என் மலர்
நீங்கள் தேடியது "coconut oil mill"
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேங்காய் எண்ணெய் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
பெருந்துறை:
பெருந்துறை, பவானி ரோடு, பாரதியார் வீதி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). இவர் பெருந்துறை, ஈரோடு ரோடு, வெங்கமேடு பகுதியில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த மில்லில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து வாங்கி வரப்படும் தேங்காய் கொப்பரைகள் டிரையர் எனப்படும் ஹீட்டர் மூலம் உலர வைக்கப்பட்டு பின்னர் எண்ணெய் எடுக்கப்படும்.
இதற்காக டிரையரில் தேங்காய் பருப்புகள் கொட்டப்பட்டு டிரையர் இயங்கி கொண்டிருந்தது. டிரையரில் உள்பகுதியில் திடீரென நெருப்பு பொறிகள் தெறித்து தேங்காய் பருப்புகள் தீப்பிடித்து எரியத்தொடங்கின.
காய்ந்த நிலையில் இருந்த தேங்காய் பருப்புகளில் பற்றிய தீ குபுகுபுவென்று எரியத்தொடங்கியது. இதனை கண்ட பணியாளர்கள் மற்றும் உரிமையாளர் சதாசிவம் ஆகியோர் தேங்காய் பருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சதாசிவத்தின் கை மற்றும் கால்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.
காயமடைந்த சதாசிவம் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் மில்லின் உள் பகுதியில் இருந்த மூலப் பொருட்கள் மற்றும் புண்ணாக்கு, தேங்காய் எண்ணெய் கேன்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள், மெஷின்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் முற்றிலும் எரிந்தன.
மில்லின் மேற்கூரை, சிமெண்ட் சீட்கள் உள்ளிட்ட பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து போனதாக தெரிகிறது.