என் மலர்
நீங்கள் தேடியது "Selaiyur home jewelry robbery"
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு. அரசு ஊழியரான இவரும், மனைவியும் சென்னை குறளகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களது மகன் கார்த்திக் (16). சற்று மனநலம் குன்றிய இவன் மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
தினமும் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு கார்த்திக் வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு ஆட்டோவில் பள்ளிக்கு செல்வான். நேற்று மாலை பிரபு வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வீட்டின் பூட்டு உடைக்காமல் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும், ஆட்டோ டிரைவர் மீதும் சந்தேகம் இல்லை என்று பிரபு தெரிவித்தார்.
ஆனால் மனநலம் குன்றிய கார்த்திக்கை மர்ம நபர்கள் ஏமாற்றி வீட்டு சாவியை வாங்கி நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.






