என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர் ரோடு கோல்டன் மஹால் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் சபரி ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் சந்தன கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட காதல் ஜோடிகளை கோவிலுக்கு சென்ற பக்தர்களே விரட்டியடித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மலை மீது செல்ல 4 கிலோ மீட்டர் தார் சாலை மற்றும் 1320 படிக்கட்டுகளும் உள்ளது.

    இந்த படிக்கட்டுகளில் தினமும் ஏராளமான காதல் ஜோடிகள் அமர்ந்துகொண்டு சில்மி‌ஷத்தில் ஈடுபடுவது வழக்கம். ஜோடி, ஜோடியாக சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து கொள்வது வழக்கம். இவர்களை கண்காணிக்க அடிக்கடி சென்னிமலை போலீசார் அங்கு சென்று, காதல் ஜோடிகளை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதும் உண்டு.

    நேற்று இதே போல் 8 காதல் ஜோடிகள் ஆங்காங்கே படிக்கட்டுகளில் அமர்ந்து கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்துள்ளனர்.

    அதில் ஓரிரு ஜோடிகள் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு இந்த காதல் ஜோடிகள் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முகம் சுழித்தம் படி சென்றனர். மேலும் ஜோடிகள் திடீரென கட்டி பிடித்து முத்தமிட்டும் குஷி மூடில் இருந்தனர்.

    பின்னர் அந்த காதல் ஜோடிகளை பக்தர்களே படிக் கட்டுகளில் இருந்து அடிவாரம் வரை அழைத்து கொண்டு எச்சரித்து அனுப்பினார்கள். ஒருசில ஜோடி முரண்டுபிடிக்க அவர்களை விரட்டியடித்தனர்.

    பவானிசாகர் தேசிய மீன் பண்ணை அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45). இவர் கோவையை அடுத்த ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக தண்டபாணி மன வேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ம் தேதி தண்டபாணி பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    பவானிசாகர் தேசிய மீன் பண்ணை அருகே உள்ள இடத்தில் தண்டபாணி மறுநாள் வி‌ஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ந் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.

    வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான எழுத படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    அதன்படி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.

    எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இன்று வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் விட கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இப்படி வெளியேறி செல்லும் தண்ணீர் கெட்டி சமுத்திரம் ஏரி அந்தியூர் பெரிய ஏரியை அடைந்து சந்திப்பாளையம் ஏரிக்கு சென்று பிறகு வேம்பத்தி ஏரியை அடையும். ஆனால் வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் வரவில்லை சந்திப்பாளையம் ஏரி பகுதியில் உள்ள வாய்க்காலை அடைந்திருப்பதால் வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர் வேம்பத்தி ஏரிக்கு வரவில்லை.

    இதனால் வேம்பத்தி பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததோடு வேதனை அடைந்தனர். இது தொடர்பாக நேற்று மாலை வேம்பத்தி சுற்றுவட்டார விவசாயிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் விடக்கோரி கவன ஈர்ப்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அந்த ஆலோசனைப்படி இன்று காலை அந்தியூர்- ஆப்பக்கூடல் இடையே அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் விவசாயிகள் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து தடைபட்டது சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் விரைந்தனர்.

    அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உங்களது கோரிக்கை பற்றி தாசில்தாரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    அதன்பேரில் சமாதானம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

    சித்தோடு அருகே வேலை கிடைக்காததால் மனவேதனையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    பவானி அருகே உள்ள சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 30) கல்லூரி படிப்பு படித்துள்ளார்.

    இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கச் சென்ற கோகுலகிருஷ்ணன் இன்று காலை நீண்ட நேர மாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரின் தந்தை கதவை தட்டிய போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து பழனிசாமி சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை ஆசியாவின் 2-வது மிகப்பெரிய மண்ணால் உருவான அணை ஆகும். இதேபோல் தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் உள்ளது.

    ஈரோடு-திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை அணை தொட்டு 3 நாட்கள் ஆகிறது.

    13 ஆண்டுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணையிலிருந்து தற்போது உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது.

    மழை

    இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததையொட்டி இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7954 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் திறந்து விடப்பட்ட தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்து ஆர்ப்பரித்து கொட்டியபடி பவானி ஆற்றில் செல்கிறது.

