என் மலர்
ஈரோடு
- கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது
- கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும்
பெருந்துறை
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது.
இப்பேரணி கோபி அருகே உள்ள குருமந்தூரில் இருந்து புறப்பட்டு இறுதி யாக சென்னிமலையில் நிறைவடைந்தது. இப்பேர ணிக்கு பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், பெத்தா ம்பாளையம் ரோடு பிரிவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
நம்பியூர் அடுத்த குரும ந்தூர் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் 34 கசிவு நீர் திட்ட பாசன விவ சாயிகளை பாதுகாக்க கோரியும், கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்த க்கோரியும், கால்வாயில் உள்ள பழைய கட்டுமான ங்களை உள்ளது உள்ளபடி சீரமைக்க வேண்டும்.
கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாது காப்பு இயக்கம் சார்பில் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பகுதியில் கான்கிரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகன பேரணி நடந்தது. பேரணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த பேரணி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் இருந்து தொடங்கி கவுந்தப்பாடி, கோபி ச்செட்டிப்பாளையம், ஒத்த க்குதிரை வழியாக வந்து சென்னிமலையில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்
நம்பியூர்
ஈரோடு மாவட்டம் கோபி கிளைக்கு உட்பட்ட அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து 9 பயணிகளுடன் கோபி நோ க்கி வந்து கொண்டி ருந்தது. பஸ்சை செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.
பஸ் கெட்டி செவியூர் சுள்ளிக்கரடு பிரிவு பள்ளிக்கூடம் அருகில் வந்துகொ ண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த நடத்துனர் பரிஸ் பாட்ஷா என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த அருகிலுள்ள திருப்பூர் மாவட்ட குன்ன த்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாகன சோதனை சாவடி யில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்த வரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து நம்பியூர் காவல் நிலையத்தி ற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நம்பியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்.
- ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை
- இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 80.89 அடியாக உயர்ந்துள்ளது
ஈரோடு
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பலத்த மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக பவா னிசாகர் அணையின் நீர்ம ட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 80.89 அடியாக உயர்ந்துள்ளது. இன்று மதிய த்திற்குள் 81 அடியை எட்டி விடும். அணைக்கு வினாடி க்கு 3 ஆயிரத்து 56 கன அடி யாக நீர் வந்து கொண்டி ருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து பாசன த்திற்கு தண்ணீர் மீண்டும் நிறுத்த ப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வருவ தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகி றது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 4.72 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.86 அடியாகவும் உள்ளது.
- சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது
- அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்
ஈரோடு
அரசால் தடை செய்ய ப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுப ட்டிருந்தனர்.
அப்போது சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்ற போது, அவர்களைக் கண்ட தும் தப்பியோட முயன்ற ஒரு நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் பீகார் மாநி லம், பால்தியா மாவட்டம், கோதை பாஹ் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் மன்சூரி (வயது 21) என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனை யில், அவர் 150 கிராம் கஞ்சா வைத்திரு ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்.
- சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது
- சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கொண்டு வன் ரெட்டியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). இவரது மனைவி சம்பூரணம். அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சின்னத்திரை மிகவும் கஷ்ட ப்பட்டு வந்துள்ளார். இத ற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சம்பவத்தன்று சின்ன துரை மற்றும் அவரது மனைவி, மகன் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தனர். பின்னர் சின்னதுரை மட்டும் வீட்டு க்கு வந்தார்.
அன்று இரவு தனது மனைவிக்கு போன் செய்த சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகன் மற்றும் உறவினருடன் சென்று சின்னதுரையை மீட்டு சிகி ச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் அனும தித்தனர்.
அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்த தால் பின்னர் மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழை த்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் சின்னதுரை வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
- குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:
தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வபோது ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெருந்துறையில் கல்லூரி பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.99 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,695 மூட்டைகளில் 1,24,000 கிலோ கொப்பரையை விற்பனை க்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக கிலோ ரூ. 78.89 -க்கும், அதிகப ட்சமாக, ரூ.89.59 -க்கும் விற்பனை யா னது. 2-ம் தரக் கொப்ப ரை குறை ந்தப ட்சமாக ரூ.15.21 -க்கும், அதிகபட்ச மாக ரூ. 83.99-க்கும் விற்பனை யா னது.
மொத்தம் ரூ. 99 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
- பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.
