search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parents Police Complaint"

    சேலம் காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பெண் கர்ப்பமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊத்துக்கடை பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    அவருக்கு திடீரென மனநலம் பாதித்ததால் பெற்றோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டனர். இந்த பெண் அடிக்கடி காணாமல் போய்விடுவது வழக்கம். வீட்டை விட்டு வெளியேறி மனம்போன போக்கில் நடந்து சென்று விடுவார்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண்ணின் தாயார் சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார். 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை அவர் சேலம் வருவது வழக்கம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர் மகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மீண்டும் காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அந்த பெண் உடல் மெலிந்து சோர்வுடன் காணப்பட்டதால், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியது யார் என்று தெரியவில்லை. அவர் மனநிலை சரியில்லாமல் சுற்றியதை பார்த்து யாராவது அவரது கற்பை சூறையாடி இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணம் ஆகாமல் 16 வயதில் பெண் கர்ப்பமான சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியை தாக்கியதில் மாணவனின் கை முறிந்ததையடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். #Studentattack
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஜீவரத்தினம் அழுது கொண்டிருந்தான். அவனது கையில் காயம் ஏற்பட்டு இருந்தது.

    இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்த போது வீட்டு பாடம் செய்யாதததால் தலைமை ஆசிரியை தாக்கியதாக மாணவன் தெரிவித்தான். அவனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜீவரத்தினத்தை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்துள்ளனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஜீவரத்தினத்தின் பெற்றோர் தலைமை ஆசிரியர் குறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Studentattack

    ×