என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியது.
    • தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் மற்றும் கள்ளிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடிரென காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு தென்னை மரம் உள்ளது.

    அந்த மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    தற்போது மழை காலம் என்பதால் இதுபோன்று நிகழ்வால் ஏதேனும் ஆபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகளுக்கு இடை யில் செல்லும் மின் கம்பி களை முறையாக பராமரிப்பு செய்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
    • ஆட்களை ஏற்றி வந்த 9 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் உத்தரவின் பேரிலும், துணை போக்குவரத்து ஆணையர் வழிகாட்டுதலின் பேரில் சரக்கு வாகனங்களில் ஆட்க ளை ஏற்றி செல்வதை தடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கட் ரமணி (ஈரோடு கிழக்கு), பதிவைநாதன் (ஈரோடு மேற்கு), சக்திவேல் (பெரு ந்துறை) ஆகியோர் தலைமை யில் அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    அதிக பாரம் ஏற்றி வந்ததாக 9 வாகனங்கள், வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக 7 வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத 7 வாகனங்கள், காப்பு சான்று இல்லாத 15 வாகனங்கள் உட்பட போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 99 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 3 ஆயிரத்து 150 அப ராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆட்களை ஏற்றி வந்த 9 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இதுபோன்று சோதனைகள் நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
    • கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

    முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

    அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

    பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

    பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • 3 இடங்களில் புதியதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.
    • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையத்தை மூடி விட்டா ர்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை தாசில்தார் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகிய 3 இடங்களில் புதியதாக ஆதார் அட்டை விண்ண ப்பிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.

    இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையத்தை மூடி விட்டா ர்கள்.

    தற்போது பெருந்துறை யில் 2 இடங்களில் அதாவது பெருந்துறை தாசில்தார் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலு வலகம் ஆகிய இடங்களில் மட்டுமே புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ண ப்பிக்கும் மையங்கள் செயல்படு கிறது.

    பெருந்து றை பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் மற்றும் புலன் பெயர்ந்த தொழிலா ளர்கள் ஆதார் அட்டைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விண்ண ப்பித்து வருகின்றனர்.

    வயதான வர்களின் கைரேகை சரியாக விழுவ தில்லை. அதனால் ஆதார் மையத்தை அனுகி கை ரேகை பதிவாகவில்லை என்று சான்றிதழ் பெறுவ தற்கு அனுகி வருகின்றனர்.

    இதனால் ஆதார் மையத்தில் எப்போது கூட்டம் அதிகமாக காணப்ப டுகிறது. வயதானவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது.

    சிலர் பேர் வரிசையில் நின்று நேரம் முடிந்து விட்டால் திரும்பி சென்று மறுமுறை வரவே ண்டியுள்ளது. தொழிலாளர்கள் விடுமுறை போட்டு விட்டு வந்து காத்து இருந்தா லும் சில சமயம் வந்த வேலை முடிவதில்லை.

    இவைகளை கவனத்தில் கொண்டு அரசு பெருந்துறை யில் கூடுதலாக ஒன்றோ அல்லது 2 ஆதார் அட்டை க்கும் விண்ண ப்பிக்கும் மையத்தை திறக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    • பொன்னுச்சாமி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு அடுத்த ஸ்ரீரங்கம் பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சித்தன் மகன் பொன்னு ச்சாமி. இவரது மனைவி சாந்தி. பொன்னுச்சாமி நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் பொன்னுச்சாமி அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன வேதனை அடைந்த அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னுச்சாமி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி அர ச்சலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோணவாய்க்கால் பகுதியில் கிட்டுசாமி தனது போர்வெல் லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
    • லாரி திருடப்பட்ட 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஜம்பை அடுத்த சின்னியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டுசாமி (52). போர்வெல் லாரியை சொந்தமாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு போர் போடும் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கிட்டுசாமியிடம் அறிமுக மாகி தனக்கு வேலை வேண்டுமென அவரிடம் கேட்டு வேலையில் சேர்ந்து ள்ளார்.

