேர்ந்த அய்யனார், சரண் என்பது தெரிந்தது. பழைய குற்றவாளிகளான அவர்கள் பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
கைதான 2 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஜீவரத்தினம் அழுது கொண்டிருந்தான். அவனது கையில் காயம் ஏற்பட்டு இருந்தது.
இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்த போது வீட்டு பாடம் செய்யாதததால் தலைமை ஆசிரியை தாக்கியதாக மாணவன் தெரிவித்தான். அவனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜீவரத்தினத்தை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்துள்ளனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜீவரத்தினத்தின் பெற்றோர் தலைமை ஆசிரியர் குறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Studentattack
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். அதனால் சந்தேகமடைந்து லிங்கேஸ்வரனை சோதனை செய்தபோது அவரின் கைப்பை, மற்றும் பேண்டில் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது.
அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.5½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லிங்கேஸ்வரனிடம் விசாரணை நடக்கிறது.
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்கள் அமைய நீதி துறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மு.க.அழகிரி பேரணி நடத்த அவருக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
தமிழிசை - மாணவி சோபியா வாக்குவாதம் சம்பவம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #ThambiDurai
கோவை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் 3 மாதங்களாக தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அப்போது அதில் சில நோட்டுகள் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாஷை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பிரகாஷ் வீட்டில், 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் மாற்றியும், பைனான்சுக்கு பணம் கேட்பவர்களுக்கு அந்த கள்ள நோட்டுகளை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு கள்ள நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேன் எந்திரம், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 16-ஐ பறிமுதல் செய்தனர்.
ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. வருகிற 13-ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவில் அருகே பந்தல் போடப்பட்டு இருந்தது. இதற்காக சாலை நடுவே கம்பு நட்டு இருந்தனர்.
இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் என்பவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து பந்தலை அகற்றினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். பின்னர் சாலை நடுவே இருந்த பந்தல் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பந்தல் அமைக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே புகார் கொடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் வீட்டை ஏராளமானோர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிப்பதால் சுரேஷ் வீட்டு முன்பும், கோவில் அருகேயும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். #tamilnews
சேலையூர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காஞ்சீபுரம் மாவட்டம், மாகரல் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்தார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
கைது செய்யப்பட்ட சிலம்பரசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலூரில் நேற்று இரவு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முக்கொம்பு அணை 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அணையையும், தமிழக அரசினையும் ஸ்டாலின் ஒப்பிடுவது தவறு.
உடைந்த முக்கொம்பு அணை தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் விரைந்து சீர் செய்யப்பட்டது. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கரிகாலன் கட்டிய கல்லணை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து உறுதியாக உள்ளது போல் அ.தி.மு.க. அரசும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும்.

அதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என நினைப்பது பகல் கனவாகவே முடியும்.
ஆலந்தூர்:
இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 14-ந்தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். பிரதமர் ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அறிவித்து இருக்கிறார். அதன்படி 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பி.எஸ்.எல்.வி. பி42, ஜி.எஸ்.எல்.வி.பி2 விண்கலங்கள் அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்படும். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான செயலி பருவமழை முடிந்தவுடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ISROleadersSivan #ISRO






