search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணையின் 9 மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    பவானிசாகர் அணையின் 9 மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள காட்சி.

    பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

    பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை ஆசியாவின் 2-வது மிகப்பெரிய மண்ணால் உருவான அணை ஆகும். இதேபோல் தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் உள்ளது.

    ஈரோடு-திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை அணை தொட்டு 3 நாட்கள் ஆகிறது.

    13 ஆண்டுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணையிலிருந்து தற்போது உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது.

    மழை

    இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததையொட்டி இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7954 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் திறந்து விடப்பட்ட தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்து ஆர்ப்பரித்து கொட்டியபடி பவானி ஆற்றில் செல்கிறது.

    இதனால் சத்தியமங்கலம் நஞ்சை புளியம்பட்டி, பவானி உள்பட பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம். அணைக்கு கூடுதலாக தண்ணீர் வந்தால் மேலும் வெள்ளம் ஏற்படும் எனவே கரையோர பகுதி மக்கள் மிகுந்த கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×