என் மலர்
செய்திகள்

சேலையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
சேலையூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சேலையூர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காஞ்சீபுரம் மாவட்டம், மாகரல் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்தார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
கைது செய்யப்பட்ட சிலம்பரசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story