என் மலர்
ஈரோடு
அந்தியூர்:
அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 48). ஈச்சேர் வேனில் மூட்டைகளை ஏற்றி கொண்ட ஒவ்வொரு கடைகளுக்கும் சப்ளை செய்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் தனது வேனை பஸ் நிலையம் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார். அதில் 500 அட்டைகளில் மூட்டைகளும் இருந்தது.
இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் ஜெயராமனுக்கு போன் மூலம உங்கள் வேன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
உடனே ஜெயராமன் மற்றும் அக்கம் பக்கத்தினர் எரிந்த வேனில் உள்ள தீயை அணைத்தனர். இதில் வேனின் முன் பகுதி எரிந்து சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.
வேனுக்கு யாரோ மர்ம ஆசாமி தீ வைத்திருக்க கூடும் என கருதப்படுகிறது.
இது பற்றிய புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்ட கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 70) ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவர் நேற்று மதியம் கோபியில் உள்ள ஒரு பாங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
திடீரென அவர் திருநாவுக்கரசை மிரட்டி அவரிடம் இருந்த 80 ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்..திருடன்..” என சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர்.
அவனை மடக்கி கையும்- களவுமாக பிடித்த காளீஸ்வரன், சக்திகுமார், வில்லியம்ஸ் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் கோபி போலீசில் ஒப்படைத்தனர்
அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் அருண்சுந்தர் என்றும் பவானி அருகே உள்ள கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் மேலும் அவன் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் தெரிய வந்தது.
அருண்சுந்தர் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்து வந்தான். 6 மாதமாக அவன் வேலைக்கு போகவில்லை.
இந்த நிலையில் தீபாவளிக்கு செலவுக்கு பணம் தேவைப்படவே இந்த வழிப்பறியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் பட்டதாரி வாலிபர் அருண்சுந்தர் கோபி வேலுமணி நகரில் செல்வராஜ் என்பவரது வீட்டில் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டு உள்ளான். அவர் வீடு காலி இல்லை என்று கூறி உள்ளார். அவரது பின்னால் நைசாக வீட்டுக்குள் புகுந்த அருண்சுந்தர் அங்கிருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள “லேப்டாப்”பையும் திருடி உள்ளான் இதுவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக மிதமாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது.
இதையொட்டி இன்று காலை முதல் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று1230 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் மீண்டும் 101 அடியை தொட்டது. அணையின் நீர் கொள்ளளவு 105 அடியாகும்.
அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். விவசாய பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #BhavanisagarDam
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு தீபாவளிக்கு அபாயகரமான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த மாதிரியான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று கூறியதற்கு பதிலாக அந்த மாதிரி பட்டாசுகளை தயாரிக்க அரசு தடை விதிக்க வேண்டும்.

இதை எப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க முடியும்.? பட்டாசு மாசு என்று கூறுபவர்கள் வாகனங்களால் ஏற்படும் மாசு, சாயக் கழிவுகளால் ஏற்படும் மாசுகளும் பற்றி ஏன் பேசுவதில்லை?
மேலும் குறிப்பிட்ட நேரம் போக பட்டாசு வெடிக்கும் ஒவ்வொரு வீட்டையும் போலீசார் சென்று ஆய்வு நடத்த முடியுமா? பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியுலகத்துக்கு சொல்லுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் தங்கள் சுய விருப்பதற்காக ஒருவர் மீது பொய்யாக புகார் தெரிவிக்க கூடாது.
ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது, ஜெயிக்க முடியாது, அவர்கள் நிச்சயமாக தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பார்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் ஏமாந்துதான் போவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழை பெய்தது.
மேலும் பவானிசாகர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, பவானி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகயிலும் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
வனப்பகுதியான தாளவாடியில் நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது. அதே சமயம் இரவில் சாரல்மழை தூறிக்கொண்டிந்தது. தாளவாடி பகுதியில் 18 மி.மீ. மழை பெய்தது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழைதூறிக்கொண்டே இருந்தது.
ஈரோடு சுற்று வட்டார பகுதிகளான லக்காபுரம், 46 புதூர், ஆணைக்கல்பாளையம், முள்ளாம்பரப்பு, நொச்சி காட்டு வலசு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் 30 நிமிடம் பலமாக கொட்டி தீர்த்தது.
இந்த கன மழையால் ரோட்டில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் லக்காபுரம் மற்றும் 46 புதூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.
இதே போல் சிவகிரி, கொடுமுடி, அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் ஓடையில் கலந்து மழை தண்ணீர் 200 வீடுகளில் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மழை வெள்ளம் வடிந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. பள்ளியில் தங்க வைக்கப்பட்ட மக்களும் அவரவர் வீடுகளுக்க சென்றனர்.
இந்த நிலையில் கோபி பகுதியில் பெய்த மழையால் மழைத் தண்ணீர் கீரிப்பள்ளம் ஓடையில் கலந்து ஓடியது. கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலையும் இந்த வெள்ளம் சூழ்ந்தது. கோவிலுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்தது. இந்த கோவில் அருகே தடப்பள்ளி வாய்க்கால் உள்ளது. இந்த தண்ணீரும் சேர்ந்து கொண்டத்து காளியம்மன் கோவிலை சூழ்ந்தது. இந்த தண்ணீரை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் வெளியேற்றினர். #tamilnews
ஈரோடு:
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முதல் பரவலாக பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெருந்துறை, கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரம் மணி தொடர்ந்து கொட்டியது.
