என் மலர்
காஞ்சிபுரம்
ஆதம்பாக்கம், இ.பி. காலனியை சேர்ந்தவர் அருண்குமார், இவரது மனைவி வசந்தமலர் (31), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த வசந்தமலர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த நியன்தானா ரங்கமை (19) என்பவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் ஆசை என்ன? என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஆராய்ந்தது.
அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது, அவர்கள் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே தங்களது ஆசை என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இதற்காக சிவகாசி அரசு பள்ளியை சேர்ந்த அந்த 30 மாணவ, மாணவிகளும் பஸ்சில் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
சென்னையில் ஒருநாள் முழுவதும் பொழுதுபோக்கு மையங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பள்ளி மாணவர்கள் கூறும்போது, “விமானத்தையே பார்க்காத எங்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொழுதுபோக்கு மையத்திற்கும் அழைத்து சென்றது சந்தோஷமாக இருந்தது. விமானத்தில் அழைத்து வந்து எங்களது ஆசையை நிறைவேற்றி உள்ளனர். அவர்களுக்கு நன்றி” என்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், மாகரல், பாலு செட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 1 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணி செய்து வருகிறார்.
இவர் குடும்பத்தினருடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு, அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 35). ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் பள்ளி சவாரியை முடித்துக்கொண்டு அதே பகுதி பாரதியார் தெருவில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளி சீருடை அணிந்த 3 மாணவர்கள் தாறுமாறாக வந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திடீரென முன்னால் சென்ற திலீப்குமாரின் ஆட்டோவில் மோதியது.
இதனை திலீப்குமார் கண்டித்தார். தாறுமாறாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மாணவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து திலீப்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலை குலைந்த அவர் கீழே சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திலீப்குமாரையும், மாணவர்களையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
உடலில் பலத்த காயம் அடைந்த திலீப்குமார் சோர்வாக காணப்பட்டார். நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு திலீப்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் ஆட்டோ டிரைவரை அடித்து கொன்றது செங்கல்பட்டு டவுனில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் என்பது தெரிந்தது.
பள்ளி முடிந்ததும் மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் ஜாலியாக சுற்றி உள்ளனர். அப்போது திலீப்குமாரின் ஆட்டோவில் மோட்டார்சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து உள்ளது.
மாணவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்ட திலீப் குமாருக்கும் பிரியா என்ற மனைவியும், பத்மேஷ் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் உள்ளனர்.
ஆட்டோ டிரைவரை பள்ளி மாணவர்கள் அடித்து கொன்ற சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தலைப்பில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரைப்பட நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என யாரும் கூறமுடியாது. அரசியலில் உண்மையான கருத்துக்களை யார் சொன்னாலும் அதை வரவேற்போம்.
அப்படி உண்மையான கருத்துக்களை அவர்கள் சொல்லவில்லை என்றால் மனசாட்சி அவர்களை உறுத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.
கீழடியில் நடந்து கொண்டிருப்பது அனைத்தும் வெளிப்படையானது. மத்திய அரசால் என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறோம். கீழடி தமிழர்களின் பெருமைகளில் ஒன்று என்பதை யாரும் மறுக்கவில்லை. அது எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்:
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பிங்கும் அடுத்த மாதம் 11-ந் தேதி மாமல்லபுரம் வருகிறார்கள்.
தலைவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் திருவிடந்தை ஹெலிபேடு, அவர்கள் தங்க இருக்கும் கோவளம் நட்சத்திர ஓட்டல், சுற்றிப் பார்க்க இருக்கும் மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் மூன்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருப்பதால் பாதுகாப்பு முன் ஏற்பாடாக முக்கிய இணைப்பு சாலைகளான கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் பகுதிகளில் தற்போது இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக வெளியூர், வெளி மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமான கார்கள் வந்தால் நிறுத்தி சோதனை செய்யவும், வண்டிகள் நிற்காமல் சென்றால் அடுத்த சோதனை சாவடிக்கு தகவல் கொடுக்கவும் போலீசாரும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் போலீசார் அமர்ந்திருக்கும் பகுதி மற்றும் சோதனையில் ஈடுபடும் காட்சிகளை பதிவு செய்யவும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கவும் நவீன கண்காணிப்பு சுழல் கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியில் உள்ள ஒரு சில ஓட்டல்களில் இன்னும் கேமராக்கள் பொருத்தாமல் இருப்பதும் போலீசாருக்கு பயந்து சில ஓட்டல்களில் வேலை செய்யாத கேமராக்களை பொருத்தி வைத்திருப்பதும் மாமல்லபுரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து மாமல்லபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் போலீசார் ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகிறார்கள். கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தலைவர்கள் வருகையையொட்டி கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகளில் பல ஆண்டுகளாக பச்சைக்கலரில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலிகளுக்கு தற்போது மத்திய தொல்லியல் துறை ஊழியர்கள் அவசர அவசரமாக சிற்பங்கள் கலரில் பெயிண்ட் அடிக்கப்படுகிறது.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா (60) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
பாண்டிபஜார் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஜீப் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா வீடியோ மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைக்கன் கான் ( 26) இவர் பழைய பல்லாவரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார் நேற்று பல்லாவரம் பகுதியில் நடைபெறும் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்கு நடந்து வந்தபோது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பணம் பறித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தை கைது செய்தனர். அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்
ஆலந்தூர்:
நங்கநல்லூர், எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் ரமேஷ். தொழில் அதிபரான இவர் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் சபரிமலைக்கு சென்று விட்டார்.
வீட்டில் அவரது மனைவியும், மகள்களும் இருந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
பீரோவில் இருந்த 120 பவுன் நகை, 10 பவுன் வைர நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
கொள்ளை கும்பலை பிடிக்க இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் வட மாநில வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் மதியம் ரமேசின் வீட்டின் அருகே சுற்றித்திரிவதும், பின்னர் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து கொள்ளையடித்த நகைகளை பையில் போட்டு வெளியே வரும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். கொள்ளையர்கள் அனைவரும் வடமாநிலம் செல்லும் ரெயிலில் தப்பி செல்வது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அனைத்து மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்ய உதவி கேட்டு இருந்தனர்.
இந்தநிலையில் மத்திய பிரதேசம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற 7 வாலிபர்களை அம்மாநில போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சென்னையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி வந்திருப்பது தெரிந்தது.
இதுபற்றி அவர்கள் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி கமிஷனர் சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் விமானம் மூலம் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.
அங்கு கைதான கொள்ளையர்கள் 7 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை சென்னை கொண்டுவந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பிடிபட்ட கொள்ளையர்கள் பற்றிய பெயர் விபரத்தை போலீசார் தெரிவிக்க வில்லை. அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு பவாரியா கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையில் 120 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. ஆனால் பிடிபட்ட கும்பலிடம் 500 பவுனுக்கும் மேல் நகைகள் உள்ளன. எனவே அவர்கள் மேலும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.
இன்று அல்லது நாளை கைதான கொள்ளையர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கூடுதல் தகவல் வெளிவரும்.
கொள்ளை நடந்த நாளில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ மூலம் மர்ம நபர்கள் 3 பேர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்துக்கு சென்றதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை வைத்து விசாரிக்கும் போதுதான் கொள்ளையர்கள் சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலம் தப்பி சென்றிருப்பது தெரிந்தது. இதனை வைத்து வடமாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். இதன்மூலம் தற்போது கொள்ளையர்கள் 7 பேர் சிக்கி உள்ளனர்.
கொள்ளை நடந்த ரமேசின் வீட்டின் எதிரே புதிதாக வீடுகட்டும் பணி நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக அங்கு வேலை நடக்கவில்லை. அங்கு வேலைபார்த்த வடமாநில வாலிபர்கள் வரவில்லை.
இதனால் கைதான கொள்ளையர்கள் கட்டுமான பணியில் வேலைபார்த்தனரா? என்றும் விசாரணை நடக்கிறது.
அவர்களது கூட்டாளிகள் சென்னையில் வேறு எங்காவது தங்கி உள்ளனரா? என்றும் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைக்கன் கான் ( 26) இவர் பழைய பல்லாவரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார் நேற்று பல்லாவரம் பகுதியில் நடைபெறும் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்கு நடந்து வந்தபோது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பணம் பறித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தை கைது செய்தனர். அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்.






