என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

    வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #Sengottaiyan
    கோபி:

    பலத்த மழையால் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    கீரிப்பள்ளம்ஓடையில் அதிகமாக தண்ணீர் வந்ததால்தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதேபோல் சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க கீரிப்பள்ளம் ஓடைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோபி அருகே உள்ள அளுக்குளியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.

    மேலும் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கீரிட்தளம் அமைக்கப்படும். ஓடையில் உள்ள தண்ணீரை மறு சுழற்சி முறையில் விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    அமைச்சருடன் கோபி தாசில்தார் வெங்கடேசன், ஆணையாளர் சுதா, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் சுப்பிரமணியம், கந்தவேல்முருகன் ஆகியோர் சென்றிருந்தனர். #ADMK #Sengottaiyan
    Next Story
    ×