என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financier Attack"

    முகலிவாக்கத்தில் ரூ.50 லட்சம் கடனை திருப்பி கேட்ட பைனான்சியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல். காலனியை சேர்ந்தவர் தேவநாகராஜ். பைனான்சியர். இவரிடம் அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் முகலிவாக்கத்தை சேர்ந்த நந்தினி என்பவர் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி தேவராகராஜ் அடிக்கடி கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் ரூ.50 லட்சம் கடனை திருப்பி கேட்ட தேவநாகராஜை நந்தினி தாக்கினார். இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து நந்தினியை கைது செய்தார்.

    ×