100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
- சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை, பிரிட்டோ காலனி யை சேர்ந்தவர் ஜீவா (35). இவர் குள்ளங்காட்டில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி தனபாக்கியம் (29). கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜீவாவின் அண்ணனும், அதைத்தொடர்ந்து அவரது பாட்டியும் இறந்துவிட்டனர்.
இதனால் கடுமையான மன அழுத்தத்துக்குள்ளான ஜீவா தொடர்ச்சியாக மது அருந்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜீவா தொடர்ந்து, மது அருந்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை தனபாக்கியம் அருகில் வசித்து வரும் தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அதிக மது போதையில் ஜீவா அங்கு வந்துள்ளார்.
அப்போது மது அருந்து வது குறித்து தனபாக்கியம், கணவர் ஜீவாவை கண்டித்து ள்ளார். இதையடுத்து இருவரும் அங்கேயே படுத்து தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அதிகாலை தனபாக்கியத்தின் தாயார் கண் விழித்துப் பார்த்தபோது ஜீவா அங்கு இல்லை.
இதையடுத்து அருகில் உள்ள தங்களது வீட்டுக்கு தனபாக்கியமும், அவரது தாயாரும் சென்று பார்த்து ள்ளனர். அப்போது வீட்டின் அறையில் பேன் மாட்டும் கொக்கியில் ஜீவா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
உடனடியாக உறவினர்களின் உதவியுடன் ஜீவாவை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஜீவா இறந்து விட்ட தாக தெரிவித்தார்.
இது குறி த்து சத்தியமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது.
- இதனால் சில இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை சிப்காட்டில் இருந்த பெருந்துறை நகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலை யில் சிப்காட் நுழைவாயில் எதிரில் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது.
இதில் மழை பெய்யும் போது மழை நீர் தேங்கியும் வருகிறது.
இதனால் இந்த சாலையில் செல்லும் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் ஓவர் டேக் எடுக்கும்போது, பக்கவாட்டில் செல்லும் இருசக்கர வாகனங்கள், தங்கள் மீது மோதாமல் இருந்த அந்த பள்ளத்தில் இறங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் சில இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் வி ரைவாக நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் உள்ள பள்ள த்தை மூட வேண்டும் என்பது இருசக்கர வாகன ஓட்டிகள் வேண்டுக்கோளாக உள்ளது.
- ரசூல் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோடு சிறுக்களஞ்சி அருகில் ரோட்டில் பாதை கருப்ப ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சில மாதத்தி ற்கு முன்பு நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுப் போனது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் மொய்தீன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னை புழல் பகுதியில் தங்கி இருந்ததாகவும், இவர் மீதுள்ள பழைய வழக்கு சம்பந்தமாக கோவைக்கு வந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்துள்ளார்.
இவர் சென்னிமலை அடுத்துள்ள சிறுக்களஞ்சி கோவிலில் பணம் ரூ.20 ஆயிரத்தை உண்டியலை உடைத்து திருடி சென்றதா கவும், இவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர் .
மேலும் இவரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னி மலை அடுத்துள்ள முகாசி ப்பிடாரியூர் பகுதியில் கஸ்தூரி என்பவரது வீட்டில் நான்கு பவுன் தங்க நகை திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த திருட்டு வழக்கில் மேட்டூரை சேர்ந்த கனகராஜ் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் இந்த வீட்டில் 4 பவுன் தங்க நகையை திருடி சென்றது போலீசாரின் விசார ணையில் கண்டறியப்பட்டது.
அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. இவரை போலீசார் கைது செய்து பெருந்துறை கோ ர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கருங்கல்பாளையம், அந்தியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஈரோடு-பவானி மெயின் ரோடு, அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்ய ப்பட்ட போதை பொரு ட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவ ட்டம் எடப்பாடி மூலப்பா றைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் (வயது 30), அந்தியூர் நகலூர் ரங்கசாமி மகன் முத்து (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதை பொரு ள்களை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைப்போல் ஈரோடு வீரபத்திர தெரு, குட்டப்பா ளையம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு வீரப்பன்சத்திரத்தை ேசர்ந்த சின்னக்கண்ணு மகன் கனகராஜ் (52), சென்னிமலை குட்டப்பா ளையம் துரைசாமி மனைவி துளசி மணி (63) ஆகியோர் மீது ஈரோடு வடக்கு, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