இதனால் கோபியில் 200 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதே போன்று மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 90.2 மி.மீட்டர் மழை கொட்டியது. பெருந்துறையில் நேற்று இரவு 1 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 3.30 மணி நேரம் கொட்டியது. இடி-மின்னல் இல்லாமல் வெறும் மழையாக கொட்டியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மேலும் பெருந்துறை அடுத்த சரளை, வேட்டுவபாளையம், மரத்துபாளையம், விஜய மங்கலம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் குளிமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கனமழையால் பெருந்துறை பகுதியில் உள்ள சித்தன்பட்டிகுளம், வெங்கமேடு குளம், விஜயமங்கலம் பகுதியில் உள்ள 2 குளங்கள் ஆகியவை நிரம்பியது.
இதே போன்று அணை பகுதியான பவானிசாகர், குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், கொடிவேரி போன்று பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு.-
பொருந்துறை -90.2
சத்தியமங்கலம் -17.2
வரட்டுபள்ளம் -2.3
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நிலகிரி மலை பகுதியில் நேற்று மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீரின் வரத்து இன்று அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.24 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2572 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடியும் என மொத்தம் 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பெருந்துறை, பவானி ரோடு, பாரதியார் வீதி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). இவர் பெருந்துறை, ஈரோடு ரோடு, வெங்கமேடு பகுதியில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த மில்லில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து வாங்கி வரப்படும் தேங்காய் கொப்பரைகள் டிரையர் எனப்படும் ஹீட்டர் மூலம் உலர வைக்கப்பட்டு பின்னர் எண்ணெய் எடுக்கப்படும்.
இதற்காக டிரையரில் தேங்காய் பருப்புகள் கொட்டப்பட்டு டிரையர் இயங்கி கொண்டிருந்தது. டிரையரில் உள்பகுதியில் திடீரென நெருப்பு பொறிகள் தெறித்து தேங்காய் பருப்புகள் தீப்பிடித்து எரியத்தொடங்கின.
காய்ந்த நிலையில் இருந்த தேங்காய் பருப்புகளில் பற்றிய தீ குபுகுபுவென்று எரியத்தொடங்கியது. இதனை கண்ட பணியாளர்கள் மற்றும் உரிமையாளர் சதாசிவம் ஆகியோர் தேங்காய் பருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சதாசிவத்தின் கை மற்றும் கால்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.
காயமடைந்த சதாசிவம் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் மில்லின் உள் பகுதியில் இருந்த மூலப் பொருட்கள் மற்றும் புண்ணாக்கு, தேங்காய் எண்ணெய் கேன்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள், மெஷின்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் முற்றிலும் எரிந்தன.
மில்லின் மேற்கூரை, சிமெண்ட் சீட்கள் உள்ளிட்ட பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து போனதாக தெரிகிறது.
பலத்த மழையால் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
கீரிப்பள்ளம்ஓடையில் அதிகமாக தண்ணீர் வந்ததால்தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதேபோல் சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க கீரிப்பள்ளம் ஓடைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோபி அருகே உள்ள அளுக்குளியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.
மேலும் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கீரிட்தளம் அமைக்கப்படும். ஓடையில் உள்ள தண்ணீரை மறு சுழற்சி முறையில் விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அமைச்சருடன் கோபி தாசில்தார் வெங்கடேசன், ஆணையாளர் சுதா, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் சுப்பிரமணியம், கந்தவேல்முருகன் ஆகியோர் சென்றிருந்தனர். #ADMK #Sengottaiyan
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் அரங்க முதல்வன் வரவேற்றார்.
நிர்வாகிகள் அக்பர் அலி, வீர துரைசாமி, சதாசிவம், சரவணன், வெற்றிச்செல்வன், பெரிய கலையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மண்டல அமைப்புச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பழனிச்சாமி, மனித நேய மக்கள் கட்சியின் சித்திக், தமிழ் நாட்டு மக்கள் இயக்க செல்வம் உள்பட பல்வேறு கட்சி சேர்ந்த பிரதிநிதிகள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். #tamilnews
ஈரோடு மாவட்டம் கீழேரிபாளையத்தில் வசித்து வரும் எம்.விக்னேஷ், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாத தந்தை, வீட்டு வேலை செய்து சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தும் தாய் இருவருக்கும் விக்னேஷ்தான் ஒரே ஆறுதல். குறைந்த வருமானம் என்றாலும் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர்.
இந்த மகிழ்ச்சியை குலைக்கும் வகையில் கடந்த 24-ம் தேதி நிகழ்ந்த விபத்து ஒட்டுமொத்த குடும்பத்தையே உலுக்கிவிட்டது. விக்னேஷ் விபத்தில் சிக்கி, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பின்னர், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய் பொருத்துவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில், அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.
விக்னேஷ் மற்றும் அவரது தாயாரின் மொத்த வருமானம் மாதம் 15000 ரூபாய்தான். போதிய வருமானம் இன்றி தள்ளாடிய நிலையில், இப்போது மருத்துவச் செலவுகளால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அவரது குடும்பம். கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்துடன், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இதுவரை 3.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.
மேலும் தொடர்புக்கு:-
எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09
எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55).
கடந்த திங்கட்கிழமை மாலை வெங்கடாசலம் விஷம் குடித்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
வெங்கடாசலம் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் அவரது மனைவி சித்ரா (45) சோகத்தில் இருந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த அதிர்ச்சி தாங்காமல் சித்ரா உடல் நலம் குன்றியது. இதில் அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.
வெங்கடாசலம்-சித்ரா தம்பதிக்கு லோகேஷ், சூரியன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லோகேஷ் 9-ம் வகுப்பும், சூரியன் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்கள் 2 பேரும் ஒரே நேரத்தில் தந்தையையும், தாயையும் இழந்து அனாதையாக தவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