    ரமேஷ் தன்னிடம் செல்போன் இல்லை என்றும், காங்கேயம் பகு தியை சேர்ந்தவர் மட்டும் என்றும் கூறி வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 10 நாட்களாக வேலையும் பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று கோணவாய்க்கால் என்ற பகுதியில் கிட்டுசாமி தனது போர்வெல் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த ரமேஷ் போர்வெல் லாரியை நைசாக திருடி சென்று ள்ளார்.

    லாரி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிட்டுசாமி இதுகுறித்து விசாரித்த போது ரமேஷ் லாரியை திருடியது தெரிய வந்தது. திருட்டு போன லாரியின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

    இது குறித்து கிட்டுசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தினர்.

    அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது ரமேஷ் லாரியை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை அமைத்து லாரியை தேடி வந்தனர். லாரியில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ். கருவியை பார்த்தபோது அது கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

    உடனடியாக தணிக்கை குழு போலீசார் கரூர் சென்று லாரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து லாரியை மீட்டனர்.

    போலீஸ் வரும்போது லாரி தவிர வேறு யாரும் அங்கு இல்லை. ரமேஷ் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் லாரியை மீட்டு சித்தோடு போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு வந்தனர். லாரி திருடப்பட்ட 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    • கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
    • 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

    இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ், டார ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்ய ப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 20) டார ராம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 275 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் புளிய ம்பட்டி-சக்தி ரோடு பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் நஞ்சப்பன் என்ற முருகேசன் (37) என்பவரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார்.
    • இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது திடீரென பஸ்சில் டமால் என்று ஒரு சத்தம் கேட்டு பஸ் பின்னோக்கி சென்றுள்ளது.

    டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் பெரு அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.

    பஸ்சில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள் அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் மற்றும் மாற்று பஸ்சில் தாளவாடி மற்றும் மைசூர் சென்றனர்.

    இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கந்தசாமிபாளையம் நெடுங்காட்டு தோட்டம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (85). இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்கள் அந்த பகு தியில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் சுப்பிரமணியும், கண்ணம்மாளும் இருந்தனர். அப்போது முக மூடி அணிந்த ஆசாமிகள் 3 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே புகுந்தனர்.

    இதையடுத்து அவர்களி டம் முகமூடி ஆசாமிகள் நகை, பணத்தை தருமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முகமூடி ஆசாமிகள் கணவன், மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் செய்வது அறியாமல் கண்ணம்மாள் தனது கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தாலிசங்கிலியை கழற்றி கொடுத்தார்.

    பின்னர் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தையும் எடுத்து கொடுத்தார். இதையடுத்து கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்க ளுடைய மகன் ஆனந்தன் ஆகியோர் அங்கு சென்று கதவை திறந்து பெற் றோரை மீட்டார்.

    இது குறித்து ஆனந்தன் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் சாமிநாதபுரம் பஸ் நிறுத் தத்தில் சந்தேகத்துக்கிடமான 3 மர்ம நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சுப் பிரமணியின் தோட்டத்து வீட்டை நோக்கி சென்றதும், அதே நபர்கள் இரவு 9 மணி அளவில் அதே பஸ் நிறுத்தம் 2 சென்று பஸ்சில் ஏறி சென்ற தும் தெரியவந்தது.

    எனவே அவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என்று கூறப்படுகிறது. தகவல் கிடைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாவையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா க்களையும் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு டாஸ்மாக் கடை, மூல வாய்க்கால் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவந்தி கண்ணன் மகன் ராஜமாணிக்கம் (வயது 44),

    சிவகங்கை மாவட்டம் மருதவாயில் பகுதியைச் சேர்ந்த காசி மகன் கோபால் (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசித்து வருகிறது. இந்த பகுதியில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கம்.

    இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் பர்கூர் வனப்பகுதி கோவில் நத்தம் 2-வது பீட்டுக்கு உட்பட்ட செங்குளம் வனப்பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பர்கூர் தேவர்மலை கால்நடை மருத்துவர்கள் பரத் மற்றும் சதாசிவம் ஆகியோரும் யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக வனப்பகுதிக்கு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்று இறந்த கிடந்த யானை பிரேத பரிசோதனை செய்யபடுகிறது. அதன் பிறகு தான் அந்த யானை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×