search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேம்பத்தி ஏரியில் தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
    X
    வேம்பத்தி ஏரியில் தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

    அந்தியூர் அருகே இன்று வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் விட கோரி விவசாயிகள் சாலை மறியல்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இன்று வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் விட கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இப்படி வெளியேறி செல்லும் தண்ணீர் கெட்டி சமுத்திரம் ஏரி அந்தியூர் பெரிய ஏரியை அடைந்து சந்திப்பாளையம் ஏரிக்கு சென்று பிறகு வேம்பத்தி ஏரியை அடையும். ஆனால் வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் வரவில்லை சந்திப்பாளையம் ஏரி பகுதியில் உள்ள வாய்க்காலை அடைந்திருப்பதால் வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர் வேம்பத்தி ஏரிக்கு வரவில்லை.

    இதனால் வேம்பத்தி பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததோடு வேதனை அடைந்தனர். இது தொடர்பாக நேற்று மாலை வேம்பத்தி சுற்றுவட்டார விவசாயிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் வேம்பத்தி ஏரிக்கு தண்ணீர் விடக்கோரி கவன ஈர்ப்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அந்த ஆலோசனைப்படி இன்று காலை அந்தியூர்- ஆப்பக்கூடல் இடையே அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் விவசாயிகள் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து தடைபட்டது சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் விரைந்தனர்.

    அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உங்களது கோரிக்கை பற்றி தாசில்தாரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    அதன்பேரில் சமாதானம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

    Next Story
    ×