    இதனால் சத்தியமங்கலம் நஞ்சை புளியம்பட்டி, பவானி உள்பட பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம். அணைக்கு கூடுதலாக தண்ணீர் வந்தால் மேலும் வெள்ளம் ஏற்படும் எனவே கரையோர பகுதி மக்கள் மிகுந்த கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    பெருந்துறை அருகே குட்டையில் குளித்த அதிகாரி தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் ஜீனியர் இன்ஜினியராக பணி புரிந்து வந்தவர் ஜெரோம் (வயது 53). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை. இவர் கடந்த 3 மாதத்துக்கு முன் பதவி உயர்வு பெற்று மானாமதுரையில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் புராஜக்ட் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் வேலை காரணமாக பெருந்துறை சிப்காட் அலுவலகம் வந்தார். பிறகு அருகில் உள்ள செயற்கை குட்டையில் குளிக்க சென்றார்.

    தனது உடைகள் மற்றும் செல்போனை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கிய அவர் வெகு நேரமாகியும் கரைக்கு வரவில்லை. இதனால் மற்ற பணியாளர்கள் குட்டையில் இறங்கி அவரை தேடினர். 30 நிமிட தேடுதல் பணிக்குப்பிறகு ஜெரோம் உடல் மீட்கப்பட்டது. குளிக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    அவரது உடலை பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை அருகே குட்டையில் குளித்த அதிகாரி மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் ஜீனியர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் ஜெரோம் (வயது 53).

    இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை.

    இவர் கடந்த 3 மாதத்துக்கு முன் பதவி உயர்வு பெற்று மானாமதுரையில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் புராஜக்ட் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் வேலை காரணமாக பெருந்துறை சிப்காட் அலுவலகம் வந்தார். பிறகு அருகில் உள்ள செயற்கை குட்டையில் குளிக்க சென்றார்.

    தனது உடைகள் மற்றும் செல்போனை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கிய அவர் வெகு நேரமாகியும் கரைக்கு வரவில்லை. இதனால் மற்ற பணியாளர்கள் குட்டையில் இறங்கி அவரை தேடினர். 30 நிமிட தேடுதல் பணிக்குப்பிறகு ஜெரோம் உடல் மீட்கப்பட்டது. குளிக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    அவரது உடலை பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சத்தியமங்கலம் அருகே கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தாளவாடி:

    பெரிய வெங்காயம் விலையேற்றத்தையொட்டியும் பெரிய வெங்காயத்தின் தட்டுப்பாட்டை போக்கவும் பக்கத்து மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு ஒரு லாரியில் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது.

    இந்த லாரி இன்று (செவ்வாய்கிழமை) காலை 6.45 மணிக்கு சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலை பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் வந்தகொண்டிருந்தது.

    அப்போது வளைவில் திரும்பிய போது ரோட்டோரம் உள்ள ஒரு பாறையில் லாரி மோதி பழுதாகி ரோட்டை அடைத்தப்படி நின்றது.

    இந்த விபத்தில் லாரியில் இருந்த பெரிய வெங்காய மூட்டைகள் சிதறி ரோட்டில் விழுந்தது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இருபுறமும் வாகனங்கள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் மற்றும் வேன்களில் சென்ற பயணிகள் மலைப்பாதையில் பல மணி நேரம் தவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு ஆசனூர் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திம்பம் மலை பாதையில் இப்படி தினம் தோறும் நடந்து வரும் லாரி விபத்துகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் கலெக்டரை சந்தித்து போதிய ஆசிரியர்கள் இல்லை என மனு கொடுத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    நாங்கள் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறோம் இங்கு 1 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 160 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர்.

    எங்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே பயிற்று வருகின்றனர். போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

    இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது எனவே எங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    கோபி அருகே இன்று மதியம் அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர வரதராஜன் (வயது 27). இவர் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார்.

    இவர் இன்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சித்தோட்டுக்கு சென்றார். மதியம் 12.40 மணி அளவில் கோபி கரட்டடிபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபபட்டது. இதுகுறித்துகோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான போலீஸ்கார் வரதராஜன் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
    ×